Saturday, February 26, 2011

குற்றம் நடந்தது என்ன?



        வினோத் எம்.பி.ஏ முடிச்சிட்டு உள்ளுரிலேயே வேலை பார்த்துட்டிருக்கான். படிச்ச எம்.பி.ஏக்கும் அவன் பாக்குற வேலைக்கும் எந்த சம்பந்தமும் இல்ல,அது கல்யாண பத்திரிக்கைக்காக கஷ்டப்பட்டு படிச்சு முடிச்சது, நாலு செமஸ்டர் ஒரு புராஜெக்ட் ஒழுங்கா முடிச்சு டிகிரியும் வாங்கிட்டான்.

         ஆனா என்ன சப்ஜெக்ட்லாம் படிச்சான்? சிலபஸ் என்ன? போன்ற ஆக்க பூர்வமான கேள்வியெல்லாம் கேட்டிங்கனா "சாரி பாஸ் தெரியலனு" பதில் சொல்ல அவன் வெட்க்கபட்டதே இல்ல,

      நீங்க வருத்தப்பட்டு அவன் கல்லூரியையோ பாடம் எடுத்த ஆசிரியரையோ இவனெல்லாம் எப்படி பாஸாக்கினாங்க "னு திட்ட வேண்டாம் பாவம் அவங்க...

        எல்லாம் நாட்டு நடப்பு, இன்னைக்கு தேதியில தினமும் டிகிரி காப்பி குடிக்கி​றவங்கல விட டிகிரி வாங்கினவங்க எண்ணிக்கை அதிகம். அந்த கூட்டத்தில ஒருத்தன் தான் நம்ம வினோத். பொது அறிவில ரொம்ப ஸ்ட்ராங். தினமும் காலையில எந்திரிச்ச உடனே முணு பேப்பராவது படிப்பான்,இல்ல புரட்டுவானு வச்சுக்கோங்களேன்...

        இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை வேற பேப்பர் வந்ததே கொஞ்சம் லேட் தான்"அதையும் பக்கத்து வீட்டில எடுத்துட்டு போயிட்டாங்க."எப்ப தான் இந்த ஒ.சி பேப்பர் படிக்கிற பழக்கம் ஓயுமோ அப்புடி"னு கொஞ்சம் சத்தமாவே சொல்லிட்டான்...

      ஜன்னல் வழியா பக்கத்து வீட்டில இருந்து ஒரு கை மட்டும் இன்னைக்கு  பேப்பர வினோத் வீட்டுக்குள்ள தூக்கி போட்டுது. பேப்பர எடுத்தவன் ஒரு தடவை தேதியெல்லாம் சரியா இருக்கானு செக் பண்ணிட்டு படிக்க ஆரம்பிச்சான்.

     முதல் பக்கத்திலயே அவன் ஸ்கூல் பிரெண்ட் தன்ராஜோட போட்டோவ பாக்குறான்.ஒரு நிமிஷம் யோசிச்சவன். :"அம்மா இங்க வாயேனு...கத்தி கூப்பிடுறான்..."


    அடுப்படியில சுவாரசியமா எப்.எம் கேட்டுக்கி​ட்டிருந்த அவங்க அம்மா அந்த சத்தத்தையும் தாண்டி வந்த வினோத்தோட குரலால  என்னமோ ஏதோனு பயந்து வெளியில வர்றாங்க. "என்னடா என்னாச்சு...ஏன் இப்படி பதறுற?"

     அவங்க பேசின வார்த்தை முடியிறதுக்குள்ள வினோத் ஆரம்பிச்சட்டான் "அம்மா ரெண்டு நாளைக்கு முன்னாடி நம்ம ஊர்ல நடந்த அந்த பாதரியார்  கொலை வழக்குல தன்ராஜ கைது பண்ணிருக்காங்க மா...." அப்படின்னான்..


   " இவன் ஒருத்தன் இங்க மனுஷிக்கு ஏற்கனவே பி.பி சுகர்லாம் ஏறி போய்கிடக்கு, இப்புடி காலங்காத்தாலேயே டென்சன் ஆகுற மாதிரி  கொலை,கொள்ளைனு பேசிகிட்டிருக்க,எந்த தன்ராஜுடா? "அப்படினாங்க வினோத் அம்மா.....


    அதான்மா நா 10th படிக்கும் போது டிராமால நா போலீஸ் வேஷம் போட்டேன் அவன திருடன் வேஷம் போட சொன்னதுக்காக என் கூட சண்டை போட்டுட்டு பேசாமலே போனானேமா அந்த தன்ராஜ்மா...அவன் எப்படிமா இப்படி?....


                    

      அப்பஅப்ப  அங்கங்க பாப்பேன் பி.ஏ.எகனாமிக்ஸ் படிச்சிடிருந்ததா சொன்னான்.செல் நம்பர்லாம்  கூட வச்சுருந்தேன் எல்லாம் மிஸ் பண்ணிட்டேன்.ரொம்ப கஷ்டபட்ட குடுமபம்மாங்கிறான்.
    
    " டேய் வினோத்...அந்த தன்ராஜ் உன் பிரென்ட்னு யார்க்கிட்டயும் போய்
உளறிக்கிட்டிருக்காதடா உன்ன கூப்பிட்டு விசாரிக்கபோறாங்கனு" சொல்லிட்டு உள்ள போயிட்டாங்க"வினோத் அம்மா ...

     வினோத் இந்த வார்த்தைய அவங்க அம்மா கிட்ட இருந்து எதிர்பார்க்கல,உலகத்திலேயே உயர்வான பாசத்த தர்ற உறவு அம்மா தான் ஆனா அது அவங்க அவங்க பிள்ளைங்க மேலதான்.

    அந்த போட்டோவ திரும்ப திரும்ப பார்க்கிறான் வினோத்.அவனுக்கு மனசு என்னமோ மாதிரி ஆயிடுச்சு. பல வருடங்களா ஸ்கூல் பிரெண்ட்ஸ்லாம் பார்க்க முடியலையேனு வருத்தபட்டுக்கிட்டு இருந்த வினோத். இனிமேல் யாரையுமே பார்க்காட்டா கூட பரவாயில்ல ஆனா தன்ராஜோட நிலைமையில யாரையும் பார்த்துரக்கூடாதுனு மனசுக்குள்ள நெனைசுக்கிட்டு கையில இருந்த பேப்பேர்ல அடுத்த பக்கத்த மெதுவா திருப்பி படிக்க ஆரம்பிச்சிட்டான்....




இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்.
திருநெல்வேலியிலிருந்து  

காலம்:- பிப்ரவரி நான்காவது வாரம்...2011

No comments: