" சே ரேஷன் கார்ட்ல வீட்டு டோர் நம்பர் தப்பா இருக்குனாங்க மாத்துனேன், வோட் கார்ட்ல அப்பா பேர்ல கூட ஒரு A போட்டுட்டாங்க அத மாத்த சொன்னாங்க மாத்துனேன், அப்புறம் பெர்த் சர்டிபிகேட்ல என் இன்சியல் தப்பா இருக்கு மாத்துனாங்க அதையும் மாத்துனேன்."...
"ஹ்ம்....இப்படி அவங்க கொடுத்ததெலாம் தப்பா கொடுத்துட்டு எனக்கு இப்ப மூணு மாசமா பாஸ்போர்ட் கொடுக்காம இழுத்தடிக்கிறாங்க . இன்னும் போலீஸ் என்கொயரி,லஞ்சம் அப்பப்பா முடியலடா தீபன்னு" புலம்பி முடிக்கிறான் சங்கர் .ரெண்டு பெரும் ஸ்கூல்ல ஒன்னா படிச்சவங்க.ரொம்பா நாளைக்கு பிறகு பார்த்துகிட்டாங்க.
தீபன் ஒரு இலங்கை தமிழர். அகதியா இந்தியா வந்து இருபது வருஷங்களுக்கு மேல ஆகி போச்சு. கூலி வேலை தவிர பெரிசா எந்த வேலைக்கும் போக முடியல, என்னைக்காவது சொந்த நாட்டுக்கு போயிறலாம்ங்கற நம்பிக்கையில வாழ்க்கைய ஓட்டிட்டுருக்கான். எப்பயாவது சங்கர ரோட்டல பார்த்தா பேசுவான்.
ரொம்ப நேரம் அமைதியா சங்கர் சொன்னத கேட்டுகிட்டிருந்த தீபன் பேச ஆரம்பிக்கிறான் .." டேய் சங்கர் எங்கடா நம்ம தமிழ்நாட்ட நம்பி தான் இங்க வந்தோம். கஷ்டப்பட்டு 50,000௦௦௦ சேர்த்து வச்சுருந்தேண்டா. ஏஜென்ட் ஒருத்தன் இத்தாலில வேலை வாங்கி தரேன்னு கேரளா கூட்டிட்டு போய் அடிச்சு விரட்டிட்டான்" எல்லாம் போச்சுடா அப்படிங்கறான்.
அவனை ஆறுதல் படுத்திற மாதிரி சங்கர். "சரி விடுடா மாப்பிள்ளைங்கறான் அதுக்கு தீபன்... நாம பிரியறது கடவுளுக்கே பொறுக்கல போல " னு சொல்லிகிட்டிருக்கும் போதே தீபன் செல்லுக்கு ஒரு போன் வருது யார்டானு கேட்கிறான் சங்கர்? டேய் நம்ம கூட டெண்த்ல படிச்சானே சுரேஷ்டா அப்படிங்கறான் தீபன்.
போன வாங்கி பேசுறான் சங்கர் "டேய் சுரேஷ் டக்னு உன் முகம்
ஞாபகத்துக்கு வரல, வாலிபால் விளையாட வருவியா ? இல்ல குமார் சார் கிளாஸ்ஸா ? என்.சி.சி ல இருந்தியான்னு விடாம பேசிகிட்டே போனான் சங்கர்.
மறுமுனையில் சுரேஷ் "டேய் சங்கர் என்ன எல்லாரும் உளுந்தவடைனு கூப்பிடுவாங்கலேடா"
இப்ப சங்கர் கண்டுபிடிச்சிட்டான் "டேய் உளுந்தவடை ரொம்ப சந்தோசம்டா ! உன் போன் நம்பர் கொடுடா டெய்லி எஸ்.எம்.எஸ் அனுப்புறேன். அப்புறம் உன் ஆளு மூண்டகண்ணி எப்படி இருக்கா ? நம்ம பிரெண்டு பி.பி உங்க ஊர்தான டா அவன பார்த்தியா? நம்ம பாம்பு மெட்ராஸ் போய்ட்டான் தெரியுமா! கொசு என் கூட தான் வேலை பார்க்குறேண்டா " அப்படின்னு விடாமல் பேசிக்கொண்டே போனான் சங்கர் .
உடனே சுரேஷ் " ஏய் சங்கர் ஒரு நிமிஷம் நில்லுடா எனக்கு பாஸ்போர்ட் ஆபிஸ்ல வேலை கிடைச்சுருக்கு. அத சொல்லத்தான் போன் பண்ணினேன். தீபன்ட்ட சொல்லிரு பேலன்ஸ் இல்ல கட் பன்னுறேண்டா எதவும் ஹெல்ப்னா கூப்பிடுறா மச்சான்னு போன வைக்கிறான்..........
இப்ப சங்கர் தீபன பார்த்து லேசா சிரிக்கிறான் .......
இப்படிக்கு
திருநெல்வேலியிலிருந்து.மு.வெங்கட்ராமன்
காலம்:-ஜூன் இரண்டாவது வாரம் 2011.
2 comments:
Sari Sari .. Kadhai Enge ...?
Kopuvum Naanthan . . .
Hi ... Hi ...
@உதவி இயக்கம்--- இந்த லொள்ளு தானே வேங்காங்க்றது??? பாவம் அவரும் ஏதோ நாலு புக் ல இருந்து கதைய உருவி உருட்டி திரட்டி ஓர் கதைய ரெடி பண்ணி ப்ளாக் ல போட்டா இப்படியா கிண்டல் பண்றது???? விடுங்க வெங்கட் அண்ணா அரசியல் ல இதெல்லாம் சாதாரணம்..... ஆமா கதை எங்க????
Post a Comment