ராமு 6.3அடி உயரம் கொஞ்சம் ஸ்மார்ட் பார்க்கிறதுக்கு கொஞ்சம் முரடா தெரிஞ்சாலும் மனசளவில ரொம்ப சாப்ட் நேச்சர் தான்.
காதல் பண்றதுக்கு பயந்து வருஷத்த கடத்திட்டான் 29 வயசில அவன் வீட்டுலயே ஒரு நல்ல பொண்ணா பார்த்து அவனுக்கு கல்யாணத்த முடிச்சு வச்சுட்டாங்க...
அவன் மனைவிக்கு சாப்ட்வேர் கம்பெனில வேலைங்கறதால காலைல சீக்கிரமாவே கிளம்பி போயிருவாங்க. அதனால தினமும் குழந்தைக்கு சாப்பாடு கொடுத்து கிரீச்ல கொண்டு விடுறது ராமுவோட பொறுப்பு. குழந்தைய சாப்பிட வைக்கிறதுக்குள்ள தினமும் அவனுக்கு போதும் போதும்னு ஆயிடும் .
கடைசியா அதுக்கும் ஒரு வழி கண்டுபிடிச்சான் ரோட்ல நின்னு போற வர்ற ஆட்கள குழந்தைக்கு காட்டி "சாப்பிடு இல்ல, அந்த மாமாக்கிட்ட பிடிச்சு கொடுத்துருவேன்," "இந்த தாத்தாகிட்ட பிடிச்சு கொடுத்துருவேன்," இப்படி பயமுறுத்தியே தினமும் சாப்பிட வச்சுட்டான். இன்னொரு பக்கம் போறவர்றவங்கள்ல குழந்தைய வச்சு கலாய்க்கிரதில இவனுக்கு ஒரு சந்தோசம்.
இன்னைக்கும் அப்படி அவன் குழந்தைக்கு சாப்பாடு கொடுத்துகிட்டு வீட்டுக்குள்ள நுழையுறான் அப்ப ஜன்னல் ஓரத்தில ஒரு சத்தம் "ஏய் கஸ்துரி பாரு ராமுமாமா வந்துட்டார் சாப்பிடுரியா இல்ல உன்ன தூக்கிட்டு போய்டுவார் சீக்கிரம் சாப்பிடுன்னு" ஒரு குரல்...
ஒரு நொடி அதிர்ச்சி ஆகி அந்தபக்கம் எட்டி பார்க்கிறான் ராமு,
'அவன் முகத்த பார்த்ததும் சத்தம் போட்டு அழ ஆரம்பிக்கிற குழந்தை மெதுவா சாப்பிட வாய திறக்குது '!!!
இப்படிக்கு
மு.வெ.ரா-
திருநெல்வேலியிலுருந்து
மார்ச் மூன்றாவது வாரம்...2011