Thursday, December 30, 2010

விழாக்களும் சில விளக்கங்களும் -2



விழா -8வது சென்னை சர்வதேச திரைப்பட விழா.
நாள்:-டிசம்பர்15-டிசம்பர் 23 2010 .
கலந்து கொண்ட நாடுகள்:-45 .
திரையிடப்பட்ட படங்கள் :-சர்வதேச படங்கள்:-125
இந்திய படங்கள் :-14
தமிழ் படங்கள் -12
விழாவின் சிறப்பு :-அருமையான திரைப்படங்கள்.(ஆனால் வழக்கம் போல் ஹௌஸ் புல் ஆகாத காட்சிகள்)



வெற்றி பெற்ற தமிழ் படங்கள்:-

1. Best film in tamil competition- 'Angadi Theru".
2. Second Best film- 'Kalavani'
3. Best Director- 'Prabhu Solomon' for Mynaa
4. Special Jury Award for individual excellence - 'Parthiban' for Ayirathil Oruvan.
5. 'Orr Iravu' took the special award for independent films with a cash prize.
6. The online Film buff Award went to Dr.Varun Kumar of Velachery .




"விழாக்கள் என்றாலே இனிப்புகளும்,பட்டாசுகளும் நினைவில் வருவது இறந்த காலம் விழாக்கள் வந்தாலே திரைப்படங்கள் மட்டுமே நினைவில் வருவது இந்த காலம்"
திரைப்படங்கள் தான் இந்திய பண்டிகைகளின் உச்சகட்ட கொண்டாட்டமாக இருக்கிறது.உலகில் அநேக மக்கள் விரும்பும் ஒரு எது என்றால்,அது திரைப்படத்துறை என்று தைரியமாய் சொல்லலாம்.ஆனால் அப்படிப்பட்ட திரைப்படங்கள் ஒரு வியாபார பொருளாக மட்டும் பார்க்கப்படும் மனோபாவம் அதிகரித்து வரும் இன்றைய இயந்திர சுழலில் அதன் உருவாக்கத்தின் நோக்கத்தை நோக்கி மெல்ல அடியெடுத்து வைக்கும் முயற்சி தான் திரைப்பட விழாக்கள்.

இந்த சென்னை சர்வேதச திரைப்பட விழாவை பற்றி பலமுறை கேள்விபட்டிருக்கிறேன்.ஆனால் கலந்துகொள்ள இந்த வருடம் தான் வாயப்பு கிடைத்தது. இந்தியாவின் சில குறிப்பிட்ட நகரங்களில்,சில குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே நடைபெறும் இது போன்ற திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ள எல்லாராலும் முடிவதில்லை.அவரவர் நகரத்தில் நடக்கும் விழாக்களிலாவது கலந்துகொள்ளலாம்.அதற்கு அரசு உதவி செய்கிறது. விளம்பரங்கள்,ஊடகங்கள் இப்படி இன்னும் எத்தனையோ இருந்தும் கூட, விழா முடிந்த ஒரு சில நாள் கழித்து என் சென்னை நண்பன் (பிறந்ததிலிருந்தே சென்னையில் தான் இருக்கிறான்) ஒருவனிடம் பேசி கொண்டிருந்தேன்.அவனுக்கு இப்படி ஒரு விழா நடக்கிறது என்ற தகவலே சரிவர தெரியவில்லை இத்தனைக்கும் அவன் சினிமா பற்றி ஆர்வம் அதிகம் உள்ளவன் அதில் வரைகலை துறையில் பணிபுரிந்து கொண்டிருப்பவன்.எனக்கு அதிர்ச்சி அப்பொழுது தான் எனக்கு நான் இணையத்தில் படித்த ஒரு வெளிநாட்டு மனோதத்துவ நிபுணர்களின் ஆய்வு பற்றி செய்தி நினைவில் வந்தது.நம் உலகம் சுருங்கிவிட்டது ஒரு நொடியில் எங்கிருந்தும் எந்த தகவலையும் தெரிந்து கொள்ளலாம்.பரிமாறி கொள்ளலாம் ஆனால் வழக்கத்தைவிட தற்பொழுது மக்களிடம் எதையும் முழுமையாய் படிக்கும் ஆர்வமும்,கவனிக்கும் உற்று நோக்கும் திறன்கள் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.ஆழ்ந்து படிப்பதும் இல்லை. முழுமையாய் புரிந்து கொள்ளவும் இல்லை அதன் விளைவாக அனேகபேர் படிப்பதிலோ, கேட்பதிலோ,மேலோட்டமான நிலையிலேயே உள்ளனர் என்கிறது அந்த ஆய்வு முடிவு.


சரி விசயத்துக்கு வருகிறேன் இந்த வருடம் மொத்தம் ஐந்து திரையரங்குகள் 9 நாட்கள் விழா நடந்தாலும் எல்லா நாட்களும் பார்க்க எனக்கு கொடுத்து வைக்கவில்லை ஆனாலும் நான் பார்த்த சில படங்ககளின் ஒரு வரி சுருக்கத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...


முதல் படம்:- "SOUL KITCHEN " 2009
germany film director-fathih akin.





ஜெர்மனியில் "Soul Kitchen " என்கிற பெயரில் ஒருவர் உணவகம் நடத்தி வருகிறார் அவர் தன் காதலியோடு வாழ சீனா செல்ல வேண்டியிருப்பதால் தன் அண்ணனுக்கு தன்னுடைய உணவகத்தை நடத்தும் உரிமையை மாற்றிகொடுத்து சீனா செல்ல தயாராகிறார்.இந்த நேரத்தில் அவருடைய அண்ணன் அந்த உணவகத்தை கதாநாயகனின் நண்பன் ஒருவனிடம் சூதாட்டத்தில் ஏமாற்றப்பட்டு இழந்து தவிக்கிறார்.இதற்கிடையில் காதலியை சந்திக்க போன கதாநாயகன் அவளை எதேச்சையாக ஜெர்மன் விமான நிலையத்தில் வேறு ஒரு ஆணுடன் சந்திக்க அதிர்ச்சியாகிறார்.பின் தன் இருப்பிடத்துக்கு திரும்பி உணவகம் வந்தால் அங்கே அவர் அண்ணன் அந்த உணவகத்தை தன் நண்பனிடமே சூதாட்டத்தில் இழந்ததை அறிந்து அதிர்கிறார்.பின்னர் அவர் இழந்த உணவகத்தை மீண்டும் பெற்றாரா? பிரிந்த காதலியுடன் சேர்ந்தாரா? அறிந்துகொள்ள
சுவாரசியாமான நகைச்சுவை படம் 2009 இல் வெளிவந்த "Soul Kitchen " திரைப்படத்தை பாருங்கள்.ஜெர்மனியின் உணவு பழக்கம் தொடங்கி அவர்களின் வாழ்க்கைமுறை, தற்போதைய கலாச்சாரம்,அனைத்தையும் கதைக்கு இடைஞ்சல் இல்லாமல் நமக்கு உணர்த்துகிறார்கள்.அன்றைய துவக்கவிழா படமாக திரையிடப்பட்ட இந்த படம் அனைத்து ரசிகர்களுக்குமிடையே நல்ல வரவேற்பும் பெற்றது.
(கொசுறு தகவல் :-நம்ம வெள்ளித்திரையில் இந்த படம் விரைவில் வெளிவரயிருக்கிறது )

இரண்டாவது நான் பார்த்த படம் "AS YOU ARE "2010
நாடு:-ஹங்கேரி



ஒரு நகரத்தின் மேயர் மிக நேர்மையானவராய் இருக்கிறார்.அந்த நகரத்து உட்கட்டமைப்பு பணிகளுக்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதியில் நடக்கும் ஊழலில் இருந்து தப்பிக்க நினைக்கும் இருவர்.சாமர்த்தியாமாக செய்யும் செய்கைகளால் அந்த நகர மேயர் எப்படி பாதிக்கபடுகிறார்.என்பதை இயல்பான வேகத்தில் ரியலிசம் முறையில் சுவாரசியம் குறையாமால் செய்திருக்கிறார்கள்.படம் பார்க்கும் அனைவரையும் ஹங்கேரியன் ஒரு கிராமத்துக்குள் கொண்டு போயிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். நாடும்,மொழியும்,கலாச்சாரமும்,வேறுபடலாம் ஆனால் அடிப்படையில் மனித இயல்புகள்,அவர்கள் செய்யும் தவறுகள் உலகம் முழுவதும் பொதுவாகவே இருக்கின்றன என்ற கருத்தை இந்த படம் நமக்கு உணர்த்துவது சிறப்பம்சம்.மேயர் என்பவர் எதோ அரசியல் கட்சிக்காரர் என்ற அளவில் தான் நமக்கு இதுவரை காட்டப்பட்டு வந்தது.ஆனால் இந்த படத்தில் தான் அவரின் தனிப்பட்ட குணாதிசியங்கள் அவர் வீட்டிற்க்குள்ளேயே ஒரு குட்டி விமானம் செய்வது போன்ற காட்சிகள் என்பது போன்ற விஷயங்கள் அழகாக
காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. திரைப்படங்களுக்கான கதை எங்கோ "ஏழு மழைக்கு அப்பால் உள்ள கடலில் புதைத்து வைத்து பூதம் பாதுகாக்கவில்லை நம்மோடு நம் அன்றாடத்தில் தான் புதைந்து கிடக்கிறது" என்ற உண்மையையை இது போன்ற படங்கள் நமக்கு மிகத்தெளிவாக உணர்த்துகிறது.

முன்றாவது படம் :-"THE BLUE BUTTERFLY"
நாடு-கனடா.



இந்த படம் ஒரு உண்மை சம்பவம் ஒரு சிறுவனுக்கு மூளை கட்டி நோய் அவன் சில காலத்தில் இறந்து விடுவான் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். வழக்கமான படம் போல் ஒரு பரிதாப உணர்வை ஏற்படுத்தும் கதையில்லை.இதில்
அந்த சிறுவனுக்கு தான் புத்தகத்தில் படித்த நீல நிற வண்ணத்துப்பூச்சியை
பார்க்க வேண்டும் என்கிற ஆசை அதற்காக அவன் ஒரு அம்மா மற்றும் ஒரு உறவினரோடு
ஒரு மலைவாழ் மக்கள் வாழும் பகுதிக்கு சென்று அங்கே தன் உடன் வந்திருக்கும் ஒரு நடுத்தரவயது உறவினருடன் அடர்ந்த காட்டுக்குள் செய்யும் ஒரு பயணம் அதில் பல வகையான அனுபவங்களை அடைகிறார்கள் காடு, மழை,அருவிகள் ஒவ்வொன்றாய் தேடி தேடி அலைந்து ரசிப்பது அனுபவிப்பது போன்றவற்றை பார்க்கும் பொழுது எனக்கு நகர ஆசை உலகம் முழுவதும் நாகரிக மனிதர்களை எப்படி இயற்கையை விட்டு விலக்கி வைத்திருக்கிறது என்பதை உணர முடிகிறது.அதில் ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் ஒரு பள்ளத்தில் தவறி விழ,அந்த சிறுவன் மட்டும் தப்பித்து தன் அம்மா இருக்கும் இடத்திற்கு வர முயற்ச்சிப்பதும்,அங்கு வாழும் மழைவாழ் மக்கள் அந்த இருவரையும் பத்திரமாக அந்த காட்டில் இருந்து மீட்பதும் என ஒரு அருமையான வைல்ட் டிராவல் படத்தை தந்திருக்கிறார்கள்.இறுதியில் அந்த சிறுவன் ஆசைப்பட்ட அந்த நீல நிற வண்ணத்துப்பூச்சியையும் அவன் கண்டெடுத்துவிடுகிறான்.ஒட்டுமொத்த பயணத்தின் முடிவில் அவன் சொந்தஊர் திரும்பும் அந்த சிறுவனை சோதிக்கும் மருத்துவர்கள் அவனது மூளைக்கட்டி நோய் முழுவதும் குணமாகிவிட்டது என்று அறிவிக்கிறார்கள்.ஆம் நோய்களுக்கு மருந்து மருத்துவமனைகளின் மருந்துக்கடைகளில் மட்டுமில்லை.அது நம் மனத்திலும் நம் எண்ணங்களிலும் மறைந்து கிடக்கிறது என்கிற உண்மை புரிகிறது.இந்த நேர்மறை எண்ணங்களின் விளைவுகள் நிகழ்த்தும் மாற்றங்கள் எப்பவுமே மேஜிக் தான் என்பது இந்த படத்தில் இருந்து எனக்கு கிடைத்த ஒரு அருமையான அனுபவம்.

நான்காவது படம்:-"PUZZLE"2009
நாடு :-அர்ஜென்டினா



ஒரு படம் என்றால் அதில் ஹீரோ பதினெட்டு வயதில் இருந்து 30 வயது வரை இளமை குறையாமல் தான் இருக்க வேண்டும் அவர்களின் காதல்,கசமுசா,சண்டை,நட்பு,வெற்றி,பழிவாங்குதல் போன்றவை படத்தின் மையக்கருவாக இருக்க வேண்டும்.என்கிற எழுதபடாத விதியெல்லாம் இந்திய எல்லையோடு சரி.இந்த படத்தின் கதாநாயகி இரண்டு இருபது வயது இளைஞர்களின் தாய் முதல் காட்சியே அவளுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தன் கையால் சமையல் செய்து வீட்டு விருந்தினர்களுக்கு பரிமாறுவதில் தொடங்குகிறது.(வெளிநாடுகளில் பெண்கள் குடும்பத்தை கவனிப்பதில்லை குடும்ப உறவுகள் சிதைகின்றன என்கிற மாயை உடைகிறது அங்கும் நன்றாகவே பெண்கள் செயல்படுகிறார்கள் அங்கேயும் பல ஆண்கள் தன் சரிபாதியை தனியாகவே வாழ்கை பாரத்தை சுமக்க வைக்கிறார்கள் என்பது புரிகிறது) அந்த பார்ட்டியில் ஒரு தட்டு உடைந்து விடுகிறது அதன் சின்ன சின்ன துண்டுகளை சேர்த்து கதாநாயகி ஒட்டி பார்க்கும் காட்சியிலேயே அவருடைய கதாபாத்திரம் விளக்கப்பட்டு விடுகிறது.அந்த பார்ட்டி முடிவில் வந்த பரிசு பொருட்களை பிரித்து பார்க்கும் பொழுது அதில் ஒரு படத்தின் துண்டுகளை முழு படமாக இணைத்து பார்க்கும் விளையாட்டு இருக்கிறது.ஒய்வு பெரும் வயதில் அவளுக்கு அந்த விளையாட்டு ஒரு புது உத்வேகத்தை தருகிறது அந்த பரிசு கொடுத்த நபரை தொடர்பு கொண்டு அதன் பெயர் அறிகிறார் அது எங்கே கிடைக்கும் என்ற விவரங்களையும் அறிகிறார் பின் அந்த கடைக்கு போய் அந்த விளையாட்டை வாங்கும் போது் ஒரு சுவரொட்டியையும் பார்க்கிறாள்.அதில் ஒரு முன்னால் படப்புதிர் போட்டிசாம்பியன் தனக்கு உடன் விளையாட ஒரு துணை வேண்டும் என்று அறிவித்திருக்கும் விளம்பரம் பார்க்கிறாள்.அவர் ஒரு 70வயது முதியவர் அவரோடு சந்திப்பு இவர்கள் போட்டிக்கு பயிற்சி செய்வது,பின் வெற்றி பெறுவது அவர்களுக்குள் ஏற்படும் அந்தரங்க உறவு என மனித மனயல்புகளை இயல்பாக காட்சிபடுத்தியிருக்கின்றனர்.இது அனைத்தும் தன் குடும்பத்துக்கு தெரியாமல் நடப்பதால் குடும்பத்தில் நிகழும் சங்கடங்களை அந்த பெண் எதிர்கொள்வது பின் அவள் பிள்ளைகளின் மனநிலை என படம் முழுவதும் கதாபாத்திர வடிவைம்ப்பு அற்புதம்.நாம் கற்றுகொள்வதர்க்கும், சாதனைக்கும், சந்தோசத்துக்கும் வயதில்லை நம் உணர்வுகளுக்கும் நாம் எவ்வளவு மதிப்பளிக்க வேண்டும் என்று புரிகிறது.மொத்தத்தில் ஒரு வித்தியாசமான கதை,நம் அம்மா, அத்தைகள், அக்கா, தங்கை,சித்திகள் என நம் குடும்ப பெண்கள் பலர் எப்படி நம்மால் அடுப்படியிலேயே கரைந்து போய்விட்டார்கள் என்பதை நினைத்து மனமும் கண்களும் கலங்கியது நிஜம்.(முயற்சிக்கிறேன் என் சரிபாதியோடாவது எல்லாவற்றையும் சரியாய் பகிர்ந்துகொள்ள "வாழ்கை சுகங்களை மட்டுமல்ல வேலை சுமைகளையும்" )

ஐந்தாவது படம் :-"T.D.DASAN VI 'B' " 2010
நாடு:-இந்தியா.
மாநிலம்:-கேரளா
மொழி:-மலையாளம்



ஒரு மாநிலத்தின் இரு குடும்பங்கள் வெவ்வேறு ஊர்களில் வசிக்கிறது ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கின்றனர்.அங்கே நடக்கும் திருப்பங்களும் மனதை வருடும் நிஜங்களும் அருமையான திரைக்கதை இந்த படம்.ஒரு குடும்பம் தந்தை இல்லை தாய் மகன் வயதான பாட்டி கிராமத்து ஏழைகள் வசிப்பது கேரளாவில் உள்ள ஒரு சிறிய கிராமம்.இந்த சிறுவனுக்கு நெடுநாட்களுக்கு முன்னால் ஊரிலிருந்து வேலைக்காக வெளியூர் சென்று இன்றும் ஊர் திரும்பாத தந்தையால் ஊரில் கேலி பேச்சுகள் இதனால் அதிகமாக வருந்தி வீட்டின் பழைய பெட்டியில் இருக்கும் தந்தையின் பழைய கடிதத்தை கண்டெடுத்து கடிதம் எழுதுகிறான் கதாநாயக சிறுவன் டி.டி தாசன் அவன் கடிதம் சென்று சேரும் இடம் பழைய முகவரியில் வசிக்கும் புதிய நபர்களிடம் அவர்கள் தொழில் நிமித்தமாக புலம் பெயர்ந்த ஒரு மலையாளி குடும்பம் பெங்களுருவில் வாழ்கிறது தந்தை மகள் தாய் இல்லை மேல்தட்டு வர்க்கத்தினர் அவர் ஒரு விளம்பர இயக்குனர் அந்த இல்லத்தில் இருக்கும் சிறுமி உறவுகளுக்காவும் ஏங்கும் நிலையில் இருக்கிறாள்.அங்கே வரும் கடிதம் அந்த விளம்பர இயக்குனர் பார்த்து கடிதம் மாறி
வந்திருப்பதையும் அந்த கடிதத்தின் சுவாரசியமான சோக கதையை காசாக்க அதை திரைப்படம் ஆக்க முயற்சிக்கிறார்.அவள் மகளோ அந்த சிறுவனின் ஏக்கத்தை உணர்ந்து தன்னை தந்தையாகவே நினைத்து பதில் எழுத தொடங்குகிறாள் விரிகிறது காட்சிகள் இறுதியில் என்ன நடக்கிறது இனிய முடிவு... ஒவ்வொரு ஊரின் காற்றிலும் ஆயிரம் கதைகள் ஒலித்து கொண்டே இருக்கின்றன அதில் ஒரு கதை இது என்ற குரலோடு படம் முடிகிறது இந்த படம். "மனதை உலுக்கும் புலம்பெயர்ந்தவர்களின் சோகங்கள் அது நாடு விட்டு நாடு பறந்தால் என்ன மாநிலம் விட்டு மாநிலம் நகர்ந்தால் என்ன எல்லாம் மறந்து எங்கோ சுகபோகமாய் வாழ்வதும் ஒரு கொடுமை தான்."



