Saturday, February 19, 2011

" ராணி "


மகேஷ் 5 நாளா வேலைக்கே போகல....

   அவங்க தாத்தா இறந்தப்பகூட அவங்க அப்பா இவ்வளவு சோகமா இருக்கல...

   அந்த வீடே களையிழந்து போயிருந்துச்சு...

  மகஷோட அண்ணி சித்ரா எல்லாரையும் சாப்பிட கூப்பிடுறா ?

   " அவன் அப்பாவுக்கு சித்ரா ராணிய என்னைக்கோ திட்டுனத நினைச்சு கோபம் வந்துச்சு"  சாப்பாடு வேணாம்ங்கற மாதிரி மூஞ்சிய திருப்பிக்கிட்டார்.

  "நல்ல குடும்பம்டானு" திட்டிட்டு அடுப்பங்கரைக்குள்ள போன சித்ராவும் ராணிய நினைக்க ஆரம்பிச்சிருந்தா...

   அப்ப உள்ள வர்ற மகஷோட அண்ணன் " டேய் மகேஷ் ஏண்டா எல்லாரும் இப்படி இருக்கீங்க ' ராணி 'என்ன இந்த வீட்டு பொண்ணா? நாய் தானடா செத்து போச்சுனா என்னடா? வேற வாங்கிக்கலாம்  அப்படின்னு சொல்லிட்டு சாப்பிட போயிட்டான்... "




    கொஞ்ச நேரம் வீடே அமைதியாயிருந்தது...

    தீடிர்னு எல்லாருக்கும் கேட்கிற மாதிரி சத்தமா ஒரு குரல்  "நா பாசமா நாய் வளர்த்ததும் போதும் பொசுக்குனு அது போனதும் போதும் இனி நாய் பத்தி பேச்ச கூட இந்த வீட்டுல யாரும் எடுக்க கூடாது" மகேஷ் அப்பா கோபமா பேசிட்டேவெளியில வந்தாரு ...

   அப்ப பக்கத்தில ஒரு நாய் குரைக்கிற சத்தம் விடாமா கேட்குது ...

 
மகேஷும் அவன் அப்பாவும் ஜன்னல் வழியா எட்டிப்பார்க்கிறாங்க...

   அந்தபக்கம் பக்கத்து வீட்டு சின்ன பையன் குரல் 'மகேஷ் அண்ணா இந்த நாய்க்குட்டிய பாருங்க எங்க அப்பா ராஜபாளையத்துலேர்ந்து வாங்கிட்டு வந்துருக்காரு'. " நம்ம ராணி நாய்க்குட்டி மாதிரியே இருக்குல்ல".....

   அப்பத்தான் அஞ்சு நாளைக்கு பிறகு மகேஷ் வீட்டுல எல்லாரோட முகத்துலையும் திரும்பவும் சந்தோசம் வந்துச்சு...
 
                                                            




இப்படிக்கு

மு.வெ.ரா...
திருநெல்வேலியிலிருந்து


காலம்:- பிப்ரவரி முன்றாவது வாரம்...2011

No comments: