Friday, May 20, 2011

என்னமோ ஏதோ? ! ! !


கலிபோர்னியாவில இன்னைக்கு காலைலேர்ந்து ரெண்டு தடவை நிலநடுக்கம் வந்துருந்தது, ரெண்டு நாளுக்கு முன்னாடி வந்த சுனாமி மாதிரி இது இல்ல ஆனாலும் கொஞ்சம் சேதம் அதிகம் தான்.

     அங்க கடந்த ரெண்டு வருஷமா இருக்கிற ஆராவுக்கு, இருபத்தி இரண்டு வயசு தான் ஆகுது. தினமும் அவங்க அம்மா முகத்தில முழிச்சு ஆசிர்வாதம் வாங்கிட்டு தான் அவ வேலைக்கு கிளம்புவா, இன்னைக்கு அவ காலையிலேயே யு .கே. கிளம்பிட்டிருக்கா ,அதுக்காக யேர்லி மார்னிங் 9 'o கிளாக்லாம் எந்திரிச்சு ஆபீஸ் வேலையெல்லாம் வீட்லேர்ந்தே முடிச்சிட்டு, அம்மா எப்ப ஸ்கைப்ல வருவாங்கன்னு அவ மொபைல் ஸ்க்ரீனையே வெறிச்சு பார்த்துக்கிட்டிருக்கா...!

அப்ப "ஹாய்"னு ஒரு மெசேஜ் ஆரா அம்மாகிட்டேர்ந்து அவ மொபைல்க்கு வருது,

       உடனே உற்சாகமாகுற ஆரா! அவ வீட்ட விட்டு வெளியில கிளம்பிட்டா, அவ இருக்கிறது அந்த அப்பார்ட்மென்ட்ஸோட நூறாவது மாடியில, வாசலிலேயே ஏர் பளை சர்வீஸ் இருக்கு. தரை வழிக்கும் வான்வெளிக்கும் நடுவில ஒரு நூற்றி ஐம்பது அடி உயரத்தில உருவாகிருக்கிற இது தான் இப்ப வேர்ல்ட்டோட லேட்டஸ்ட் டிரன்ஸ்போர்ட். டிராபிக் ஜாம் ரொம்ப கம்மி ஆக்சிடன்ட்சும் தான். "பின்ன யாரும் ரோடு போட்டேன், பாலம் கட்டினேன்னு ஊழல் பண்ண முடியாதில்ல..."

அப்ப ஆரா அம்மா கேட்கிறாங்க "வென் வில் யு கம் டா?"

அதுக்கு ஆரா சொல்றா "அம்மா இப்ப நா லண்டன் போய்கிட்டிருக்கேன் நைட் டின்னருக்கு இந்தியா வந்துருவேன். நாளைக்கு மார்னிங் சைனால ஒரு சின்ன போர்ட் மீட்டிங் இருக்கு மா ." ஐயாம் வெரி  பிசி ங்கிறா   

"ஓகே... டீல் முடிஞ்சுதா? " ஆரா அம்மா கேட்கிறாங்க

   அதுக்கு ஆரா "எஸ். மா ஒன் லிட்டர் 50,000 தௌசன்ட் யுரோக்கு  அக்கிரிமென்ட் சைன் பண்ணியிருக்கோம், இனிமே டோட்டல் யுரோப்க்கும் நாம தான் ட்ரின்கிங் வாட்டர் சப்ளை, ஐ காட் இட் மம்மி" னு சொல்றா.

     அதுக்கு ஆரா அம்மா "ஷோ நைஸ் டா! தென் இங்க ஆக்ஸிஜென் சிலிண்டர்ஸ் காலி ஆயிடுச்சு நெக்ஸ்ட் டெலிவரி இவ்நிங் சிக்ஸ் தேர்டினு மெயில் வந்தருக்கு. அதான் வெய்டிங்.

    ஆரா சொல்றா "டோன்ட் வொர்ரி மா அதெல்லாம் கரெக்டா வந்தரும். நா உனக்காக ஒரு ஐபோன் 75s  வாங்கியிருக்கேன், அப்புறம் ஏர்போர்ட் வெளியில ஒரு ஷாப்பிங் மால் பார்த்தேன். அங்க எதோ 'ஸேரியாம்' நம்ம அன்சிஸ்டர்ஸ் யூஸ் பண்ணின காஸ்டியுமாம்.செமையா சேல்ஸ் ஆகிட்டுருந்துச்சு. அதான் உனக்கும் எனக்கும் ரெண்டு செட் ஸேரி வாங்கினேன்.யுசிங் மேனுவல்லாம் கொடுத்துருக்காங்க. டூ வீக்ஸ் ப்ரீ ட்ரைனிங் கோர்ஸும் இருக்கு. நீ வேணா முதல்ல ட்ரை பண்ணி பாரேன்"

   அவங்க அம்மா சொல்றாங்க தேங்க்ஸ் டியர் "ஐ லவ் யு டா ஆரா"

தென் மா 2 'O கிளாக்கெல்லாம் நா லண்டன் ரீச் ஆயிட்டேன். நைட் 7 .30 திருச்சி வந்துருவேன் "ஸோ நைட் டின்னருக்கு நான் வெஜ் டேப்லட்ஸ்
ரெடி பண்ணிவச்சுருமானு சொல்றா ஆரா "


      ஓ.கே ஷ்யூர் னு! சொல்ற ஆரா அம்மாவுக்கு எதோ ஞாபகம் வர , " அப்புறம் ரொம்ப நாளா உனக்கு ஒரு குழந்தை வேணும்னு சொல்லி அந்த ஜெர்மன் கம்பெனில புக் பண்ணி வச்சுரிந்தியே , அங்க இருந்து குழந்தையோட கேரெக்டர் டிசைன் மாடல்ஸ் எல்லாம் மெயில் பண்ணிருக்காங்க ஆபர் முடிய போகுது இன்னிக்கு தான் லாஸ்ட் டேட் வாங்கிருவேல".அப்படினாங்க ஆரா அம்மா.

அதுக்கு ஆரா " மை காட்  டோடல்லி பர்கெட் தட் மம்மி இஸ் இட் !ஆமா ...இன்னிக்கு மே22- 2111  ஒ.கே மா ரிமைன்ட் பண்ணினதுக்கு தேங்க்ஸ் மா உனக்கு நல்ல பேரப்பிள்ளையா பர்ச்சேஸ் பண்ணிட்டு வரேன்" பாய் டேக் கேர் மா:!!!!!!!! "



அவங்க  ஒரு ஸ்மைலி ரிப்ளை பண்ணினாங்க அதுக்குள்ள..... ஒரு மெஸ்சேஜ் "ஆரா இஸ் ஆப்லைன் "


இப்படிக்கு
திருநெல்வேலியிலுருந்து மு.வெங்கட்ராமன்..
காலம்-ஏப்ரல்  நாலாவது வாரம் -2011