ஆறாவது படம்-"THE AQUARIUM"2010
நாடு:-எகிப்து



இது ஒரு நவீன கால கதை வானொலியில் இரவில் வரும் ஒரு நிகழ்ச்சி அதில் அறிவிப்பாளர் மக்களின் மன அந்தரங்க விசயங்களை கேட்பது வழக்கம் அதில் ஒரு மருத்துவர் அந்த அறிவாப்பாளரிடம் பழகும் கதை.அந்த ஊரின் மைய சுற்றுலதலங்களில் ஒன்றான மீன் அருங்காட்சியகத்தின் பின்னணியில் இந்த கதை உருவாகி விரிகிறது.ஒவ்வொரு பிரபலத்துக்குள்ளும் ஒளிந்திருக்கும் ஒரு சராசரி மனிதனை பற்றிய கதை போல் அமைந்திருந்தது "இந்த படம் பிரமிட்களின் நகரமாகவே சித்தரிக்க பட்டு வந்த எகிப்தின் மற்றொரு நாகரிக பக்கத்தை வெளிப்படுத்தும் படமாக அமைகிறது."

ஏழாவது படம்:-Dennis.P
நாடு:-நெதர்லாந்து



இது உண்மையில் நெதர்லாந்து நாட்டில் வாழ்ந்து மறைந்த ஒரு நபரின் சுயசரிதையை அடிப்படையாக வைத்து எடுத்தது.கண்ணதாசன் அவர்களின் வனவாசம் நாமெல்லாம் எப்படி வாழ கூடாது என்பதற்காக ஒரு அடையாளமாக எழுதியதாக சொன்னாரோ அது இந்த கதைக்கும் பொருந்தும் என்று நினைக்கிறன் டென்னிஸ் என்கிற நபர் நகரின் மிகப்பெரிய வைர தயாரிப்பு தொழிற்சாலையில் பணிபுரிகிறார்.அங்கே லாவகமாக நிர்வாகத்தின் கண்ணில் மண்ணை தூவி வைரங்களை எடுத்து சென்று கள்ளசந்தையில் விற்று பணம் சேர்த்து வருகிறார்.இவர் மேல் யாருக்கும் சந்தேகம் இல்லை.கிட்டத்தட்ட 150kilo எடையுள்ள அந்த நபர் 30 வயதிற்கு மேற்பட்டவர் வழுக்கை தலை.பெண் வாசம் அறியாதவர் ஒரு இரவு விடுதிக்கு சென்று ஒரு பெண்ணை புக் செய்கிறார் ஆனால் அவளோடு உறவு கொள்ளாமல் அவளை தனக்கு காதலியாக இருக்க
சொல்கிறான்.அதற்கு இங்கு கொடுப்பதை விட அதிகம் பணம் தருகிறேன் என்கிறான். அவளும் நம்புகிறாள் இருவரும் ஊர் சுற்றுகிறார்கள்.இறுதியில் அவனிடம் இருந்து தற்போதைக்கு அதிக பணம் கிடைத்தாலும் உண்மையில் இவன் பணக்காரன் இல்லை என்கிற சந்தேகம் அந்த பெண்ணுக்கு எழ அவள் சண்டையிடுகிறாள் இவன் அதை நிருபிக்க நீ என்னவேண்டுமானாலும் கேள் என்று சொல்ல அவள் என்னை மெக்ஸிகோஅழைத்து செல் என்கிறாள்.இவனும் சம்மதிக்கிறான் என்னோடு வாழ வேண்டும் என்று உறுதி பெற்று கொண்டு,பின் ஒரு மிகப்பெரிய ப்ளான் மொத்த வைர தொழிற்சாலையில் உள்ள நகைகளையும்,மூல வைரங்களையும் திருடி அவளோடு மெக்ஸிகோ செல்கிறான்.அங்கே அவள் வேறு ஒரு ஆணுடன் உறவு கொள்வதை அறிந்து துடிக்கிறான்.பின் தான் அது அந்த பெண்ணின் காதலன் என்றும் அவள் சொந்த ஊர் அது தான் என்றும் இவள் சூழ்நிலையால் எப்படி ஒரு விலைமகளாக மாற்றபட்டால் என்பதை விளக்குகிறாள்,அவளை நல்லபடியாக மெக்ஸிகோ அழைத்து வந்ததற்காக நன்றி சொல்கிறாள்.உன் உதவிக்கு இணையாக என்னை ஆசை தீர அனுபவித்து கொள் ஆனால் என் வாழ்கை என் காதலனுடன் தான் என்று சொல்லி கெஞ்சுகிறாள் அதற்கு இவன் சம்மதிக்க மறுக்கிறான்.இதற்குள் நெதர்லாந்தில் டென்னிஸ் அடித்த கொள்ளை செய்தி பரவி காவல்துறையினர் அவனை தேடி வருகிறார்கள்.தான் விரும்பிய பெண் விலைமகளாக இருந்தாலும் அவளோடு வாழ சொந்த ஊரில் தாய் தந்தையை கூட விட்டு விட்டு பல கனவுகளோடு வந்த அந்த மனிதனின் துடிப்பு கடைசியில் அவன் தற்கொலை செய்து கொள்ள கூட தைரியமில்லாமல் ஒரு வித்தியாசமான முடிவு எடுக்கிறான்.வயிறு வெடிக்கும்வரை உணவுஉண்டு இறந்துவிடலாம் என்று முடிவு செய்து மூக்கு முட்ட உண்டு ரத்தம் கக்கி மயங்கி சரிகிறான் பின் காப்பாற்றபடுகிறான். உடனே சொந்த ஊருக்கு கிளம்பி வந்து தாயை பார்க்க வருகிறான் அங்கே அவன் தந்தை இறந்து மறுநாள் இறுதியஞ்சலி தாய் தனிமையில் அழுகிறாள் வருந்துகிறாள் நீ நாளை இறுதிமரியாதை செய்ய வரவேண்டும் என்று சொல்கிறாள் முதலில் முடியாது என்று சொல்கிறான் ஏனென்றால் போலீஸ் அவனுக்காக அங்கே காத்துகொண்டிருக்கும் என்பதால் அப்பொழுது அவன் தாய் அவனுக்கு அவன் தந்தை கடைசியாய் கொடுத்த ஒரு பரிசை கொடுக்கிறாள் திறந்து பார்த்தால் தந்தையிடம் இவன் விரும்பி கேட்ட கார் சாவி அது. மறுநாள் இறுதி அஞ்சலி செய்ய அவன் வருகிறான் தந்தைக்கு செய்ய வேண்டிய மரியாதையை செய்து விடு அவனுக்காகவே காத்திருந்த போலீசிடம் தைரியாமாக சரணடைகிறான்.இந்த உலகத்திலேயே அதிகமாக கொள்ளையடித்தவன் என்கிற தனிநபர் பட்டியலில் எனக்கு தான் முதலிடம் என்கிற பெருமை போதும் என்கிற குரல் ஒலியோடு படம் முடிகிறது.(அவனுக்கு தண்டனை கிடைத்து அந்த காலத்தில் அவன் எழுதியபுத்தகம் மிக அழகாக படமாக்கபட்டிருக்கிறது சின்ன சின்ன லாஜிக் மிஸ்ஸிங் ஆனாலும் அருமையான படம் )தன் கணவர் இறந்து மருத்துவமனையில் இருக்கும் போதும் சாதாரணமாக வீட்டில் இருக்கும் ஒரு பெண் அவள் மனநிலை அழகாய் காட்சிப்படுத்தபட்டுள்ளது.நாம் நம் ஊர் இறுதிசடங்குகளில் நம் தாய் தொடங்கி மனைவி வரை அத்தனை பெண் உறவுகளுக்கும் மட்டுமல்ல உணர்வுகளுக்கும் வீட்டோடு விடை கொடுத்துவிடுகிறோம்.இங்கு பெண்ணுக்கு இன்னும் கிடைக்கவில்லை சுதந்திரம் "கலாச்சராம் சீரழிந்தது நாடுகள் என்று நாம் குறை கூறிக்கொண்டிருக்கும் நாடுகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்கள் எண்ணிலடங்கா என்பது மறுக்க முடியாத
உண்மை தான்" ....



இவ்வளவு தான் இந்த 8ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் நான் பார்க்க கொடுத்து வைத்த திரைப்படங்கள். மற்றவை அலுவலக பணிசூழலில் பார்க்க நேரம் கிடைக்கவில்லை.சென்னை வருவதற்கு முன் உலக திரைப்படங்கள் பலவற்றின் பெயர் அறிமுகமாயிருந்தது.சில படங்கள் பார்க்க கொடுத்து வைத்திருந்தது ஆனால் இங்கு வந்த பிறகு தான் அது பற்றிய ஒரு முழு தெளிவு கிடைத்தது.ஒரு கலையில் நாம் சிறக்க வேண்டுமென்றால் அதில் ஆழ்ந்த அனுபவம் வேண்டும்,அது நாம் பயிற்சி செய்வதால் மட்டும் சிறந்து விட முடியாது அதில் ஒரு ஆழ்ந்த புரிதல் வேண்டும். அதற்கு இந்த உலக படங்கள் ஒரு நல்ல வாய்ப்பு."திரைப்படத்துறை சார்ந்து இயங்குபவர்கள் மட்டுமல்ல மக்கள் அனைவருமே பார்க்க வேண்டிய ஒரு அற்புத கலைவடிவம் திரைப்படங்கள்.ஒரு நாட்டின் ஒருங்கிணைந்த அடையாளம் திரைப்படங்கள்.அதன் பெருமை,புகழ்,பெயர்,சிறப்பு,வரலாறு,
இதெல்லாம் வெளிப்படுத்த அவற்றை மனிதர்கள் வாழும் திசைதோறும் கொண்டு சேர்க்க திரைப்படங்கள் போல் வலிமையான சரியான ஆயுதம் வேறு எதுவும் இல்லை."நல்ல விசயங்களை சரியாய் பரிமாறினால் அன்று மொழியே இல்லாமல் தொடங்கிய சார்லி சாப்ளின் படங்களின் புரட்சியை இன்றும் மொழி கடந்து நாடு கடந்து சப் டைட்டில் கூட இல்லாமல் ஒரு கதையை திரைப்படமாக்கி மக்கள் மனதில் நிறுத்த முடியும்.."



(நல்ல வேலை 2011 திரைப்பட விழாவுக்குள் இந்த பதிவை போட்டுவிட்டேன் என்ன பன்றது என் அலுவலகத்தில் கிடைக்கும் நேரத்தில் அப்பப்ப டைப் செய்து தான் பதிவு போடுகிறேன். எப்படி தான் நாளைக்கு அஞ்சு பக்கம் அசராம பதிவு போடுறாங்களோ தெரியலியே ப்பா??????????????)

பிரெஞ்சு இயக்குனர் "ஜீன் ரெனார்" சொன்ன வரிகள் இவை...

"ஒரு திரைப்படத்திற்கு அதிகம் கதை தேவைப்படாது.மிகச்சிறிய கதையும் அதிகமான விவரங்களோடு உருவாவதே நல்ல திரைப்படம்"(நல்ல வார்த்தைகள்ல)



திரைப்படம் ஒரு நவீன கலை வடிவம் அது மக்களுக்கானது,உலக கலைகள் பல கலந்து வெளிப்படும் ஒரு அற்புத நிகழ்வு நல்ல திரைப்படங்கள்.அது எங்கெங்கு உருவாயினும் உலகின் கடைகோடி மனிதரையும் அது சென்று சேரும் பொழுது மட்டுமே அதன் முழுபயனையும் அடைகிறது.அப்படி உலக திரைப்படங்கள் உள்ளூர் வீதிகளில் உலவ தொடங்கி நம் மக்களிடம் நல்ல உளவியல் மாற்றங்களை ஏற்படுத்தும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பது இந்த திரைப்பட விழாக்களை காணும் பொழுது தோன்றுகிறது.ஆனால் அது ஏதோ ஒரு சில மனிதர்களோடு ஒடுங்கிவிடுகிறதோ என்கிற சந்தேகமும் எழுகிறது.எனினும் ஒரு விதை தூவப்படும் போது அதன் பலன் அறியப்படுவதில்லை.பொறுத்திருப்போம் துளிர்த்து ஓங்கி வளரும் வரை>>>>>>>>>>




இன்று இணையங்களிலும் கடைகளிலும் திரைப்படங்கள் மிக மலிவாக கிடைக்கின்றன.ஆனால் இன்னும் நம் மக்கள் அநேக பேர் தமிழ் தவிர சில ஹாலிவுட் படங்கள் மட்டுமே அறிந்திருப்பது வருத்தமளிக்க கூடிய விசயம் தான் ஆனால் தீர்வு நம்மிடம் தான் உள்ளது நாம் கற்று கொண்டதை,தெரிந்து கொண்டதை,புரிந்து கொண்டதை அனைவரிடமுமும் பகிர்ந்து கொள்வோம் கண்தானம்,அண்ணதானம்.உடல்தானம் இதெல்லாம் விட சிறந்தது அறிவுதானம் தான்.இன்று நம் உலகிற்கு தேவைப்படுவது என்பது என் தனிப்பட்ட கருத்து.இந்த விழாவில் எனக்கு கிடைத்த மிக முக்கியமான விளக்கம் இது.என் அறிவின் புரிதலின் சில துளிகளை உங்களோடு பகிந்துகொள்ள வாய்ப்பளித்தர்க்கும் இதை இவ்வளவு நேரம் பொறுமையாய் படித்ததற்க்கும் என் மனமார்ந்த நன்றிகளை சொல்லி முடிக்கிறேன்...


இப்படிக்கு
மு.வெ.ரா.
டிசம்பர்-2010

Tuesday, December 14, 2010

விழாக்களும் சில விளக்கங்களும்! -1




வணக்கம் நண்பர்களே!

