"எல்.ஐ.சி பில்டிங் பார்த்து ஆச்சிரியபட்டதுலாம் அந்த காலம். இப்ப சென்னையில 13 ,14 பில்டிங்கலாம் சாதாரணமா போச்சு " ஆச்சரியமா சொல்றான், 16அடுக்கு மாடி குடியிருப்போட மொட்டை மாடியில நிக்கிற மோகன்.
"ஆமாடா சென்னை பாப்புலேசன் டே பை டே இன்க்ரீஸ் ஆகுதே தவிர 1 % கூட குறையிரதில்ல", இது அவன் மாமா...
விருதுநகர் பக்கத்தில ஒரு சின்ன கிராமத்துலேர்ந்து வேலைதேடி சென்னையில மாமா வீட்டுக்கு வந்துருக்கான் மோகன்...
வந்த அன்னைக்கு ஊர் சுற்றி பார்க்க முடியலைனாலும், மாடியில நின்னாவது ஊரை பார்த்துரனும்னு காலையிலேயே டிபன் சாப்பிட்டதுலேர்ந்து மொட்டை மாடியிலேயே குடியிருக்கான். திடீர்னு ரெண்டு முணு விமானம் கிராஸ் ஆகுது. இவ்வளவு குளோசா விமானம் பறக்கிறத பார்த்ததும் சந்தோசத்துல குதிக்கிறான் மோகன். கொஞ்ச நேரத்தில 10 , 15 விமானம் வரிசையா வர ஆரம்பிச்சதுமே அடிவயித்துல ஏதோ உருள ஆரம்பிச்சிடுச்சு....
கீழ இறங்கி வீட்டுக்குள்ள வர்றான். நியூஸ்
தொடர்ந்து விமானங் கள் வந்துகிட்டே இருக்கு. "சீனா தமிழ்நாட்ட பிடிச்சுருவாங்க, அங்கங்க குண்டு போடுறாங்களாம்," அப்படின்னு ஒரு குரல்.... மரணபயத்தில என்ன செய்யன்னு தெரியாம, "சத்தம் போட்டு கத்துறான் " மோகன் .....
அவங்க அம்மா பயந்துட்டாங்க, "டேய் மோகன் நைட் ஷோ சினிமா போகாத, பகல்ல தூங்காதேனா கேட்கிறியா ? சாயங்காலம் உனக்கு சென்னைக்கு டிரெயின் ஞாபகத்தில இருக்கா.....?
ஒரு பெருமூச்சு விட்டு தூக்கம் கலைஞ்சு எந்திரிக்கிற மோகன் மனசில ஒரு கேள்வி, " கனவில சில போர் விமானங்கள பார்த்ததுக்கே இப்படினா நெஜத்தில தினம் தினம் போர் வலிய அனுபவிக்கிற நாடுகளையும் அங்க வாழுற மக்களையும் நெனைச்சு பார்த்தான்" ...
ஒரு சில நிமிஷம் அமைதியாவே கழிஞ்சது... அப்ப படுக்கையிலிருந்து எந்தரிச்ச மோகன் மூஞ்ச கழுவ போயிட்டான்.....
ஒரு சில நிமிஷம் அமைதியாவே கழிஞ்சது... அப்ப படுக்கையிலிருந்து எந்தரிச்ச மோகன் மூஞ்ச கழுவ போயிட்டான்.....
திருநெல்வேலியிலிருந்து
மு.வெங்கட்ராமன்.....
மு.வெங்கட்ராமன்.....
ஏப்ரல் முதல் வாரத்தில் ஒரு நாள்...2011
1 comment:
Well
Post a Comment