Friday, April 29, 2011

கனவும் தொழிற்சாலையும் !!!!!





ட்ரீம் ஸ்டார் சாய் வாழ்க ! ட்ரீம் சாய் ஸ்டார் வாழ்க !

நாளைய முதல்வர் சாய் வாழ்க!


இப்படித்தான் இரண்டு நாளா நடிகர் எஸ்.அழகுமணி(S .AlagumanI -SAI ) சுருக்கமா ட்ரீம் ஸ்டார் சாய் வீட்டு முன்னாடி ஒரே சத்தம் ஆர்பட்ட்மாய் இருக்கு.

ஒவ்வொரு நிமிஷமும்  ஏகப்பட்ட போன், எஸ்.எம்.எஸ் இ-மெயில்னு உலகம் முழுக்க இருந்து வாழ்த்துக்கள் குவியுது .

         அந்த முன்றெழுத்து பெரிய கம்பெனி பட வியாபாரத்துக்குள்ள வந்தததும் தமிழ் சினிமா வியாபாரமே சுருங்க ஆரம்பிச்சிடுச்சு. ஆனா சாய்யோட மார்க்கெட் மட்டும் விறுவிறுன்னு ஏற ஆரம்பிச்சுடுச்சு.

       தெரிஞ்சோ தெரியாமலோ அந்த முன்றெழுத்து சினிமா பட கம்பெனி ரிலீஸ் பண்ணினதுல நெறைய படம் சாயோடது, படம் நல்லா இருந்தாலும் இல்லாட்டாலும் மல்டிப்ளெக்ஸ் சத்யம் தியேட்டர்ல ஆரம்பிச்சு சாத்தான்குளம் லட்சுமி தியேட்டர் வரைக்கும் ரிலீஸ் பண்ணி வேற எந்த படமும் வர விடாம குறைஞ்சது 50 நாளாவது ஓட்டினது, அப்புறம் 5 நிமிஷத்துக்கு ஒருதடவை டி.வியில டிரைலர், ப்ரோமோ,சிறப்பு நிகழ்ச்சிகள்னு போட்டு தினறடிச்சதுல இப்ப சாய் பட்டி தொட்டியெல்லாம் பேமஸ்.


       சாதாரண மிமிக்ரி ஆர்டிஷ்டா ஸ்டேஜ்ல ப்ரோக்ராம் பண்ணிட்டிருந்தவன், டிவிக்கு போனான் ஒரு ரெண்டு முனு வருஷம் காம்பயரிங் பண்ணிட்டிருந்த எஸ்.அழகுமணி எப்பிடியோ வாய்ப்பு கிடைச்சு சினிமாக்கு போனான். இப்ப ட்ரீம் ஸ்டார் சாய் ஆயிட்டான்.அதுல கடைசியா அவன் நடிச்ச அஞ்சு படமும் அந்த முன்றெழுத்து பெரிய கம்பெனி வெளியிடு அதனால எங்கேயோ போயிட்டான் சம்பளம் 4 சி யாம். அதுமட்டுமா சென்ட்ரலும் அவங்ககிட்ட இருந்தனால நடிகர் திலகத்துக்கே கிடைக்காத தேசிய விருது இப்ப சாய்க்கு கிடைச்சுருக்கு. அப்புறம் தான் இந்த பாராட்டு,பேட்டி, எல்லாம்...அந்த படகம்பெனியோட  நாற்பது சேனல் மத்த மீடியா வேற ஸோ பேட்டி கொடுத்தே டயர்ட் ஆயிட்டான் சாய்.

       அந்த விருதுக்கு தான் இப்ப பாராட்டு விழா அவன் சொந்த ஊர்ல நடக்க போகுது அதுக்கு தான் போயிகிட்டிருக்கான்.

       இவன் கேமராவில மூஞ்ச காட்டின காலத்தில இருந்தே இவங்க வீட்டுல பெரிசா எடுத்துக்கல, அவங்க அம்மாவுக்கு பையனுக்கு கவர்மென்ட் உத்தியோகம் கிடைக்கலயேனு கவலை. இதனால தான் சாய் அவன் அம்மா போன் பண்ணினா நல்லா இருக்கியான்னு கேக்கிறதோட சரி . ஊருக்கு போய் ரெண்டு, முணு வருஷம் ஆச்சு. இப்பகூட அவங்க அம்மா விருத பாராட்டி ஒரு போன் பண்ணலியேனு கோபத்தில தான் இருக்கான்.

       ஊருக்குள்ள வந்துட்டான். கார் அவன் வீடு இருக்கிற தெருவுக்குள நுழைய முடியாததால தெரு முனையிலேயே  இறங்கி நடக்குறான்.இவன பார்க்க ஒரே கூட்டம், ஒரு காலத்துல இவன்லாம் எங்க உருப்பட போறான்னு திட்டுனவணுங்க எல்லாம் இப்ப பொன்னாடை போத்தி வரவேற்கிறாங்க.

         வீட்டுல நம்மள யாரும்னு பாரட்டலியேங்கற வருத்தத்தோட வீட்டுக்குள்ள நுழையுறான் சாய். அப்பா அவங்க அம்மா "ஏல அழகுமணி என்னடா இப்புடி கருத்து போயிட்ட, வயிறெல்லாம் ஒட்டிப்போச்சு சாப்பிடறியா இல்லியா " இந்தா முதல்ல கிழக்கு பக்கமா  திரும்பி நில்லுனு சொன்ன அவங்க அம்மா சத்தம் போட்டு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க, " ஊர்க்கன்னு உறவுக்கண்ணு நாய்க்கண்ணு பேய்க்கண்ணு கொள்ளிகண்ணு மெட்ராஸ்காரன் கண்ணு பக்கத்து வீட்டு குண்டம்மா கண்ணு ம்...ம்... போதும் போதும் தூ தூ முனு தடவை துப்பு " நெட்டி முரிக்கிறாள்.

         அவன் அம்மா குரல் அடங்குறத்துக்குள்ளேயே உள்ளேர்ந்து ஒரு குரல். "அழகண்ணா வந்துட்டியா உனக்கு பிடிச்ச நெய்வலங்காய் செஞ்சு வச்சுருக்கேன். மாவா திண்பியே வா வா சிக்கிரம் வா.....".

முதல் முறையாக கிளிசரின் போடமால் ட்ரீம் ஸ்டார் சாய் கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் வடிகிறது............


" டேக் .ஓகே."


இப்படிக்கு
மு.வெங்கட்ராமன் திருநெல்வேலியிலிருந்து......
ஏப்ரல் முன்றாவது வாரம்...2011

1 comment:

T.MUTHU SELVAM said...

very nice ur short stories............