விழா நாள் :-13-12-2010 திங்கள்கிழமை

"உயிர்மெய் பதிப்பகத்தின் புத்தக வெளியிட்டு விழா"


சிறப்பு விருந்தினர்கள்:-கனிமொழி தொடங்கி சில அரசியல் பிரபலங்களும்,எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற சில இலக்கிய பிரபலங்களும்,மிஷ்கின் போன்ற சில திரையுலக பிரபலங்களும்,

நேரம்:- மாலை 6 மணிக்கு மேல் 10மணிக்குள்

இடம்:-சென்னை காமராஜர் அரங்கம்


அடிக்கடி நான் என் நண்பர்களிடம் இப்படி சில வார்த்தைகளை பகிர்ந்து கொள்வது உண்டு "கண்ணால் காண்பதும் பொய்! காதால் கேட்பதும் பொய்!தீர விசாரிப்பதே மெய்!" என்பார்கள்.ஆனால்"நான் தீர விசாரிப்பதும் பொய்யே என்பேன்!" ஏன்னென்றால்,அது நாம் விசாரிக்கும் நபர்களை பொறுத்தது.ஆகவே"அனுபவித்து உணர்வது மட்டுமே உண்மை!" என்பது என் தனிப்பட்ட கருத்து.(ஆம் இது கூட என் அனுபவத்தில் நான் உணர்ந்ததே!).இந்த 23 வயதுக்குள் அப்படி என்ன பெரிதாய் அனுபவித்து அறிந்து கொண்டாய் ?என்று நீங்கள் கேட்கலாம்,ஆனால் எனக்கு எப்பவுமே ஒரு நம்பிக்கை உண்டு.இந்த "உலகின் அத்தனை படைப்புகளிலும் நாம் கற்றுக்கொள்ள எதோ ஒரு விஷயம் எப்பொழுதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது". சிலருக்கு சிலரை பிடிக்கலாம் சிலரை பிடிக்காமல் இருக்கலாம். அதனால் சின்ன முரண்பாடுகளுக்காக (என் ப்ளாக்கின் டைட்டில் கார்டை ஒரு முறை படிக்கவும்.)யாரையும் வெறுக்கமால் விலகி நின்று பார்ப்பது அப்பொழுது இல்லாவிட்டாலும் கூட,பின்னால் பல நல்ல விசயங்களை நாம் கற்றுக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.


என் அப்பா காவல்துறையில் இருந்தார்.ஆனால் அதற்கு நேர் எதிர்குனம் கொண்டவர்.அமைதியான நபர் என்னையும் அப்படியே வளர்த்துவிட்டார்.அதனால் சின்ன வயதிலிருந்தே என்னிடம் யாரிடமும் எதற்காகவும் சண்டை போடதே யாராவது உன்னை அடித்தால் கூட ஆசிரியரிடம் தான் சொல்ல வேண்டும்.பதிலுக்கு நீ சண்டையிட கூடாது என்று சொல்லி சொல்லி வளர்த்ததால் தான் என்னவோ நான் சிறு வயதிலிருந்தே யாரிடமும் விளையாட்டுக்கு கூட சண்டை போட்டது கிடையாது.எல்லாரிடமும் நல்ல படியாகவே பழக முயன்று வருகிறேன்.


எதற்காக இவ்வளவு பெரிய முன்னுரை வெங்கட்ராமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது சம்பந்தம் இருக்கிறது."அதுக்கு முன்னாடி ஒரு சின்ன பிளாஷ் பாக்" நான் சென்னைக்கு வந்த கடந்த இரண்டு வருடங்களில் முதல் ஒரு மாசம் நான் ஆசைபட்டு வந்த சினிமா துறையில இயக்குனர் திரு. ஜீவா அவர்களின் உதவியாளர் ஸ்ரீநாத் இயக்கிய முத்திரை படத்தின் இறுதிகட்டப் பணிகளின் போது தான் உதவிஇயக்குனராய் போய் சேர்ந்தேன்.போர்பிரமேஸ் ஸ்டுடியோவில் ஓர் 30 நாள்களை செலவளித்தேன்.அந்த படத்தின் தயாரிப்பாளர் ஜீவாவின் மனைவி அணிஸ் ஜீவா,அந்த படத்தில் அவருக்கும் இயக்குனருக்கும் இடையே ஏற்பட்ட சிறு கருத்து வேறுபாடு தொடர்ந்து அந்த குழுவில் நான் இயங்க முடியாமல் போனது.அந்த படத்தில் இருந்து தான் கிரியேடிவ் டைரக்டர் என்ற புது பெயரை கிரேடிட்சில் போட்டுக்கொண்டார்.அணிஸ் ஜீவா.உண்மையில் தமிழ் சினிமா பற்றிய சில புரிதல்களை ஏற்படுத்தியது இந்த காலகட்டம.

(அதற்காக என் ஊரில் ஹலோ பண்பலையில் நான் பணிபுரிந்து கொண்டிருந்த "ரேடியோ ஜாக்கி" வேலையையும் விட்டுவிட்டு வந்தேன்-"விதி யார விட்டுச்சு"-ஆனா முயற்சி வீண் போகல! "ஆபரேஷன் சக்சஸ் பட் பேசன்ட் நிலைமை பொறுத்திருந்து தான் பார்க்கனும்")

பின் சில மாதங்கள் கழித்து மக்கள் தொலைகாட்சி என்று ஊடகம் சார்ந்த துறைகளில் இயங்கினாலும்,நிறைய விழாக்களில் அலுவல் காரணமாக கலந்துகொண்டாலும் நான் தனிப்பட்ட முறையில் கலந்துகொண்ட ஒரு இலக்கிய நிகழ்வு இந்த வார தொடக்கத்தில் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடந்த ஒரு பிரபல இணைய எழுத்தாளரின் 7 புத்தகங்கள் வெளியிட்டு விழா தான் ஏன் இவ்வளவு நேரம் அவர் பெயரையே குறிப்பிடாமல் எழுதி வருகிறேன் என்றால் அவருக்கு எவ்வளவுக்கு எவ்வளவு ஆதரவளர்கள் அதிகமோ(உண்மையா?-அப்புடித்தான் சொல்லிகிராங்காப்பா)அதே அளவுக்கு எதிர்ப்பாளர்கள் அதிகம் ஆகவே அவரை பற்றிதான் எதோ எழுதுறேன்னு நெனைச்சு முழுசா படிக்காம விட்ருவாங்கனுதான் அவர் பெயர இப்ப சொல்லல கட்டுரைய முடிக்கிறதுக்குல சொல்லிறேன். ]


இந்த விழாவுக்கு என் நண்பர் திரு.பிரசாத் அவர்களோட கிளம்புனேன்.சார் ஏன் இவரோட விழாவுக்கெலாம் போறீங்கனு கேட்டதுக்கு வா நெறைய காமெடி நடக்கும்னு சொன்னார்.எனக்கு அந்த எழுத்தாளரோட எழுத்துக்கள்ல அவ்வளவு பரிட்ச்சியம் கிடையாதுனாலும் அவர் கூப்பிடதுக்காக போனேன் சொன்ன மாதிரி வந்துருந்த எல்லாரும் வஞ்சபுகழ்ச்சியணியா அடிச்சு விட்டாங்க.சரி இப்ப மேல கொடுத்த முன்னுரையோட விளக்கத்துக்கு வரேன்.நா சின்ன வயசிலுருந்தே நல்ல பழகுறது நாம் வெற்றிக்கு எவ்வளவு முக்கியம்னு உணர்ந்தேனோ அதே மாதிரி நாம சந்திக்கிற ஒவ்வொரு உயிரினங்களிலும் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் நாம் கத்துக்கிற ஏதாவதொரு ஒரு விஷயம் நிச்சயமா இருக்கும்னு நம்புறேன்.அந்த நம்பிக்கையில தான் இந்த விழாவுக்கும் போனேன் கலந்துகிட்டவங்க பேசினவங்களல பல தகவல்கள் நமக்கு உபோயோகமாச்சு.அதுல சிலவற்றை இங்க பகிர்ந்துக்கலாம்னு ஆசைப்படுறேன்.




மிஷ்கினோட பேச்சு:-

அவர் இத ஒரு சுயவிளக்க கூட்டமாதான் நடத்துனார். ஒரு வழியா அவர் நந்தலாலா படத்த தகேஷி கிட்டநேவோட "கிக்குஜீரோ" பாதிப்பு தாணு ஒத்துக்கிட்டார்.இந்த உலகத்தில எல்லாமே "இன்ஸ்பிரேசன்" தான்.அப்புடிங்க்றது ஏன் தனிப்பட்ட கருத்து.இத இப்படி பார்க்கலாம் "ஆதாம்" படைத்த கடவுள் அவன் உருவமைப்பில் சில மாற்றங்களோடு உருவாக்கியது தான் "ஏவாள் " (கடவுள நம்புறவங்களுக்கு இந்த உதாரணம்) பறவையோட இன்ஸ்பிரேசன்ல உருவானதுதான் விமானங்கள், (அறிவியல நம்புறவங்களுக்கு இந்த உதாரணம்)இப்படி பல உதாரனங்கள சொல்லிகிட்டே போகலாம். ஆனா ஒரு விசயத்த உள்வாங்கிகிட்டு ஒரு புது வடிவம் கொடுக்கிறதோ அல்லது புது பொருள கண்டுபிடிக்கிறதுக்கு பேரு தான் "இன்ஸ்பிரேசன்"அத அச்சு பிசகாம செய்யுறது பேரு நம்ம பள்ளி நாள்கள்ல சொல்ற மாதிரி வாமிடிங்னு சொல்வாங்க...
(மனப்பாடம் பண்ணி எழுதறது என்ன படிச்சோம்னு கடைசி வரைக்கும் புரியாது )

இங்க என்ன நடக்குது.சரி அத ஒத்துகிறது தப்பு இல்ல.ஆனா அத நம்ம கலைஞர்கள் செய்யுறதில ஏன்னா நம்ம மக்களும் ஒரே வார்த்தையில காப்பி அடிச்சிட்டான் இவன்லாம் ஒரு டைரக்டராணு சொல்லிருப்பாங்க.அதுக்கு பின்னாடி உள்ள பல முயற்சிகள் அந்த இயக்குனரோட சில நல்ல கற்பனைகள் யாருக்கும் தெரியாம மறைஞ்சு போயிருது. மாறவேண்டியது அவர்கள் மட்டுமல்ல நாமும் தான்.ஆமா உண்மையிலயே மிஷ்கின் படத்தின் சில வசனங்கள,சில கதாபத்திரங்கள்,நல்லா பண்ணியிருந்தார்.அத பத்தி கொஞ்சம் நெனைச்சு அவர ஊக்ககபடுத்துவோம் ஏன்னா நம்ம தமிழ் சினிமாவில கமல்,மணிரத்னம்க்கு அப்புறம் இந்த நல்ல முயற்சிகள் செய்யுறதுக்கு இங்க ஆள் இல்ல,இப்ப யாரோ ஒருத்தர் ரெண்டு பேர் நம்ம இளம் இயக்குனர்கள் எடுக்கிற முயற்சிகளுக்கு நம்ம ஒட்டுமொத்த புறக்கணிப்பு முலமா தடை போடாம,அவர்கள் (கமல்,மணிரத்னம்)செய்த சில
இன்ஸ்பிரேசன் படங்களை நாம் ஏற்று அவர்களுக்கு கொடுக்கும் மதிப்பை மற்ற கலைஞர்களுக்கும் கொடுத்து நல்ல விசயங்களை பாராட்டுக்களோடும் தவறுகளை ஆரோக்கியமான விமர்சங்களோடும் கொடுத்தோம்னா,நம் தமிழ் சினிமாவில் பல மிகப்பெரிய மாற்றங்கள் வருவதை யாராலும் தடுக்க முடியாது.(ஏனென்றால் நல்ல சினிமா திரையரங்கம் கிடைக்காமல் தவித்தாலும் சரியாய் திட்டமிட்டால் ஜெயிக்கும் என்பதற்கு"பேரா நார்மல் ஆக்டிவிட்டி" போன்ற ஹாலிவூட் படங்களின் வெற்றி சூத்திரங்கள் ஒரு உதாராணம்)


அடுத்து மொத்த சிறப்பு விருந்தினர்களில் என்னை ஈர்த்தவர் திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள்:-


"வதை"
என்கிற ஒரு செயலை பற்றி அவர் பேசிய பேச்சு பல கேள்விகளை ஏன் மனசுக்குள் ஏற்படுத்தி கொண்டே இருந்தது. நாம் எப்படி சின்ன வயதிலுருந்தே வன்முறையை மனதுக்குள் விதைக்கிறோம் என்பதை சொல்லியது மிக அருமை. அதாவது குழந்தைகளை பயமுறுத்துவது,துன்புறுத்துவது அவன் நன்மைக்காக தான் செய்கிறேன்னு சொல்லி செய்யுற தனிமை படுத்துற தண்டனைகள்.என ஒண்ணாரெண்டா?




"என் பால்ய பள்ளி தோழன் ஸ்டாலின்னு ஒரு பையன் அவங்க அப்ப அவன அடிக்கிற விதம் ரொம்ப புதுசு ஈக்குச்சிகள்ல எடுத்து ஒன்னு ஒண்ணா அவன் கால்ல வீசுவராம்.அந்த பிஞ்சு கால்ல குச்சி பட்டு பட்டு ரத்தம் வடிஞ்சு மறுநாள் பள்ளிக்கு வந்து காட்டுவான்.அவன் கால் என் மனசுல அப்படியே நினைவிருக்கு.ஏன் பக்கத்து வீட்டுல என் இன்னொரு நண்பன் பைசல் இப்ப சவுதில எதோ ஒரு பாலைவனத்தில வேலை பார்க்கிறான் பார்த்து ரொம்ப நாள் ஆகிடுச்சு அப்பஅப்ப போன் பண்ணுவான் சொற்ப சம்பளத்துக்காக அவன்படுற பல கஷ்டங்களையும் மறந்து அப்ப அவன் அதிக பட்சம் கேக்கிறது நல்லா இருக்கியா? புதுசா என்ன படம் ரிலீஸ் ஆகிருக்கானுதான் கேட்பான் (இந்த மாதிரி ரசிகர்களா அடுத்த நிலைக்கு கொண்டு போக தமிழ் சினிமா இன்னும் தயராகலைன்னு தான் சொல்லணும்.)அவனுக்கு ஒரு அஞ்சு வயசு இருக்கும்.எதோ தப்பு செஞ்சதுக்காக அவன அவங்க வீட்டில தலைகீழா தொங்கவிட்டு மிரட்டுனாங்க.அத பார்த்தே நா அமைதியா வளர ஆரம்பிச்சேன்னு தான் சொல்லணும்.எங்க வீட்டில இவ்வளவு தண்டனைகள் இல்லேனு தான் சொல்லணும்.ஆனா நா ஆறாம் வகுப்பிலேர்ந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிச்ச சேவியர்ஸ் பள்ளியில வித விதமா தண்டனை கொடுப்பாங்க குணிய வச்சு முதுகுல அடிக்கிற சத்தம் மட்டும் கிளாஸ் புல்லா கேட்கும்.அதே மாதிரி விரலுக்கு இடையில பென்சில வச்சு அமுக்கிறது,முக்கு நுணிய நகத்தால கில்லுறது,அப்படின்னு ஒரு புது டிக்சனரி போடுற அளவுக்கு தண்டனைகள் கொடுப்பாங்க.

இதோட பாதிப்புகள் பெற்றோருக்கு வீட்டோடையும்,வாத்தியாருக்கு அந்த வகுப்போடையும் முடிஞ்சுருது.ஆனா இத அனுபவிக்கிற குழந்தைகள்,அத சமுகத்தில செயல் படுத்தி பார்க்க ஆசப்படுறாங்க,ஏன் அவங்க பெற்றோருக்கே அவங்க பெரியவங்க ஆன பிறகு இந்த தண்டனைகள திருப்பி கொடுக்க நினைக்குற பிள்ளைகளும் இருக்கத்தான் செய்யுறாங்க. இது இனியாவது மாறனும்னா பெற்றோர்கள் கத்துக்க வேண்டிய பாடங்கள் தான் அதிகம் இருக்கு.(நாங்களும் தயராகிட்டிருக்கோம்ல )

இப்படி பல எண்ண அலைகள என் மனசுல எஸ்.ராவோட பேச்சு ஏற்படுத்திச்சு. அப்புறம் சாரு,அவர் பேச தொடங்கின சில நிமிடங்களியே நாங்க கிளம்பிட்டோம்.(அதாங்க இந்த 7 புத்தகங்கள் வெளியிட்டு விழா நாயகன் சாரு நிவேதாவோட விழா தான் நா இந்த வாரம் கலந்துகிட்டது.சென்னையில இருக்கிற பெருவாரியான வேற்று மாவட்டத்தினர் எல்லாருமே பல சந்தோசங்கள மறந்துட்டு சென்னையில வாழுறது பொழப்புக்காக மட்டும்மில்ல,இந்த மாதிரி மாநகர் முழுக்க நடக்குற நிகழ்வுகளுக்காகவும்தான்,ஆமாங்க ஒரு விழாவுல கொண்டாட்டங்கள்,சந்தோசங்கள்ல தாண்டி நம்ம கத்துக்கிறதுக்கு எதோ ஒரு விசயம் இருந்துகிட்டு தான் இருக்கு.பல புதிய உணர்வுகள்ல கொடுத்து நம்மள புத்துணர்வோட வச்சுருக்கும்ங்கறது அந்த விழாக்களா அனுபவிச்சா தான் உணர முடியும். "அதனால எல்லா விழாக்களையும் கிடைக்கிற அனுபவங்கள்ல யாரோ ஒருத்தருக்காக நாம ஏன் இழக்கணும் ?...."

' இது என் அலுவலக நண்பர் திரு.ராஜ்குமார்(படத்தொகுப்பாளர்)என்னிடம் ஒருநாள் பகிர்ந்து கொண்ட வார்த்தைகள் சில இந்த இடத்தில் பொருந்தி போகிறது.ஆகவே அதை இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன்."உன்னை போல் உன் அயலானையும் நேசி" இது இயேசு சொன்னது,சாதாரண வார்த்தை இல்ல இது. நாம் நம்ம உணவு,உடை,இருப்பிடம் சுகம்,சந்தோசம் எல்லாத்துக்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ,அதே விசயங்கள் நம்ம சக மனிதர்களுக்கும் பூர்த்தி செய்ய வேண்டியது நம்ம கடமை '


இது தான் அந்த வார்த்தைகளோட சாராம்சம். இப்படி வாழ முடியாவிட்டாலும் நம் சக மனிதர்களை வதைக்காமலாவது இருக்க முயற்சிக்கலாமே!இது தான் அந்த விழாவில் எனக்கு கிடைத்த முக்கியமான விளக்கங்கள்ல ஒண்ணு....

கவலைகள் மறந்து மனித கடலில் சங்கமிக்கிறது ஒரு வரம்.அது விழாக்களில் மட்டுமே நமக்கு மீண்டும் மீண்டும் கிடைக்கிறது.....






விழாக்களும் விளக்கங்களும் தொடரும் .............



மு.வெ.ரா
18-12-10...

Wednesday, December 1, 2010

என் கவிதைகள்-2( பக்க குறிப்பு:- கவிதை மாதிரி)



"முகங்களே முகமூடிகளாய்"

மின்சாரரயில் புறப்பட்டு வேகம் எடுத்த பின் நிதானமாய் ஏறும் இளைஞர்களை பார்க்கும் பொழுது,

அழகான மழையை ரசித்து செல்லும் நெடுஞ்சாலை பயணங்களில் அசுர வேகத்தில் பாயும் வாகன ஓட்டிகளை பார்க்கும் பொழுது,

இரண்டு கண்களும் இன்றி துணைக்கும் எவரும் இன்றி மேடுகள்,பள்ளங்கள் கடந்து நம்மை தாண்டி செல்லும் பார்வையற்ற வழிபோக்கர்களை சந்திக்கும் பொழுது,

நாம் அண்ணாந்து பார்த்து வியக்கும் உயரமான கட்டிடங்களில் அபாயத்தை மறந்து பணியாற்றும் அண்டைமொழி தொழிலாளர்களை பார்க்கும் பொழுது,

ஒரு நொடி கூட முக்கை பொத்த முடியாமால் நாம் கடந்து செல்லும் பல தெருக்களில் கழிவுகளை தன் சோற்றுக்கையால் அள்ளி வீசும் பணியாளர்களை பார்க்கும் பொழுது,

அறுசுவை உணவுண்டு அமர்ந்து எழும் சாப்பாட்டு கடையில் நம் இருக்கை துடைக்கும் சிறுவர்களை பார்க்கும் பொழுதெல்லாம்.

மனம் வேகமாய் துடித்து அடங்குகிறது! பின் மறந்து போகிறது!


"என்றோ எங்கோ என்ன வாழ்க்கைடா" இது என்று நாம் சோர்ந்து போகும் நிமிடங்களில் எல்லாம் இவர்கள் முகங்கள் மனக்கண்ணில் திரும்ப திரும்ப வந்து சொல்லி மறைகிறது.

ஆம்!!!!!!!!!!!!!!

வாழ்க்கை மிகவும் அழகானது-நிபந்தனைகளுக்குட்ப்பட்டது...



இப்படிக்கு
மு.வெ.ரா...
திருநெல்வேலியிலிருந்து ...
எண்ணஉதயம் நாள்:-02-12-2010


நேரம்:- காலை 10மணி


இடம்:- கிண்டி ரயில் நிலையம் சென்னை.

Tuesday, November 30, 2010

பரிசு போட்டி-"2" (நவம்பர்-டிசம்பர்-2010)




எப்படி இருக்கீங்க? நம்ம வலைப்பூவில ஒவ்வொரு மாசமும் ஒரு போட்டி நடத்துறதா சொல்லியிருந்தேன்.இந்த நவம்பர் மாத போட்டி ஆரம்பிக்கறதுக்குள்ள,இந்த மாசமே முடிஞ்சுபோச்சு.அதனால இந்த வருஷம் தொடங்கி இனி ஒவ்வொரு வருஷமும் நவம்பர்-டிசம்பர் ரெண்டு மாசமும் சேர்த்து ஒரு போட்டி வைக்கலாம்னு நெனைச்சுருக்கேன்.

(போட்டி நடத்துவதற்க்கான காரணத்தை என் பழைய பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளவும்)போட்டி ஒண்ணுமில்ல>>>>>>>> இத வைக்கிறதுக்கு காரணம் சில விசயங்கள் நமக்கு தெரியாது! நம்மளால முடியுமா? முடியாதான்னு யோசிப்போம்,சில விசயங்கள் நம்ம முயற்சிக்கும் போது தான் வெளிப்படும்.என்னைக்கோ யாரோ நம்ம முதாதையர்கள்ல ஒருத்தர் சும்மா கிடந்த ரெண்டு கல்ல உரசி பார்க்கலேனா(அதாங்க சிக்கி முக்கி கல்லு) மனித இனத்தின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு நெருப்பு தான் வந்துருக்குமா? இல்ல அத தொடந்து உருவான வளர்ச்சிகள் தான் நடந்திருக்குமா?
நாம இருட்டுல முழ்கி மறைஞ்சுருப்போம்.ஏன் மனித வரலாறே மாற்றமாகியிருக்கும்.ஆக நம்ம செய்யுற முயற்சிகள் வெற்றியா? தோல்வியானு? பார்க்கிரத விட,அது ஒரு பெரிய மாற்றத்தோட துவக்கமா இருக்கலாம்னு தான் நான் நெனைக்குறேன்.அந்த தைரியத்துல தான் இந்த போட்டி "உங்க மனச பாதிச்ச ஒரு விசயத்த ஒரு குட்டி கதையா எழுதி அல்லது டைப் பண்ணி எனக்கு அனுப்புங்க" "கடைசி தேதி டிசம்பர் 25-2010அப்புறம் டிசம்பர் 31-2010ஆம் தேதி முடிவ அறிவிக்கிறோம்.

முதல் கதைக்கு பரிசு முதல் முன்று சிறந்த கதைகளில் இருந்து உங்கள் வாக்கெடுப்பின் படி தேர்ந்தடுக்கபடும் ஒரு கதையை குறும்படமாக எடுக்க போகிறேன்...

எல்லார்கிட்டயும் ஒரு கதை இருக்கு.நமக்குள்ளையும் ஒரு கலைஞன் ஒளிஞ்சுக்கிட்டுதான இருக்கான்.அவன கொஞ்சம் தட்டி எழுப்புவோம்."நிபந்தனை ஒண்ணுமில்ல" நாலு வரி கதையில் இருந்து ஒரு ரெண்டு பக்கம் வரைக்கும் (குட்டி கதைப்பா) எழுதலாம்.

கதைய அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்:- venkatraman1988@gmail.com


கண்டிப்பா எல்லாரும் எழுதனும்னு நான் ஆசைப்படுறேன்.உங்கள் பங்கேற்பு தான் நீங்கள் எனக்கு தரும் பரிசு>>>>>>>>




பரிசுக்காக காத்துருக்கிறேன் !!!!!!!!!!!!!


--

"விதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குவதில்லை"...

அன்புடன் உங்கள்
--
மு.வெங்கட்ராமன்...-(உலகில்
அதிக மனிதர்களை சம்பாதிக்க விரும்பும் ஒருவன்)

திருநெல்வேலி.....
"கனவு காணுங்கள் நண்பர்களே !
உங்கள் ஒவ்வொரு கனவுகளும் நிச்சயம் ஒருநாள் மெய்ப்படும் " ....

Saturday, November 20, 2010

" ஒரு நாள் ஒரு சந்திப்பு ..." பகுதி - 2 (20-10-10-புதன் கிழமை- " 208 பீட்டர்ஸ் ரோடு, ராயபேட்டை, சென்னை-14)



ஆதி காலம் தொடங்கி தன் வரலாறு தெரிந்த ஒரே இனம்,மனிதன் மட்டுமே! என்று பெருமை பட்டு கொள்கிறோம்.ஆனால் வரலாற்றில் சில விசயங்களை பதிவு செய்யாமலே கடந்து விடுகிறோம்.

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளுள் ஒன்று சினிமா,அது அமெரிக்காவானாலும் சரி ஆந்திராவானாலும் சரி திரைப்படங்கள் பொழுதுபோக்காய் ஒதுங்கி விடாமல் நாட்டின் தலைவர்களை கூட உருவாக்கியது.இன்று அது பல மாற்றங்களை அடைந்தாலும்,தொழில்நுட்பபுரட்சியால் நம்மை மிரட்டினாலும்,நேற்று அது பொழுதுபோக்கு என்கிற நிலையிருந்தது பின் வியாபாரமாகி,இன்று சூதாட்டம் என்கிற அபாய நிலையில் ஒரு ஆரோக்கியமற்ற சுழலை நோக்கி போய் கொண்டிருப்பது போல் தெரிந்தாலும், இன்னும் அடிப்படையில் சமுகத்திற்கான ஒரு கலைவடிவமாக அதை தக்க வைத்துக்கொள்ள எங்கோ ஒரு மூலையில் சிலர் போராடி கொண்டு தான் இருக்கிறார்கள். அது “உலக சினிமா” என்றால் தான் தலை நிமிர்ந்து பார்க்க வேண்டுமா? அவர்கள் "hall of fame" வைத்தால் வியந்து பார்க்கும் நாம். நம் தமிழகத்தின் வாழ்வோடு கலந்துவிட்ட,கலாச்சாரமாய் மாறி போன ஒரு விஷயம் திரைப்படங்கள்.அதில் பணிபுரிந்தவர்களே மறந்து போன பல விசயங்களை 1931 முதல் பேசும் சினிமாவில் தொடங்கி தமிழ்,கன்னடம்,மலையாளம்,தெனகத்தினர் தயாரித்த இந்தி படங்கள் என்ன இன்று வரை வெளிவந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு திரைப்படங்கள் பற்றிய அத்தனை புள்ளிவிவரங்கள்,அறிய தகவல்கள் என்று பார்த்து பார்த்து சேமித்து வைத்திருக்கும் ஒரு 84 வயது திரை சரித்திரத்தை ஒதுக்கி அவரின் பொக்கிஷங்களை கொஞ்சம் கொஞ்சமாய் அழித்து கொண்டிருக்கும் அவலம் பற்றிய ஒரு மனவருத்தமே இந்த கட்டுரை.




எனக்கு இவரை பற்றி நான் திருநெல்வேலியில் ஹலோ பண்பலையில் வேலை பார்க்கும் போதே அறிமுகம்,சில பிரபலங்களின் தொலைபேசி எண் தேவைப்படும் போது இவரை அணுகு,இவர் ஒரு சினிமா தகவல் களஞ்சியம்,அது மட்டுமில்லாமல் கேட்டவருக்கெல்லாம் தரும் மனதும் படைத்தவர் என்று சொல்லி,அவருடைய தரை வழி தொடர்பு எண்ணையும் கொடுத்தார்.எங்கள் நிலைய இயக்குனர் திரு.சகாயராஜ் அவர்கள், நானும் தொடர்பு கொள்ள சரியாய் நினைவு இல்லை.நான் கேட்ட பிரபலத்தின் தொடர்பு எண்ணை,ஒரு இரண்டு நிமிடம் கழித்து அழையுங்கள் என்று சொல்லி திரும்ப அழைத்ததும் கொடுத்து விட்டார்.எனக்கு அப்பொழுது அவர் மதிப்பு தெரியவில்லை.

பின்னால் நான் இந்த காட்சி ஊடகத்துறையில் நுழைந்ததும்,ஒரு தொடர்பு எண்ணை சக பணியாளர்களிடமிருந்து,ஏன் நண்பர்களிடமிருந்து வாங்குவது கூட கடினம்.ஏன்னென்றால் ஒரு பிரபலத்தின் எண் சேகரிப்பை அவர்களுடைய சொத்தாக கருதுகிறார்கள்.மக்கள் தொடர்பாளர்களில் சிலரோ பெண் செய்தியாளர்களோ,பெண் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களோ கேட்டால் உடனே கொடுத்து விடுவார்கள். அங்கேயும் ஆண்கள் பாடு திண்டாட்டம் தான். மேலும் இன்று அது ஒரு வருமானம் வர கூடிய தொழில். ஒரு நபரை அறிமுகப்படுத்துவதற்கு நீங்கள் ஏதாவது விலை கொடுத்தே ஆக வேண்டும்.இதிலும் சில நல்ல உள்ளங்கள் உண்டு. இந்த உண்மையை, ஒரு தொடர்பு எண்ணின் வலிமையை நான் அப்பொழுதுதான் உணர்ந்தேன்.

பின் மக்கள் தொலைகாட்சிக்கு வந்ததும் இந்த முதன் முதலாய் நிகழ்ச்சி செய்ய சொன்னவுடன், நானா வி.ஐ.பிக்களை வைத்தா எனக்கு பிரபலங்களோடு அவ்வளவு அறிமுகங்கள் கிடையாதே என்று பயந்தேன். நீ தான் செய்ய வேண்டும் என்றார்கள். முதலாவதாக 2009 -அக்டோபரில் கிராமிய பாடகி சின்னபொண்ணுவில் (அதாங்க நாக்கு முக்க பாடுன அக்கா இப்புடி சொன்ன தான் நெறைய பேருக்கு தெரியுது ) தொடங்கி டிராட்ஸ்கி மருது, பி.பி.ஸ்ரீநிவாஸ், எஸ்.பி.ஜனநாதன், நா.முத்துக்குமார், தடகள வீராங்கனை ஷைனி வில்சன் என இப்ப நாற்பதாவது நபர் ஓவியர். மாருதி வரைக்கும் பல்வேறு துறைகளில் உள்ள ஆளுமைகள் கூட நெருங்கி பழகுற வாய்ப்பு கிடைச்சுது.திரையில நா தெரியலேனாலும் அவ்வளவு பெரிய மனிதர்கள,நான் கேள்வி கேட்டு இயக்குன அனுபவம்,அவங்க பதிலேர்ந்து கிடைச்ச அனுபவம் எல்லாமே எனக்கு கடவுள் கொடுத்த வரம்னு தான் சொல்லுவேன்.அவ்வளவு பகிர்வுகள் என் மனம் முழுக்க நெறைஞ்சு என்னையும் ஒரு நல்ல ஆளுமையா தயார் செஞ்சுக்கிட்டிருக்குனு சொன்னா அது மிகையாகாது.அதுல ஒவ்வொருத்தர் கூட பழகினது பற்றியும் எழுதனனும்னு நெனைச்சாலும் அவங்க ப்ரைவசி கருதி தவிர்த்துட்டேன்.

ஆனா இவர பற்றி எழுதாட்ட என்மனசு ஆறாது. ஒருநாள் அடுத்த நாள் படப்பிடிப்புக்கு ஆள் இல்லாம தேடிகிட்டிருக்கும் போது நண்பர் தமிழ் ஸ்டுடியோ அருண் கிட்ட கேட்டப்ப ( www.tamizhstudio.com இந்த லிங்க் போய் பாருங்க ஒரு நல்ல மனிதரின் நல்ல தகவல்கள் உங்களுக்கே தெரிய வரும் ஏன்னா புகழுக்காகவும்,பெயருக்காகவும் மட்டும் சினிமாவ பயன்படுத்துற இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில நல்ல திரைப்படங்களுக்காக ஆசை மட்டும் படாமல் அது உருவாக பலபேரையும் உருவாக்கி வருகிறார்.)அவர் இவர பத்தி சொல்லி,உடனே தொடர்பு கொள்ளுங்க இவர பத்தி நானும் ஒரு ஆவணப்படம் எடுக்க இருக்கிறேன்னு சொல்லி அவருடைய கைபேசி எண்ணை கொடுத்தார்.

நானும் தொடர்பு கொண்டு கேட்க ஒரு தளர்ந்த குரல் உற்சாகமா வாங்க கண்டிப்பா தரேன்னு சம்மதம் சொல்லி என்னை உற்சாக படுத்திச்சு. மறு நாள் நானும் என் படப்பிடிப்புகுழுவும் 20-10-10-புதன் கிழமை- " 208 பீட்டர்ஸ் ரோடு, ராயபேட்டை, சென்னை-14 அந்த முகவரியை போய் அடைந்தோம். இந்த இடத்துல நான் என் ஒளிப்பதிவாளர் திரு.மோகன் அவர்கள பத்தி கண்டிப்பா சொல்லணும் எங்க தொலைகாட்சியின் அழகிய ஒளி பதிவுகளுக்கு சொந்தக்காரர்.இவரோட அர்ப்பணிப்ப பார்த்த பிறகு தான் இயக்குனரும்-ஒளிப்பதிவாளரும் ஒன்றாக கலந்ததால் தான் பல காவியங்கள் உருவானது என்பதை உணர முடிந்தது.

அப்புறம் மக்கள் தொலைகாட்சியில் என் இன்னொரு நண்பர் அவரும் எனக்கு ஒரு இன்ஷ்பிரேஷன் கடந்த மாதம் நம்ம வலைபூவோட போட்டியில வெற்றி பெற்றாரே திரு.செல்லையா அவரே தான் நான் வியந்த மனிதர்களில் இவரும் ஒருவர் ( "என் ப்ளாக் டைட்டில் கீழ் உள்ள வாசகத்தை ஒரு முறை படிக்கவும் " ) அவர் இப்படி சொல்வதுண்டு.நல்ல சினிமா படைப்பாளிகள் எல்லா காலகட்டத்திலையும் இருந்தாங்க,இருக்கிறாங்க,இருப்பாங்க ஒரு தனிமனிதனா அந்த படைப்போட முழு பொறுப்பேற்று அத காலத்தால் அழியாத வடிவமா மாத்துற சக்தி அவங்ககிட்ட இருக்கும்.அது குறிஞ்சிமலர் மாதிரி எப்பவாவது நடக்கிற விஷயம். இன்னைக்கு இருக்கிற நம்ம தமிழ் திரையுலக சுழல்ல பார்த்தோம்னா “சினிமா ஒன்னும் ஒரு தனிப்பட்ட இயக்குனரின் சாதனை இல்ல அது முகம் தெரியாத,பெயர் தெரியாத பல்வேறு மனிதர்களின் உழைப்புன்னு”உண்மைதானங்க,சில நேரங்கள சில எளியவர்கள் கால ஓட்டத்தில பதிவு செய்யப்பட்டாலும் பல நேரங்கள அநேக உழைப்பாளிகள் சரித்திர பக்கங்கள மறைக்கப்பட்டு தான் இருக்காங்க."தாஜ்மஹால் என்ற உடன் ஷாஜஹான் மட்டும் தான் நமக்கு நினைவுக்கு வருது,அது உருவாகுறதுக்கு உதிரம் மட்டுமல்ல,வாழ்கையையே கொடுத்தவர்களை பற்றி நாம் யோசித்து பார்ப்பது கூட இல்லை,"ஏனென்றால் வரலாறு அலெக்ஸாண்டரையும்,நெப்போலியனையும் பற்றிய பதிவுகளை தான் தாங்கி வந்திருக்கிறதே தவிர,அவர்களின் குழுவில் இருந்த அவர்கள் உலக புகழ் பெற உழைத்த சக மனிதர்களை பதிவு செய்ய மறந்துவிட்டது அல்லது மறந்துவிட்டோம் என்று தான் வருந்த வேண்டியிருக்கிறது.

இப்படி ஒரு சிலர் என்றால் தனக்கு எந்த வித லாபமும் இல்லாமல் ஆர்வத்தினால் பல வரலாற்று பதிவுகளை தேடி தேடி நமக்கு சேகரித்து தந்தவர்களும் அன்றிலுருந்து இன்று வரை இருக்க தான் செய்கிறார்கள். தேடி தேடி நாடுகளையும். வழித்தடங்களையும் கண்டுபிடித்த(அவர்கள் நோக்கம் பற்றி நான் பேச வரவில்லை ஆர்வம் பற்றி மட்டுமே ) யுவான்சுவாங்,மெகஸ்தனிஸ் தொடங்கி வாஸ்கோடகாமா வரை சாதாரண பயணங்களா அவை கடல் கடந்து,பல மொழி கடந்து
ஏன்? எங்கு போகிறோம் என்பது கூட தெரியாமல் எந்த வித துணையும் இல்லாமல் இவர்கள் செய்த பயணங்கள் ஒவ்வொன்றும் ஒரு சரித்திரம்.அவர்களில் சிலர் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டாலும் பலர் காலவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.

அப்படி வெகுஜன மக்களால் அவ்வளவாய் அறிய படாமல் ஊடகங்களால் அதிகமாக கண்டு கொள்ளபடாமல் போன நபரில் இவரும் ஒருவர்.இவரை பார்க்க வீட்டுக்குள் நுழைந்த உடனேயே தன் வீட்டில் எப்பொழுதும் இருக்கும் உடை களைந்து தன் உடல் சுகமின்மையையும் மறந்து தனது அடையாள ஜிப்பா உடை அணிந்து வந்து அமர்ந்தார்.

நானும் இவரை போல் சினிமா மேல் ஆர்வம் கொண்டவன் தான் ஆர்வம் மட்டும் தான் அதை வளர்க்கவில்லை நான் மட்டும் வளர்ந்துவிட்டேன். நான் சின்ன வயதில் இருந்து என் குடும்பத்தினரோடு சேர்ந்து ஒரு படம் கூட பார்த்தது கிடையாது. நான் என் தந்தை,தாய்,தங்கை, நால்வரும் இணைந்து ஒரு புகைப்படம் கூட எடுத்தது கிடையாது. என் தந்தையும் காலமாகிவிட்டார்.ஆம் நம்மில் நெறைய பேர் உலகின் பல சந்தோசங்களை அனுபவிக்க எண்ணி வீட்டின் பல சந்தோசங்களை உணராமலேயே போய்விடுகிறோம்.அதில் நானும் ஒருவன்.

நான் சின்ன வயதிலிருந்தே எங்கள் வீட்டருகே வசித்த எங்கள் வீட்டு உரிமையாளர் அவரை சிலர் "ரெட்டியார் அம்மா" என்று அழைப்பார்கள்.சிலர் "விஜி அம்மா" என்று அவர் பெண் பெயர் சொல்லி அழைப்பார்கள்,(அவர் உண்மையான பெயர் லீலாவதி ) இதெல்லாம் நான் பேச தொடங்கும் வயது வரை தான்,என் அம்மா வேலை பார்க்கும் போது
ஒரு கிண்ணத்தில் உணவு,பிஸ்கட் போட்டு அவர் வீட்டில் கொண்டு விட்டு விடுவார். என்னை கவனித்து கொள்பவர் அவர் தான் அவருக்கு பெயர் வைத்த பெருமையும் எனக்கு தான் உண்டு நான் வைத்த பெயர் " அந்தம்மா " என் வீட்டில் இருப்பது என் அம்மா, அது பக்கத்து வீட்டு அம்மா என்று உணர்ந்து அதனால் அந்த+ அம்மா என்று நான் இப்படி "அந்தம்மா” “அந்தம்மா” என்று தான் அழைப்பேனாம்.நீங்கள் நம்புவீர்களோ என்னமோ எனக்கு தெரியவில்லை இன்றளவும் 22 வருடங்களுக்கு பிறகும் எங்கள் வீட்டருகில் இருக்கும் பலருக்கு அவரை “அந்தம்மா" என்று அழைத்தாள் தான் தெரியும். அந்த அளவுக்கு அவர் பெயர் தான் பிரபலம்.( இதே போல் என் அண்டை வீட்டில் ஒரு பெண் வளர்ந்து அவள் சந்ததி உருவாகும் வயது வந்துவிட்டால் இன்னும் அவளை “பாப்பா” என்று தான் அழைப்பார்கள்.) இதே போல் எங்கள் ஊரின் செல்லபெயர்களுக்கு பல உதாரனங்கள்."கிராமங்களில் நம் அப்பா வைக்கும் பெயர்களை விட நம் ஊர் நமக்கு வைக்கும் பெயரே நிலைத்து விடுகின்றன,அது அவர்கள் வாழ்க்கைக்கு பிறகும் கூட மறையாது."

அந்த அந்தம்மா என்னை நாலு வயதிலிருந்து நான் தனியாய் செல்ல பழகும் வயது வரை கிட்டத்தட்ட 100௦௦ படங்களுக்கு மேல் அழைத்து சென்றிருக்கிறார்.இன்று சினிமவை நான் ஒரு ரசிகராய் மட்டும் அல்லாமல்,ஒரு பங்கேற்பாளறாய் இருக்கும் நிலைக்கு மாற்றியதில் அவருக்கும் ஒரு பங்கு உண்டு. இப்ப சினிமா மூலம் எதாவது செய்யவேண்டும்.என்ற எண்ணம் உருவாக உதவியை இருந்தவரும் அவரே! (விதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குவதிலையே!) இன்று அவருக்கு அந்தம்மாவுக்கு ஒரு 65வயது இருக்கும் அவர் திரையரங்கம் பக்கம் போயே பத்து வருடங்கள் மேல ஆகிடுச்சு... காலம் எல்லாத்தையும் மாத்திருதுல....

இந்த மாதிரி ஆர்வம் மட்டுமே இருந்த எனக்கு,அந்த ஆர்வம் ஒரு மனுஷன எவ்வளவு மாத்தியிருக்கு அப்படிங்கற விஷயம். கலைமாமணி.திரு.பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள சந்திச்ச பிறகு தான் புரிஞ்சுது.



ஒரு திரைப்படம் வெளிவருகிறது என்றால் அது ஒரு நாற்பது வருடங்களுக்கு முன் பெரிய விஷயம்.ஊருக்கு ஏதோ ஒன்று இரண்டு திரையரங்கங்கள் இருந்த காலம். அதுவும் கிராமங்களில் மாலை நேர டூரிங் டாக்கீஸ்களில் மட்டும் தான் ஒரு இரண்டு காட்சிகள் பார்க்க முடியும்.பின் மெல்ல மெல்ல வளர்ந்து திரையரங்கங்கள் அதிகமாகி திரைப்படங்கள் மட்டுமே பொழுதுபோக்காய் இருந்த காலங்கள்,சுற்றுலா செல்வது போல குடும்பத்தோடு கிளம்பி படம் பார்த்து மகிழ்ந்த அனுபவம்.ஒவ்வொரு தமிழ் குடும்பங்களுக்கும் உண்டு.இப்பொழுது எல்லாம் மாறிவிட்டது.தொலைகாட்சியின் புழக்கம் அதிகமானதும்,திருட்டு குறுந்தகடுகளின் அபரிவிதமான வளர்ச்சியின் காரணமாகவும், திரைப்படங்கள் சாதாரணமாகிவிட்டன.திரையரங்கங்கள் எல்லாம் பல ஊர்களில் திருமண மண்டபமாகவும்,வேறு பல இடங்களாகவும் மாறிக்கொண்டு இருக்கின்றன. சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகரிக்கும் மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் சாதாரண மக்களுக்கு கட்டுப்படியாவதில்லை.வருடத்திற்கு 200படங்கள் மேல் வெளியானாலும் பல புதுமுகங்கள் போல் நினைவில் நிற்கும்படியாக ஒன்றிரண்டு இருந்தாலே அதிசயம் என்கிற நிலையில் தான் உள்ளது.


திரைப்படங்கள் நிலையே இப்படி என்றால் அதில் பணியாற்றியவர்கள் நிலை. சினிமாவில் டைட்டிலில் பெயர் வருவதை க்ரெடிட்ஸ் என்பார்கள்.படம் தொடங்கும் முன்னே வரும் பெயர்களை படம் முடிந்த பின் அத்துணை பேரின் பெயர்களும் வரும்.நீங்கள் என்றாவது அந்த பெயர்களை எல்லாம் நின்று கவனித்து பார்த்திருக்கிறிர்களா கண்டிப்பாக இல்லை,சிலர் விரும்பினாலும் திரையரங்கில் அடுத்த காட்சி அவசரத்தில் படம் முடிந்த அடுத்த நொடியே திரையை அனைத்து விடுவார்கள்.எங்கோ சில திரையரங்கில் தப்பி தவறி அப்படி ஓடும் அந்த படத்தின் எண்டு டைட்டில்க்காக,அந்த ஒரு நொடி திரையில் தோன்றி மறையும் தன் பெயருக்காக தன்னுடைய வாழ்வின் பல வருடங்கள், சுகதுக்கங்கள், குடும்பம்,இளமை, ஆசைகள்,பணம் இன்னும் எத்தனையோ விசயங்கள்,என எல்லாம் மறந்து,சிலர் எல்லாம் இழந்து,சென்னை நகர தெருக்களில் இன்னும் அலைந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஏன் இன்னும் பல வருடங்கள் இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.அதவும் ஒரு உலக உண்மையாகிவிட்டது.


இதில் அந்த படம் பற்றிய விவரங்கள் ஆவணபடுத்தபடுவதில்லை என்கிற வருத்தம் சினிமாவை கண்டுபிடித்தவர்களுக்கோ,அதில் வாழ்ந்து பெயரும்,புகழும்,பணமும்,பெற்று கொண்டிருப்பவர்களுக்கோ,இருந்ததா என்று தெரியவில்லை,ஆனால் அறுபது வருடங்களுக்கு முன்னால் ஒரு இளைஞனுக்கு இருந்தது.அது இன்று அவரால் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.படத்தை இயக்கியவர்களோ, நடித்தவர்களோ
அந்த படம் பற்றி அறியாத பல விஷயங்களையும்,அறிய புகைப்படங்களையும் தமிழ்,தெலுங்கு.இந்தி,கன்னடம்,மலையாளம் என்று எல்லா மொழிகளிலும் இவர் சேகரித்து வைத்துள்ளார்.

இவர் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் சென்னை ராயபேட்டை வீட்டில் தான் பிறந்ததிலிருந்து வாழ்ந்து வருகிறார்.(எஸ்.ராமகிருஷ்ணனின் வரிகள் ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது. "ஒரு ஊரில் ஒரே தெருவில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, மறைவது என்பதும் ஒரு கொடுப்பினை" தான் என்று ) ஆயிரம் சந்தோசங்கள் உலகம் எங்கும் கொட்டிக் கிடந்தாலும் நம் மண்ணின் மணம் நம் இந்த மண்ணை விட்டு அகலும் வரை மறையாது என்பது நிதர்சனம்.(பறவைகள் போல கண்டங்கள் தாண்டி பறப்போம்.நம்
ஆசைகளை அடைந்த பின் நாம் தோன்றிய இடத்தில் மீண்டும் கால் பதிப்போம்...)

அந்த இல்லத்தின் பழமையும், அது தாங்கி வந்திருக்கும் பதிவுகளும் ஒரு அதிசயம் தான்.கிட்டத்தட்ட 100 விருதுகள் 1977 ஆம் ஆண்டு அமெரிக்க பையோக்ராபிக்கள் இன்சிடியுட்" மேன் ஆப் தி இயர்" உலகின் பிரபலமான 5000 பேரில் அந்த ஆண்டில் இவரும் ஒருவராக தேர்ந்தடுக்க பட்டார். இவருக்கு முன்பும் இவருக்கு பிறகும் அந்த விருதுக்கு இந்தியாவில் இருந்து யாருமே தேர்ந்தடுக்கபடவில்லை.

தென்னகத்தின் 5 முதல்வர்களோடு நெருங்கி பழகியவர். (திரு.கருணாநிதி,ஜெயலலிதா,என்.டி.ஆர்,எம்.ஜி.ஆர்,ஜானகி)இவர் சினிமாவில் ஒரு ஸ்டில் போட்டோகிராபராக தான் தன் வாழ்கையை தொடங்கினார். திரைப்படங்களுக்காக பிரத்தியோகமாக போட்டோ சூட் செய்யப்பட படங்களை மட்டுமே பத்திரிக்கைகளில் வெளியிட்டு வந்தார்கள்.அந்த காலத்தில் புகைபடங்களிலேயே ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தினார்.சினிமா கலைஞர்கள் சாதாரணமாக படப்பிடிப்பு தளங்களில் உலவும் போது,சக கலைஞர்களோடு பேசி கொண்டிருக்கும்போது புகைப்படங்கள் எடுத்து பத்திரிக்கைகளுக்கு அனுப்பினார்.இது ஒரு புது பாணியை தோற்றுவித்தது.இப்படி பல விசயங்களுக்கு திரு.பிலிம் நியூஸ் ஆனந்தன் முன்னோடியாக இருந்திருக்கிறார்.பின் எம்.ஜி.ஆர் அவர்களின் நாடோடி மன்னன் திரைப்படத்தின் பத்திரிக்கை விளம்பர படங்களை எம்.ஜி.ஆரிடம் இருந்து கேட்டு வாங்கி பல பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைத்தது.மறு நாள் பல பத்திரிக்கைகளில் பிரமாண்டமாய் வெளியானதும்.இவரையே அந்த திரைப்படத்தின் மக்கள் தொடர்பாளராக நியமித்தார்கள்.அது மட்டுமல்ல தமிழ் சினிமாவின் முதல் மக்கள் தொடர்பாளரும் இவரே.



ஆனால் "நாட்டுக்கொரு நல்லவன் " படத்தில் இருந்து தான் இவர் பெயர் பி.ஆர்.ஒ. வாக திரையில் வந்தது.அதற்கு முன்பே தொடங்கிய இவரது சேகரிப்பு.ஒரு படத்தின் பணியாற்றிய அனைவரை பற்றிய விவரங்கள்.முக்கியமான புகைப்படங்கள், இது மட்டுமா தென்னிந்திய சினிமாவில் மறைந்த அத்தனை கலைஞர்களுக்கும் நினைவு அஞ்சலி செலுத்தும் விதமாக பல போஸ்டர்களையும் தன் கைப்பட உருவாக்கி பாதுகாத்து வருகிறார். தன் வீட்டில் இதற்கு தனி தனி அலமாரிகள் அமைத்து சேகரித்து வைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இவையெல்லாம் சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகள்,இயக்குனர்களுக்கே தெரியாத தகவல்கள். மேலும் சமீபத்தில் இதெல்லாம் கணிப்பொறியில் பதிவு செய்ய முயற்சித்தும் அது தோல்வியில் முடிந்தது. வந்த நபர் பாதி சேகரிப்புகள் பற்றிய தகவல்கள் மட்டுமே பதிவு செய்து விட்டு மீதியையும் குழப்பிவிட்டு சென்றுவிட்டார்,என்று வருந்துகிறார் திரு.ஆனந்தன்.

ஆனாலும் சோர்வடையவில்லை.இன்றும் தமிழின் முதல் பேசும் திரைப்படம்
1931-ல் வெளியான காளிதாஸ் தொடங்கி எந்திரன் வரை எந்த படம் பற்றி என்ன விவரங்கள் கேட்டாலும் உடனே நினைவில் கொண்டு வந்து பகிர்ந்து கொள்கிறார்.காளிதாஸ் திரைப்படத்தின் முதல் போஸ்டரையும் தேடி பத்திரபடுத்தி உள்ளார்.அந்த படம் வெளிவருவதற்கு முந்தின நாள்லே பத்திரிக்கையாளர்கள் காட்சி போடப்பட்டு அதன் விமர்சனம் வெளியாகியிருக்கும் தகவலையும் பகிர்ந்து கொண்டார். மேலும் 16-10-1944 முதல் 22-11-1946. 768 நாள் 110 வாரம் சென்னை ப்ராட்வே திரைஅரங்கில் ஓடிய “ஹரிதாஸ்” படத்தின் போஸ்டரும் இவர் சேகரிப்பில் உள்ளது.சினிமா கலைஞர்களின் முகவரிகள் பற்றி முதல் புத்தகம் எழுதியவரும் இவரே.இன்றும் தினகரன்
நாளிதழில் வெள்ளிக்கிழமை தோறும் தமிழ் சினிமா வரலாறு பற்றி ஒரு தொடர் எழுதி வருகிறார்.பத்திரிக்கையாளர்கள் காட்சிக்கு படம் பார்க்க செல்கிறார்.எந்திரன் படத்துக்கு பத்திரிக்கையாளர் காட்சி இல்லாததால் அந்த படம் பார்பதையே தவிர்த்து விட்டேன் என்று சொன்ன போது ஒரு உண்மை கலைஞனின் தன்மானம் என்னையும் உறுத்தியது.






அதுமட்டுமா இவர் சேகரித்து வைத்துள்ள தகவல்கள் அப்பப்பா ஒவ்வொன்றும் ஆச்சிரியங்கள். உ.ம்- 1963 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் பத்மினி நடிப்பில் இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் இயக்கத்தில்.வின்சென்ட்-இன் ஒளிப்பதிவில் வெளிவந்த "மீண்ட சொர்க்கம் " என்ற திரைப்படத்தில் தான் "ஜூம் லென்சே" பயன்படுத்தப்பட்டிருக்கிறது.அதுவும் ஒரே ஒரு காட்சியில் தான். அதை எடுத்தது ஒரு வெளிநாட்டுக்காரர் இந்தியாவுக்கு சுற்றுபயணம் வந்த அவர் இங்கு படப்பிடிப்பு நடப்பதை கேள்விப்பட்டு வேடிக்கை பார்க்க வந்தார்.அப்பொழுது ஒரு காட்சியை தன்னுடைய ஒளிப்பதிவு கருவியில் பதிவு செய்தார்.அதைப்பார்த்த இயக்குனர் ஸ்ரீதர் கேட்கவும் அந்த காட்சி பற்றியும் ஜூம் என்கிற தொழில்நுட்பம் பற்றியும் விளக்கிய அந்த வெளிநாட்டவர். இயக்குனரிடம் தான் தாய்நாட்டுக்கு திரும்பியதும் இந்த காட்சியை பதிவு செய்து அனுப்புவதாக சொல்லி விடைபெற்று சென்றார். பின் அதே போல் அனுப்பியும் வைத்தார். இது தான் இந்தியாவிலேயே ஜூம் ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம்.அதற்கு முன்பு வரை ஒரு க்ளோசப் ஷாட் எடுக்கவேண்டுமென்றால் ஒளிப்பதிவு கருவியை தூக்கி சென்று சம்பந்தப்பட்ட நபரின் முகத்தின் அருகே வைத்து எடுக்கும் முறை தான் பின்பற்றப்பட்டு வந்ததாம். வாவ் எவ்வளவு பெரிய தகவல்."ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" இப்படி இந்த வாழும் பல்கலைகழகத்தில் பல தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன. அதை பதிவு செய்யவேண்டிய கட்டாய காலகட்டத்தில் இருக்கின்றோம்.

"நல்லது செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை கெட்டதாவது செய்யாமலிரு" என்பார்கள்.இவர் பலகாலமாக தன் சேகரிப்புகளை நிரந்தர கண்காட்சியாக வைக்க ஒரு இடம் கேட்டு அரசாங்கத்திடம் போராடி வருகிறார்.அதற்கு யாரும் உதவவில்லை.ஆனால் தங்கள் தேவைக்காக பலரது விவரங்கள் அடங்கிய குறிப்புகளை,புகைப்படங்களை இவரிடம் இருந்து வாங்கி செல்லும்,தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலர் அதை திருப்பி கொடுப்பதும் இல்லை இவரே தேடி போய்கேட்டாலும் நான் அதை அன்றே கொடுத்துவிட்டேனே,என்று வாய் கூசாமல் பொய் சொல்லி ஒரு நல்ல இதயத்தை வேதனை அடைய செய்கின்றனர்.கடந்த மாதம் நடந்த இயக்குனர் சங்க விழாவுக்கு கூட அதன் தலைவர்கள் சிலர் கேட்டதுக்காக இயக்குனர்கள் பற்றி ஒரு சிறு புத்தகம் போடுமளவுக்கு தகவல் யோசித்து எழுதி வைத்திருந்தார்.ஆனால் இன்று வரை அதை வாங்க கூட யாரும் வரவில்லை என்பது வேதனையான நிஜம்.எனக்கு பிறகுஇதை வைத்து என் மகனுக்கு காசாக்க கூட தெரியாது அவர் இதை தவிர்த்து விடுவார்.என் பொக்கிஷங்கள் அழிந்து விடுமோ என்று நினைக்கும் போது என் மனம் துடிக்கிறது.என்று கூறும் போது எனக்கும் மனது வலித்தது..."சினிமா சம்பந்தமாக விழாவோ,புத்தகங்களோ எது வெளிவர வேண்டுமென்றாலும் இவருடைய துணையில்லாமல் முடியாது என்று சொல்கின்ற அளவுக்கு திரைத்துறையில் பங்காற்றியுள்ளார்".




திரையில் மட்டுமே ஹீரோக்களாக இருக்கும் பலர் ஒரு நிஜ ஹீரோவை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து கொண்டிருப்பது மறுக்க முடியாத உண்மை.ஏன் நாளை ஒருவர் இது போல ஒரு சேகரிப்பு ஆர்வத்தை பற்றி யோசிக்க கூட முடியாத அளவுக்கு நல்ல முயற்சிகளுக்கு முடு விழா நடத்தும் பெருமை ஒவ்வொரு சம கால தமிழ் சினிமா கலைஞர்களுக்கும் உண்டு.அதற்கு என்ன பரிகாரம் செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை."தமிழ் சினிமாவில் அங்கம் வகிக்க வேண்டும் என்று ஆசை பட்டதற்காக என் பங்கிற்கு நான் இந்த தகவல்களை வேறு எந்த பத்திரிக்கையும் பதிவு செய்யாத சில தகவல்களை இங்கு பதிவு செய்ததால் சிறிது மனநிறைவு அடைகிறேன்".




ஒரு ஆவணம் சிதைக்கப்பட்டு கொண்டிருக்கிறது.இது சினிமா துறையில் மட்டும்மல்ல நம் நாட்டின் அநேக துறைகளில் உண்மைகள் மறைக்கபட்டு அழிக்கப்பட்டு வருவது நிஜம். "இது நமக்கு புதிதா என்ன காலம் காலமாக நம் தமிழ் பொக்கிஷங்களை ஆற்றில் போட்டு கொண்டிருந்த நாம் ஒரு உ.வே.சா வந்ததால் ஓலை சுவடிகளில் இருந்து அச்சில் ஏறியது.இருட்டறையில் அடைந்து கிடந்த தேவார பாடல்கள் மாமன்னன் ராஜராஜனால் வளர்க்கப்பட்டு சுவடியில் காலம் காலமாக பணம் கொடுத்து ஆள் நியமித்து பாடப்பட்டு வந்ததால் இன்றளவும் அழியாமல் தமிழுக்கு புகழ் சேர்த்து வருகிறது" இது போல ஒரு வாய்ப்பு நம் பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கும் கிடைக்காதா என்ன?

இதை படிக்கும் யாரேனும் அதை பாதுகாக்க உங்களால் முடிந்த உதவிகள் செயலாகவோ,ஆலோசனைகளோகவோ தரலாம்..."இனி வரும் காலத்திலாவது நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வு முடிவதற்குள் எதாவது ஒரு விசயத்தை ஆவணப்படுத்தாமல் அடங்கமட்டோம் என்கிற உறுதி ஏற்ப்போம் நண்பர்களே!" இது தொடங்கினால் நம் சிறு துளிகளும் ஒரு நாள் பெரு வெள்ளங்களாகி பல அறியாமை கசடுகளை அடித்து களையும்.நம் நாளைய தலைமுறைக்கு அது பேருதவியாய் அமையும்.


வெறும் ஆனந்தனாக இருந்த இவர் பிலிம் நியூஸ் என்ற பத்தரிக்கைக்கு போட்டோ கிராபராக பணியற்றியதாலேயே இவருக்கு அந்த பெயர் வந்தது என்று நாம் அறிவோம். இவரின் 1931 -2010வரை உள்ள திரை சேகரிப்புகள் முடியபோவதில்லை. இன்னும் பல ஆண்டு தொடர போகிறது.அதற்கு நாமும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம். "சரித்திரங்கள்,சாதனைகள் உருவாவதில்லை,உருவாக்கபடுகின்றன".அதில் நம் ஒவ்வொருவரின் பங்கும் இன்றியமையாதது.

இன்னும் பல நாயகர்கள் வலம் வருவார்கள்...




டேக் ஓ.கே !!!!!!!!!!!!!!!!!!!!


மு.வெ.ரா
22-11-20
10

Tuesday, October 26, 2010

" ஒரு நாள் ஒரு சந்திப்பு ..." பகுதி - 1

"இந்திய திரைப்படங்கள் பற்றிய ஆய்வு இன்னும் எத்தனை வருடங்கள் கழித்து நடந்தாலும் அதில் இவருக்கு தனி இடம் உண்டு " இப்படி தான் என் நண்பர் ஒருவர் இவரை பற்றி என்னிடம் அடிக்கடி சொல்லுவார்.

கற்பனைகள் கேமராவுக்குள் தஞ்சம் அடைய தொடங்கிய காலம் 19 ஆம் நூற்றாண்டு அதன் இறுதிப்பகுதியில் திரை ஒளிப்பதிவில், ஒரு தனி பாணியை வளர்த்தெடுக்க தொடங்கியவர் இவரின் முன்றாவது கண்களுக்குள் நுழைந்தவர்கள் உலகப்புகழ் பெற்றார்கள் விருதுகள் வாங்கி குவித்தார்கள்.

ஒருவர் தற்காலத்தில் எழுத்து, ஒளிப்பதிவு, இயக்கம், படத்தொகுப்பு என்கிற இந்த நான்கு துறைகளிலும் நல்ல அறிமுகம் உள்ளவராய் இருப்பதே அரிது. ஆனால் அதில் இருபது ஆண்டுகளுக்கு முன்னரே சாதித்தவர் இவர். இவருடைய படங்கள் வசூலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது நிதர்சனம், இயற்கையை அழகாய் திரையில் வடித்த இவர் கருத்திலும் குறை வைக்கவில்லை. விருதுகள் தாண்டி பல கலைஞர்கள் கைபிடித்து எழும்ப
விழுதுகளாய் இருந்தவர்.



கிட்டத்தட்ட 72 வயது இன்னமும் தனது 26 ஆவது படத்தை பற்றி அவர் பேச தொடங்கியது திரை துறையில் சாதிக்க நினைக்கும் ஒவ்வொருவரிடமும் இருந்தால் உலக சினிமா வரலாறு இந்திய திரைப்படங்களும், இந்திய திரைக்கலைஞர்களும் இன்றியமையாது.( அது நிச்சயமாய் நனவாகும்! அந்த காலம் வெகுதூரமில்லை என்ற நம்பிக்கை இவரை சந்தித்து விடைபெறும்போது என் மனதில் திரும்ப திரும்ப தோன்றியது)

தமிழ் சினிமாவின் பிதாமகன்களின் ஒருவராக கருதப்படும் திரு.பாலுமகேந்திரா அவர்களை பற்றி சொல்லத்தான் இந்த சின்ன முன்னுரை.....



நான் இவர் படங்கள் அதிகம் பார்த்ததில்லை. ஆனால் இவர் படங்கள் பற்றி பல பேர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பொழுதும் தொலைகாட்சிகளில், இவருடைய "முன்றாம் பிறை" போட்டால் கூட நகராமல் படம் பார்த்தவர்களையும் பார்த்திருக்கிறேன். நானும் அப்படி பார்த்திருக்கிறேன்.ஆம்! ஒரு கலைஞனின் படைப்பு எல்லா கால கட்டத்திலும் விரும்பப்படும் படியாக அமைவது மிக அரிது. அந்த வரிசையில் இவரின் பல படங்கள் இருப்பது இவரின் தனிச்சிறப்பு.




இன்று காலை நானும் என்னுடன் மக்கள் தொலைக்காட்சியில்
பணிபுரியும் நண்பர்கள் இருவரும் சேர்ந்து எங்கள் பத்து நிமிட கதைகள் ( இன்று பல தொலைக்காட்சியில் குறும்படங்களுக்காக ஒரு இடம் ஒதுக்கியிருக்கிறார்கள் ஆனால் முதலில் நாங்கள் தான் இப்படி ஒரு நிகழ்வை தொடங்கினோம்). நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் தேர்ந்தடுக்கப்படிருக்கும் படங்களில் பரிசுக்குரிய படங்களை தேர்வு செய்யும் படி கேட்க சென்னை சாலி கிராமம்,தசரதபுரம் போலீஸ் பூத் அருகில் இருக்கும் பாலுமகேந்திரா அவர்களின் "சினிமா பட்டறை"க்கு சென்றோம்.நான் இவரை சந்திப்பேன்.இவ்வளவு நேரம் உரையாடுவேன் என்றெல்லாம் நினைத்துப்பார்க்கவில்லை, ஆனால் நான் சின்ன வயதில் கண்ட கனவுகள் மட்டுமே எனக்கு இது போன்ற அறிய வாய்ப்புகளை கிடைக்கச் செய்கிறது என்பேன்.

நா எங்க அப்பாம்மா கை பிடித்து பொருட்காட்சிகளில் நடக்கத் தொடங்கிய காலங்களிலேயே அங்கே ஒலிபரப்பாகும் விளம்பர அறிவிப்புகளால் ஈர்க்கப்பட்டு அதே போல் பேச ஆரம்பித்த பழக்கம் தொடங்கி நான் வகுப்பில் பாட புத்தகத்தை வாசிக்க முதல் ஆளாக எழுவது வரை, போகிற வழியில் எல்லாம் சுவர் எழுத்துக்களை படித்துக்கொண்டே பயணித்தது வரை நான் ஒரு வானொலி தொகுப்பாளராய் ஆனதற்கும் அடித்தளம் இட்ட கனவுகள் பின் தொலைக்காட்சி துறை பணியில் இடம் பெற நினைத்தது, நடந்தது, இன்னும் திரைப்படம் நோக்கி வளர்ந்து கொண்டு இருக்கும் இந்த கனவு பயணத்தில் நான் 2009 பிப்ரவரியில் மக்கள் தொலைகாட்சியில் நுழைந்த பின் பல அருமையான சந்திப்புகள் எல்லா துறையிலும் பல மனிதர்களின் அனுபவ பகிர்வுகள். இனி என் வாழ்நாளில் நான் ஊடகம் அல்லது திரைத்துறை சார்ந்து இயங்க முடியாமல் போனால் கூட நினைத்து அசைபோடவும் ஒரு நல்ல ரசிகனாய் வாழவும் தகுதியடைய தொடங்கிவிட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்...

அதில் முக்கியமான நாள் இன்று.உள்ளே நுழைவதற்கு
முன்னேயே ஆயிரம் கேள்விகள் மனதில், சின்ன வயதில் இருந்தே கேள்விகள் கேட்டே பழக்கப்பட்டவன் ஆயிற்றே! முதலில் வரவேற்பறை சென்றோம் உள்ளே தகவல் சென்றதும் எங்களை அவருடைய தனி அறைக்கு அழைத்தார்.(அந்த அறை முழுக்க திரைப்படங்கள்.புத்தகங்கள், "உன் வாழ்வில் நீ நல்ல புத்தகங்களோடும், திரைப்படங்களோடும் அதிக நேரம் செலவழிக்க தொடங்கிவிட்டால் உன் வாழ்க்கை மிக அழகாகும்..". என்ற நான் எங்கோ எப்பொழுதோ படித்த
ஒரு ஆங்கில மேற்கோள் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.)

பிடல் காஸ்ட்ரோ மேல் கொண்ட அபிமானத்தால் தலையில் நிரந்தரமாய் தங்கிவிட்ட தொப்பி (நீல நிறம் ),பனி படர்ந்தது போல் அடர்ந்த வெண் தாடி,நல்ல பெரிய முக்கு கண்ணாடி,கழுத்தில் கர்ச்சிப் வைத்து ஸ்கௌட் ஷ்கால்ப் போல் ஒன்றை கட்டியிருந்தார்.அதற்குள் அவர் முகத்தை என்னால் அடையாளம் காணவே முடியவில்லை..சாய்வு நாற்காலியில் அவர் நிமிர்ந்து உட்கார்ந்திருந்தார். பொதுவாகவே நான் புகைப்படத்தில் ஒருவரை பார்ப்பத்தர்க்கும்,கான்பொளியில் பார்ப்பத்தர்க்கும்,அவரையே நேரில் பார்ப்பத்தர்க்கும் நெறைய வித்தியாசங்களை உணர்வேன், ஒரு புது பரிமானத்தில தெரிவாங்கனு கூட சொல்லலாம்.அதை இங்கேயும் உணர்ந்தேன்.

அப்பத்தான் அவர் மாணவர்களுக்கு காலை வகுப்பு முடிச்சுட்டு வந்துருந்தார், வணக்கம் சொல்லி உள்ளே நுழைந்தோம். உட்கார போன என்னை என் நண்பர் செய்கை காட்ட அந்த கம்பிர கலைஞனின் சம்மதத்திற்கு பிறகு அமர்ந்தோம். கோபக்காரர்,அப்புடி இப்பிடின்னு நெறைய பேர் சொல்லி கேள்விப்பட்டதால, அமைதியா இருந்தேன். அவர் பேசும் போது இருந்த ஒரு அமைதியும் நெருக்கமும் என்னை மடமடனு பேச வச்சுடுச்சு...

பாலுமகேந்திரா :- என்ன விசயம்?

நான்:- இந்த பத்து நிமிட கதைகள் குறும்படங்கள நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் தேர்ந்தடுக்கப்படிருக்கும் படங்களில் பரிசுக்குரிய படங்களை நீங்க தான் தேர்ந்தடுக்கணும்.

பாலுமகேந்திரா :- நா எதுக்குப்பா எதாவது இளம் இயக்குனர் வச்சு தேர்ந்தேடுத்துக்ககூடாதா ?

நான்:- இல்ல நீங்க தான் தேர்ந்தடுக்கணும் இது தான் எங்க எல்லோருடைய விருப்பம்.

பாலுமகேந்திரா :- சரி ஆனா இன்னிக்கு குடுத்து நாளைக்கு வேணும்னு சொன்னா
என்னால முடியாது கொஞ்சம் நேரம் வேணும்னு சொன்னார் .

நான்:- கண்டிப்பா சார், பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை அதற்குள் கிடைத்தால் போதும்.

பாலுமகேந்திரா :- ம்... சரி நான் சனி,ஞாயிறு ரெண்டு நாளும் என்னோட அடுத்த பட நடிகர் தேர்வுக்காக நா திருவண்ணாமலை போறேன்,

தொடர்ந்து அவரே பேச தொடங்கினர் அவர் உதவியாளரை அழைத்து எங்களுக்கு தேநீர் கொண்டு வர சொன்னார் வந்தது "ப்ளாக் டீ" குடிப்பீர்களா என்று கேட்டார் (நான் சின்ன வயதில் இருந்தே டீ காபி எதுவும் குடிப்பதில்லை ப்ளாக் டீ குடித்த அனுபவம் இல்லை ஆனாலும் ஆம்! என்றேன் நன்றாகத் தான் இருந்தது.அவரே தொடர்ந்தார்.தன அடுத்த படத்திற்க்கான சில முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார் (அது மீடியாக்களுக்கு தெரியாத விசயம் அதனால் பிரபலபடுத்தவில்லை) ஆச்சிரியம் இன்னும் அந்த ஆர்வம், அந்த படைப்புக்காக நானும் காத்திருப்பேன் .

நான்:-சார் கடைசியா என்ன படம் பார்த்திங்க?

பாலுமகேந்திரா:-அங்காடி தெரு படம் தான் பார்த்தேன் அந்த தீம் மிக அருமை, கதை வேறு தீம் வேறு வெளியூரில் இருந்து பிழைக்க வரும் இளைஞர்கள் பற்றிய ஒரு தீம் தேர்வு செய்தது ,சரி ஆனால் அந்த கதை மற்றும் கதாபாத்திர வடிவமைப்பின் சில நிறை குறைகளை பகிர்ந்து கொண்டார். என்ன ஒரு ஆழமான விமர்சனம்.

நான்:-இப்ப நல்ல படங்களுக்கு திரைஅரங்கு கிடைக்குறதில நெறைய பிரச்சனைகள் இருக்கே ?

பாலுமகேந்திரா:- எஸ். நம்ம சினிமா இப்ப மோனோபோலி ஆயிடுச்சு. நா அதனால தான் என் மாணவர்களுக்கு உலக சந்தைய பார்க்க சொல்றேன். ஒரு ஜப்பான் படமோ, கொரிய படமோ, இந்திய ரசிகர்கள் வெறும் சப்-டைட்டில் துணையா வச்சு விரும்பி தேடி தேடி பார்க்குறோமே, நம்ம படங்கள அவங்கள பார்க்க வைக்க வேண்டாமா? எப்பவும் ஒரு மாற்று
வழி இருக்கும் சோ அத பாருங்க அப்புடினார்! வாவ் ! தட்ஸ் மாஸ்டர்....

நான்:-உங்க சினிமா பட்டறை பற்றி?

பாலுமகேந்திரா:- சாகுற வரைக்கும் சினிமால இருக்கணும்,சினிமாவுக்கு எதாவது செய்துட்டு போகணும், அதனால ஆரம்பிச்சதுதான் இந்த ஸ்கூல் வீடு படத்துக்காக பாதி கட்டி முடிச்ச வீடு இது, மறுபடியும்ல தொடர்ந்து முதல் மாடி கட்டினேன், அப்புறம் முழுசா முடிச்சு என்னோட கதை நேரம் படப்பிடிப்பு ரெண்டுமுனு நடந்துது,அப்புறம் renovate பண்ணி இங்க இத ஆரம்பிச்சிட்டேன்.இங்க தமிழ் வழி கல்வி தான், ஒரு வருஷத்துக்கு 12 பேர் தான் " எழுத்து-இயக்கம்-ஒளிப்பதிவு-படத்தொகுப்பு " எல்லாமே கத்து கொடுத்து ஒரு creatorah உருவாக்கணும் அதான் என் ஆசை இங்க இருக்குற 12 பேர் கூ ட நா நெருங்கி பழகுறேன் அதனால அவங்கல நா நல்ல கலைஞர்களா உருவாக்க முடியும். நெறைய பேர் சேர்காததற்க்கு இதுவும் ஒரு காரணம்.அதே மாதிரி இங்க சான்றிதழும் கிடையாது.அவர்கள் வொர்க் தான் பேசும்.

நான்:-சார் எங்க தொலைகாட்சிக்காக ஒரு நேர்காணல் தர முடியுமா ?

பாலுமகேந்திரா:-இப்ப வேண்டாமே எல்லாம் பேசி பேசி சலிச்சுபோச்சு அப்புறம் ஒரு நாள் கண்டிப்பா தரேன்னு சொன்னார்.

எங்க நாம விட்ருவோமா இவ்ளோ நேரம் பேசினதே ஒரு குட்டி நேர்காணல் தான??? என்ன நான் சொல்றது !!!!!!!!!!!!!!



என்ன ஒரு பிளான்னிங் இதுதான் legends "டீ தீர்ந்து போச்சு இது என் மைன்ட் வாய்ஸ்" அவர் தற்பொழுது தான் புதிதாக அவர் அழைபேசி உபோயிக்க தொடங்கியிருந்ததார். அவர் ரசிகை ஒருவர் கொடுத்ததால் மட்டுமே அதை பயன்படுத்தி வந்தார்.அவர் கையாலேயே என் அழைபேசி என்னையும் வாங்கி எழுதி வைத்து கொண்டார்.வாங்க சுத்தி காட்டுறேன்னு சொல்லி இரண்டு மாடிகளிலும் ஒவ்வொரு அறையா அவர் விளக்கி சொல்ல பின்னாடியே நாங்க போனோம்.அவர் வீடு முழுக்க உலக திரைப்படங்களின் ஜாம்பவான்கள் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்,சத்யஜித் ரே,புகைப்படங்கள். பாலுமகேந்திரா படத்தின் கதாநாயகர்கள் கதாநாயகிகள்,அவர் படத்தின் வொர்க்கிங் ஸ்டில்ஸ்,என எல்லாமே கருப்பு வண்ண புகைப்படங்கள் தான், அழகாக போட்ரைட் செய்யப்பட்டது. அந்த "சினிமா பட்டறை" முழுக்க ஒரு புகைப்பட அருங்காட்சியகம் போல் ஜொலித்தது.

கடைசியில தயங்கிக்கிட்டே உங்க கூட ஒரு புகைப்படம் எடுத்துக்கலாமானு கேட்டேன். கேமரா வச்சுருக்கிங்களானு? கேட்டார், நா நண்பர் கிட்ட வாங்கி கொண்டு வந்திருந்த ஒரு ஹன்டி காம எடுத்து காட்டினேன். உடனே என்ன நெனைச்சாரோ அவர் உதவியாளர கூப்பிடார். ஒரு ஸ்டில் கேமரா வந்துச்சு. வெளிய போலோமனு கேட்டார் சரின்னு தலையாட்டுனேன் நாங்க முனு பேரு நின்னோம் என்ன மட்டும் தனியா நிக்க வச்சு அவர் கையாள டயிட் குளோசப்ல ஒரு போட்டோ எடுத்தார். அவர் கையாள எடுக்கிற திரைப்படம்ல நடிக்க கிடைக்காத வாய்ப்பு நிழற்படத்திளியாவது கிடைச்சது, எனக்கு ரொம்ப சந்தோசம்,அப்புறம் எல்லோரும் சேர்ந்து அவரோட உதவியாளர் எடுக்க போறார் ஒரு படம் "முடிஞ்ச வரைக்கும் டயிட் ஷாட்ல எடு" அப்புடின்னு சொன்னார்.அதான் பாலுமகேந்திரா.

கிளிக் "ஒரு சந்தோஷ நிமிடம் பதிவானது".



இடமிருந்து வலம்- 1 - முன் பதிவுகளில் அறிமுகப்படுத்திய திரு.பிரசாத் (இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் கூட), 2 -நண்பர் ராஜா, 3 - திரு.பாலுமகேந்திரா , 4 - நானே தான் ...


கை குடுத்து வழி அனுப்பி வச்சார். "என் வாழ்நாளில் எனக்கு இன்று ஏற்பட்டது போன்ற ஒரு பெருமித உணர்வை இன்னொரு நபருக்கு ஒருநாள் என்னிடம் ஏற்படச் செய்ய வேண்டும்.அதற்காக உழைக்க தொடங்க வேண்டும் என்கிற அணையா கனவோடு நான் வெளியேறினேன்".

GOLDEN DAYS NEVER COME AGAIN>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

எந்த ஒரு கலையும் அடுத்த தளத்திற்கு செல்வது அதன் நிகழ்கால பயணிகளின் கையில் தான் இருக்கிறது. ஒய்வு பெரும் வயதிலும் ஓயாத கனவுகளோடும்,கற்பனைகளோடும் திரு.பாலுமகேந்திரா நிகழ்த்தி வரும் இது போன்ற முயற்சிகளை ஒவ்வொரு நல்ல கலைஞர்களும் பின்பற்ற தொடங்கினால் தமிழும், தமிழர்களும் உலக அரங்கில் தனிஇடம் பெறுவது நிச்சயம்.

"கலை மனிதர்களுக்காக வளரட்டும்" "மனிதர்களிடம் மனிதம் வளரட்டும்"




ஆம்!!! ஒரு வெகுதூர பயணத்திற்கு தேவையான மிகப்பெரிய மாற்றமும்,ஊக்கமும்
நம் மண்ணிலும், நம் மனதிலும் தொடக்கமாகி விட்டது, என்ற நம்பிக்கையோடு நிறைவு செய்கிறேன்...

இன்னும் பல நாயகர்கள் வலம் வருவார்கள்.....

மு.வெ.ரா
26-10-10


பின்னூட்டம்:-நாள்-27-10-10

இன்று காலை 11 மணி ஒரு புது எண்ணிலிருந்து அழைப்பு யாரென்று ஹலோ சொன்னால் எதிர்முனையில் வெங்கட் நான் பாலுமகேந்திரா பேசுறேன்.. ஒரு நிமிஷம் ஷாக் அப்புறம் சந்தோசம் யார் போன் பண்ணினாலும் அமைதியா பேசுற நான் இவரோட குரல் கேட்டதும் ரொம்ப பணிவாதான் பேச ஆரம்பிச்சேன், அதே நேரத்தில நல்ல பழகின ஒரு நபர்கிட பேசுற மாதிரி ஒரு பீலிங்.அவர் அந்த குறும்படங்கள பத்தி புகழ்ந்து தள்ளிட்டார்.எங்க அலுவலக்த்தில நடக்கிற விழாவுக்கும் வரேன்னு சொல்லிட்டார்.ஹாப்பி அந்த விவரங்கள் விரைவில்>>>>>>>>>>>>>>>

Thursday, October 21, 2010

போட்டி-1 முடிந்தது....-யார் கொடுத்த பேட்டி இது? (பரிசு போட்டி-கடைசி தேதி-அக்டோபர்-31-2010)


ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருத்தருக்கு பரிசு!!!!!!!!!
சின்ன வயசில் இருந்தே பரிசுகள் மேல எனக்கு ஒரு கண்ணு!!!!!!!!!!! பரிசுகள பத்தி நா அடிக்கடி என்னோட முதன் முதலாய் நிகழ்ச்சி படபிடிப்புல கலந்துக்குற ஆளுமைகள் கிட்ட இப்படி சொல்றது உண்டு "கொடுக்கப்படும் பரிசின் மதிப்பின் காரணமாக இல்லாமல் அந்த பரிசை கொடுத்த நபரின் காரணமாக மதிப்பற்றதாக அமையறது, நீங்க பொக்கிஷமா பாதுகாக்கிற எதாவது விஷயம் இருக்கா? அப்படினுதான் கேட்பேன் பரிசுக்கான இலக்கணம் அப்புடின்னு நா நெனைக்குறது இத தான், இந்த கருத்து பொதுவா நமக்கு நம்மோட உறவினர் நண்பர்கள்கிட்டே இருந்து கிடைக்கிற பரிசுகளுக்கு பொருந்தும்.

ஆனா எல்லாரும விரும்புற பரிசுகள் போட்டில கிடைக்கிறது தான் அது பள்ளிக்காலம் தொடங்கி நம்ம வயது எவ்ளோ ஏறினாலும் எங்கேயோ நடக்கிற போட்டிகள சந்திக்க நேரும் போதோ இல்ல ஊடகங்கள் நடத்துற போட்டிகள பார்க்கும் போதோ பெரும்பாலானோர் மனசுல உண்டாகுற ஒரு உற்சாகத்தையும் சந்தோசத்தையும் வேற எந்த விஷயங்களும் நிச்சயமாய் தர முடியாது. அந்த போட்டியில வெற்றி தோல்வி அது ரெண்டாவது விஷயம் தான், பங்கேற்க்கனும்கிற ஒரு ஆர்வம் இருக்கே அது தான் முக்கியம் , அது மனித இயல்பும் கூட...

என்னோட பள்ளி கல்லுரிகள இந்த பரிசுகளுக்காக நா எவ்ளோ ஏங்கியிருப்பேன் என்று எனக்கு மட்டும் தான் தெரியும். LKG டு 5 TH வரைக்கும் நா படிச்சது பாளையம்கோட்டை செந்தில் நகர்ல இருக்கிற செயின்ட் ஜோசப் மெட்ரிக் ஸ்கூல் அங்க படிக்கும் போது அடி வாங்கினது பயந்தது டி.டில ஒளிபரப்பான சக்திமானுக்காக சனிக்கிழம லீவ் போட்டது என்னோட வாழ்நாளோட கோல்டன் டேஸ் தான்...

அங்க நா LKG படிக்கும் போது மாறுவேடப்போட்டியில கலந்துக்கிட்டேன்
எங்க அப்பா, தாத்தா எல்லாரும் காவல்துறையில பணிபுரிந்த ஒரே காரணத்துக்காக போலீஸ் வேஷம் போட்டுவிடப்பட்டு ,அப்புடித்தான சொல்லணும். நடந்தது என்னனு எனக்கு ஞாபகம் இல்ல வசனம் பேசுறதுக்கு பதிலா ரொம்ப நேரம் அழுதேனாம்,
அதனால சாக்லேட் பரிசா கொடுத்து ஓரமா உட்கார வச்சிட்டங்கனு அது மட்டும் தான் எங்க அம்மா சொல்லி எனக்கு தெரியும் முதல் போட்டியே தோல்வில முடிந்தாலும் என் கலை பயணம் தோல்வில முடியல் UKGல டான்ஸ் 5 ஆம் வகுப்புல கிளாஸ் பெஞ்ச தலைகீழ போட்டுட்டு கப்பலேறி போயாச்சு பாட்டு டான்ஸ்க்கு atmosphereல ஸ்கேல் வச்சி ஜூனியர் ஆர்டிஸ்ட் மாதிரி perform பண்ணினது, பின்ன ஒரு முணு வருஷம் கேப்.

திருப்பி ஆறாம் வகுப்புக்கு பாளையம்கோட்டை சேவியர்ஸ் ஸ்கூல் வந்து சேர்ந்தேன் அப்புறம் 8 ஸ்டாண்டர்ட்ல எங்க அலங்கரராஜ் சார் (இவர பத்தி பின்னாடி வேற ஒரு பதிவுல விளக்கமா சொல்றேன் .அவர் ஒரு creative legend) தமிழ் அய்யா ஒரு போட்டி வச்சார் நதிய பத்தி புகழ்ந்து ஒரு புது பட பாட்டு வந்துருக்கு அத பாடுறவங்களுக்கு அஞ்சு ரூபா பரிசுன்னு சொன்ன உடனே லஞ்ச் breakla சீக்கிரம் சாப்ட்டுட்டு எங்க ஸ்கூல் பக்கம் இருக்குற அந்தோனியார் ஸ்கூல்கிட்ட ஒரு பாட்டு புக் கடை இருக்கு அங்க போய் (அந்த பாட்டு கண்டுபிடிச்சுட்டேனே) நாங்க சினிமாவ மறப்போமா ரிதம் படத்தில வர்ற தீம் தனனா நதியே நதியே பாடல் தான் அது படிச்சு மனப்பாடம் பண்ணி மத்தியானம் அவர் periodliye பாடி சாரி வாசிச்சு எப்டியோ அந்த அஞ்சு ரூபா பரிச வாங்கிட்டேன் அது தான் நம்ம ரீ- என்ட்ரி திரும்ப ஒன்பது, பத்து guest performance தான் 11 த்தல வாங்கின நாடகத்தில இயக்கி முன்னால் முதல்வர் பெண் வேடமேற்று நானே நடித்து வாங்கின இரண்டாம் பரிசு..

அப்புறம் சேவியர் கல்லூரில பி.காம் ல வாங்கின ஒரு ரெண்டு பரிசு இவ்ளோ தான் நா வாங்கின பரிசுகள் அதனால பரிசுக்காக பின்னாடி ஒரு தனி இயக்கமே உருவாக்கணும் என்கிற நோக்கத்தோட வளர்ந்துட்டு வர்ற நான், முதல் முயற்சியாய் இனிமேல் என்னோட வலை பூல மாதம் ஒரு போட்டியும் ஒரு பரிசும் கொடுக்க போறேன் இந்த மாத போட்டி நா படித்த ஒரு பேட்டியோட ஒரு சில உரையாடல்கள் சிலவற்ற இங்க போஸ்ட் பண்றேன் யார் கொடுத்த பேட்டி இது கண்டுபிடிங்க போட்டி முடிந்த பிறகு அந்த பேட்டி சம்பந்தமா ஒரு பெரிய பின்னுட்டம் எழுத காத்துக்கிட்டிருக்கேன். பதில் தெரியலனா இந்த பதிவோட கமெண்ட்ஸ்ல question கேளுங்க நா க்ளு தரேன் ஓகேயா.............................


1.கேள்வி:- பெரும்பாலும் ஏன் நீங்க பேட்டி கொடுக்கிறதில ?

பதில்:- நான் பேட்டி கொடுப்பதை விரும்புபவன் இல்லை பத்திரிக்கையாளர்கள் நான் அல்ல எந்த நடிகர் சொல்வதையும் அப்படியே எழுதுவதில்லை. எனக்கு நெடு நாட்களாக ஒரு சந்தேகம் இருக்கிறது எதற்காக எப்போது பார்த்தாலும் என்ன படம் நடித்தீர்கள்? யாரை உங்களுக்குப் பிடிக்கும்? என்று கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
இதற்கு பதிலாக அகழ்வாய்வில் என்ன புதிதாகக் கண்டுபிடிக்கிறது? பால்வினை நோய்க்கு மற்று மருந்து கண்டுபிடிக்கப்பட்டிரிருக்கிறதா என்று கேளுங்களேன்? எனக்குப் பொருளாதாரமும் தெரியாது! கணிதமும் தெரியாது! நீங்கள் என்னிடம் கேள்வி கேட்பதைப் போலவே நானும் உங்களிடம் அதிகம் கேள்வி கேட்க விரும்புகிறேன்...


2.கேள்வி:-
மக்கள் உங்களிடம் நிறையத் தெரிந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள் அதற்காகத்தானே இந்தப் பேட்டி சந்திப்பு எல்லாமும்?
பதில்:- அதெல்லாம் சுத்தப் பொய்! படம் ஓடாத எந்த நடிகரையாவது நீங்கள் கேள்வி கேட்கச் செல்வதுண்டா? நல்ல வேளை,எனக்குச் சில படங்கள் நன்றாக ஓடியிருக்கின்றன, விவாதத்திற்கும் உள்ளாகி இருக்கின்றன, என் படங்கள் ஓடியிருக்காவிட்டால் நீங்களும் நானும் இங்கு உட்கார்ந்து பேச வேண்டிய சந்தர்ப்பம் உருவாகி இருக்காது.

3.கேள்வி:- அப்படி என்றல் யார் தான் கலைஞர்கள்?
பதில்:- ஒன்றை தானே கற்பனை செய்து அதை ஒரு கலை வடிவமாக வெளிப்படுத்தி மற்றவர்கள் அதை பாராட்டுமாறு செய்கிறானோ அவனே.


4.கேள்வி:- ஒரே ஒரு கடைசி கேள்வி உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?
பதில்:- இந்த பிரபஞ்சத்தைப் பார்க்கும்போது அதை உருவாக்கியவரை பற்றிய பிரமிப்பு இருக்கிறது.அந்த சக்தியை ஆராதிக்க விருப்பமிருக்கிறது.எனக்கு சாவைப் பற்றிய பயமில்லை. கடவுள் என் வாழ்க்கைக்குத் தேவையனவராக இருக்கிறார்.





சவாலுக்குத் தயாரா ?????????

க்ளு:-
நீங்கள் எதாவது பதில் சொல்ல முயற்சி செய்யுங்கள் அந்த பதிலின் தன்மையை பொறுத்து நான் நெறைய க்ளு தர காத்திருக்கிறேன்.....



இந்த போட்டியின் முடிவு :-

பத்திரிக்கையாளர்:-அப்படியானால் நடிப்பு ஒரு கலை இல்லையா?

மர்லான் பிராண்டோ :- உங்கள் இதயத்தின் ஆழத்தைத் தொட்டுச் சொல்லுங்கள்.உங்களுக்கே தெரியும்.சினிமா நடிகர்கள் எவரும் கலைஞர்கள் அல்ல.

பத்திரிக்கையாளர்:-முன்பெல்லாம் நீங்கள் பத்திரிக்கையாளர்களிடம் நிறைய பேசியிருக்கிறிர்களே?

மர்லான் பிராண்டோ :-தவறுதான்.இதுபோல நிறைய தவறுகள் செய்திருக்கிறேன். ஆனால் இது தவறு என்று தெரிந்தவுடன் நிறுத்திவிட வேண்டுமில்லையா? தொடர்ந்து அதே செய்வது மகத்தான தவறாகிவிடதா?

இந்த கேள்விகள் எல்லாம் அந்த நபர் கொடுத்த பேட்டியின் ஒரு பகுதி தான் முழு பேட்டியும் பதிவு செய்து உங்கள் நேரத்தை வீணாக்க விரும்பமால் (அது தான் அவரின் ஆசையும் கூட) சில முக்கியமான கேள்விகளை மட்டுமே இங்கு பகிர்ந்து கொண்டுள்ளேன். தற்பொழுதெல்லாம் ஊடகங்கள் மலிந்து விட்டன. ஆனால்
இந்த காலத்திலும் தங்களை வெளிகாட்டி கொள்ள கண்டவற்றை பேசி சமுகத்தில் தங்களை அறியாமல் தவறான பிரச்சாரம் செய்து வருபவர்கள் மத்தியில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுக்கு முன்னால் இந்த பேட்டி கொடுக்கும் போது ஒரு தனி மனிதன் அதுவும் சமுகத்தின் தாக்கத்தை ஏற்படுத்தும் துறையில் நாம் இருக்கிறோம். என்பதை உணர்ந்து ஒரு அவசியமான பேட்டியை ஒரு அவசியமில்லாத காரணத்திற்காக கொடுத்து ஒரு முன்னுதாரனமாய் இருந்திருக்கிறார்.

இந்த பேட்டியை ஒரு பிரபல எழுத்தாளரின் புகழ் பெற்ற தொகுப்பில் படிக்க நேர்ந்த போது தான் இப்படி ஒரு நடிகரால் பேச முடியுமா? ஒரு நல்ல நடிகர் என்றால் இவ்வளவு பொறுப்பு வாய்ந்தவராய், விசயம் தெரிந்தவராய் இருக்க வேண்டும் போல என்பதை நான் தெரிந்து கொண்டேன்.

இதெல்லாம் தெரிந்து கொள்ளாமல், திரையில் நடித்தவர்களை எல்லாம் நாளைய தலைவர்களாய் நினைத்து வாழ்வை தொலைத்து கொண்டிருக்கும் என் சக இளைய சமுதாயத்தை நினைத்து மனம் வேதனை அடைந்ததது உண்மை. இன்னும் வருத்தம் இந்த போட்டி அறிவித்து பல நாள் கடந்தும் என்னால் முடிவு அறிவிக்க முடியவில்லை. அதற்கு எதிர்பாரமால் எனக்கு ஏற்பட்ட உடல் நலக் குறைவு இடையில் தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு சென்றது.

(இந்த முறை நான் ஊருக்கு சென்று திரும்பிய பிறகு எனக்குள் பல மாற்றங்கள் ,கடந்த 2009 ஜனவரி 8 காலை நான் சென்னை வந்தேன். பல கனவுகளோடு பொதுவாக தென் மாவட்டங்களில் இருந்து படித்து முடித்தவுடன் எந்த வேலையோ அது சென்னையில் பார்த்தால் தான் திருப்தி என்று இங்கு வந்து இந்த ஜன சமாதியில் ஐக்கியமாகி கரைந்து கொண்டிருப்பவர்கள் ஒரு ரகம் என்றால், இரண்டாவது ரகம் நான் தமிழ் சினிமாவில் சரித்திரம் படைப்பேன்,என்று ரெயில் ஏறுபவர்கள் தான் அதிகம். நான் இரண்டாவது ரகம், நான் பிறந்ததது சென்னைதான் தாம்பரத்தில் இன்றும் இயங்கி வரும் கிறிஸ்துதாஸ் மருத்துவமனையில் 22 வருடங்களுக்கு முன்னால் என் அம்மாச்சி குடும்பம் முழுக்க சென்னையில் வந்து குடியேறியதால் என் அம்மாவிற்கு பிரசவம் ஆனது இங்கு, ஆனால் நான் பிறந்து ஆறு மாதத்தில் திருநெல்வேலிக்கு சென்று நான் வளர்ந்தது எல்லாம் திருநெல்வேலியில் தான் இன்றளவும் நான் என் சொந்த ஊராக கருதுவதும் திருநெல்வேலியை தான், இருந்தாலும் 20 வருடங்கள் கழித்து என் வாழ்வின் இரண்டாம் பகுதியை இங்கு தான் கழிக்க போகிறேன் அதுவும் எனக்கு பிடிக்காத ஒரு சுழலில் என்று அஞ்சினாலும் சினிமா என்ற ஒரு வார்த்தைக்காக ஊரில் கல்லூரி படிக்கும் போதே யாருக்கும் கிடைக்காத அதுவும் மிக குறைந்த பத்தொன்பது வயதில் ஒரு பண்பலை வானொலி அறிவிப்பாளராக கிடைத்த அறிய வாய்ப்பை, நல்ல சம்பளத்தை விட்டு விட்டு எல்லாம் மறந்து சென்னை வந்து சினிமாவையும் மறந்து திரைப்படங்களே இல்லாத மக்கள் தொலைகாட்சியில் பணிபுரிய தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கடந்து விட்டது. இவ்வளவு நாள் அனுபவம் தனி கதை அதை வேறு ஒரு பதிவில் சொல்கிறேன். அந்த அனுபவங்கள் கற்று கொடுத்த பாடம் என்னை மீண்டும் என் ஊருக்கே செல்ல அழைக்கிறது சினிமாவில் வெற்றி பெற முடியாததால் அல்ல, உண்மை திரைப்படங்கள் என்னவென்று புரிந்து கொண்டதாலும், இணைய புரட்சியால் உலகின் எந்த மூலையில் இருந்தும் என் கலை பணியை தொடரலாம், என்ற நம்பிக்கையாலும் என் சொந்த மண்ணில் ஏதாவது
செய்யாமல் ஓயக்கூடாது என்ற தீராத எண்ணத்தாலும் நான் திரும்ப நினைத்து அந்த நாளை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் நிலைக்கு இந்த பயணம் உணர்த்தியது என் வாழ்வில் ஒரு மிகப்பெரிய மாற்றம் தான். என் தாய் வழி மாமன்கள் 5 பேர் உண்டு அதில் எல்லோரும் எனக்கு நெருக்கம் தான் அதில் எங்கள் குமரன் மாமா இந்த தீபாவளிக்கு எங்கள் ஊர் வந்திருந்தார் அவர் சொன்ன ஒரு வார்த்தை என்னை ரொம்ப உறுத்தியது " டேய் நம்ம ஊரில் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற ஆசை நம்ம யாருக்கும் இல்ல நாம நம்ம இஷ்டத்துக்கு, நம்ம ஊரை மறந்து எங்க வேணாலும் உடனே கிளம்பி போய் செட்டில் ஆகிடுறோம்" உண்மை தான் திருநெல்வேலியில என்ன இல்ல? "திரைகடல் ஓடி திரவியம் தேடுன்னு" பெரியவங்க சொன்னது சரி தான் ஆனா தேடி அங்கேயே இருந்துருனு சொல்லல நமக்கும் அது ஆசையில்ல, ஆனாலும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அப்புறம் வேற வழி இல்லாம சொந்த ஊர் மறந்து பிழைக்க வந்த ஊரிலியே கலந்துர்றோம். அந்த நிலை எனக்கும், என் பிள்ளைகளுக்கும், வந்துற கூடாதுங்குற பயத்தில பல கனவுகளோடு காத்துக்கிட்டு இருக்கிறேன். இனிமேல் பல புது பயணங்கள், சந்தோசமா அதே நேரத்தில சீரியஸ் திட்டங்களோட வாழ்கைய அனுபவிக்கனும். நல்ல விசயங்கள் ஆயிரம் இருந்தாலும் சொந்த மண்ணின் நினைவுகள் மறந்து ஆயிரம் வெற்றிகள்,பெயர்,புகழ் கிடைத்தாலும் மனதின் ஒரு ஓரத்தில் சந்தோசம் இன்றி தவித்து கொண்டிருக்கும் பலரின் வரிசையில் நானும் சேர்ந்து விடாமல் சிறிது மாற்றி யோசிக்க முயற்சிக்கிறேன்,மற்றதை பொறுத்திருந்து பார்ப்போம். பாருங்க இப்படி தான் நா எப்பவும் எதையோ பேசிக்கிட்டிருக்கும் போது இடையில வேற பக்கம் டைவேர்ட் ஆகிறேன் என்ன பண்றது சின்ன வயசில வகுப்பறையில தொடங்கின பழக்கம் போகுமா? )

பின் என் அலுவலகத்தில் இருந்த 5 நிகழ்ச்சி தயாரிப்பாளர்களில் ஒருவர் பனி விலகல் ஆக கடந்த வாரம் முழுக்க நான் படப்பிடிப்புக்கு சென்றதாலும் கொஞ்சம் தாமதமாகி விட்டது, நெறைய பேர் பார்த்து படித்ததோடு சரி போட்டியில் கலந்து கொள்ளவில்லை, ஆனால் முதல் பதிலே சரியாக சொல்லி வெற்றி பெற்றவர் திரு.செல்லையா முத்துசாமி அவர்கள் சரியான பதில் மற்றும் அவர் பற்றிய விவரங்கள் கிழே ......



chelliah muthusamy / செல்லையா முத்துசாமி(அவருக்குரிய பரிசு அவரை சென்று சேர்ந்துவிடும்.)



Hometown: சத்திரகொண்டான், திருநெல்வேலி மாவட்டம் Currently: சென்னை, தமிழ்நாடு
Occupation: ஒளிப்பதிவாளர்

அவர் பற்றிய விவரங்கள் அறிய " http://chelliahmuthusamy.blogspot.com/-இந்த லிங்க்-அய் காப்பி செய்து "இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரெர்" டாஸ்க் பார் இல் பேஸ்ட் செய்து தெரிந்து கொள்ளவும் "


விடை:-
பேட்டி கொடுத்தவர் "மர்லன் பிராண்டோ"

மார்லன் பிராண்டோ

மார்லன் பிராண்டோ ஒரு திரைப்பட நடிகர். த கோட்ஃபாதர் உட்பட பல படங்களில் நடித்தவர். இரு தடவை ஆஸ்கார் விருது வென்றார். அமெரிக்காவின் நெப்ரஸ்காவில் பிறந்தவர். 2004 இல் எண்பது வயதில் மரணமானார்.

( http://www.wsws.org/tamil/articles/2004/july/120704_MBrando

http://en.wikipedia.org/wiki/Marlon_Brando


(இந்த லிங்க்-அய் காப்பி செய்து "இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரெர்" டாஸ்க் பார் இல் பேஸ்ட் செய்து இந்த கட்டுரை தொடர்பான மேலும் பல செய்திகளை தெரிந்து கொள்ளவும் )



Marlon Brando, Jr.
Born:April 3, 1924(1924-04-03)
Omaha, Nebraska, U.S.
Died July 1, 2004(2004-07-01) (aged 80)
Los Angeles, California, U.S.
Occupation Actor/Film director
Years active 1944–2004
Spouse Anna Kashfi (1957–1959)
Movita Castaneda (1960–1962)
Tarita Teriipia (1962–1972)
Marlon Brando, Jr. (April 3, 1924 – July 1, 2004) was an American actor who performed







இந்த மாத போட்டி விரைவில்>>>>>>>>>.