அ...............க ஒரு கவிதை :- 10 ( ஜூன் -2013 மூன்றாவது வாரம்.)
ஒரு சிறிய ஊடல்...
அப்பொழுதுதான் அழுது முடித்திருந்தாய் ;-)
இப்படிக்கு
என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் !
அன்று
ஒரு சிறிய ஊடல்...
அப்பொழுதுதான் அழுது முடித்திருந்தாய் ;-)
தயவுசெய்து இனி ஒருநாளும்
ஆனந்த கண்ணீர் கூட சிந்திவிடாதே ...
ஏனென்றால்
ஒரு மனிதனால் தாங்ககூடிய வலியின் அளவு 45 டெல் அலகுகள் தானாம்
ஆனால் உன் ஒவ்வொரு துளி கண்ணீர் சிந்தும் போதும்
என் இதயத்தில் உண்டாகும் வலி 100 டெல் அலகுகளை தாண்டுகிறதே!!!
******************************************************************************************************
அ...............க ஒரு கவிதை :- 10 ( ஜூன் -2013 மூன்றாவது வாரம்.)
என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் !
ஒரு வேலை நாள் ...
நீண்ட நேரத்திற்கு பிறகு
உன் கைபேசியில் இருந்து ஒரு அழைப்பு ....
'ஒ ' என்று...கத்த வேண்டும் போல இருந்தது...
எதுவும் பேசவில்லை நான்
மௌனமாகவே இருந்தேன்...
வார்த்தைகள் வரவில்லை
பேசி பேசி ஓய்ந்திருந்தேன்.
ஆம்
உன் குரலை கேட்க காத்திருந்த நேரங்களில்
நான் என்னை மறந்து கொட்டிய
உளறல்களை
யாரேனும் கேட்டிருந்தால்
நிச்சயம் அதை
காதலர்களின் தேசிய கீதமாக அறிவித்திருப்பார்கள் !!!
******************************************************************************************************
அ...............க ஒரு கவிதை :- 10 ( ஜூன் -2013 மூன்றாவது வாரம்.)
என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் !
ஒவ்வொரு நாளும்
பின் இரவுகளில்
நடக்கும்
நம் கைபேசி உரையாடல்களில்
அடிக்கடி நான் மௌனமாகி விடுவேன்
தூங்குறியா ?
சொல்லு தூங்குறியா ?
மீண்டும் மீண்டும்
கேட்டுக்கொண்டே இருப்பாய்
இல்லை என்பேன்
இல்ல பொய் சொல்ற...
இல்ல அம்மு தூங்கல ...
நல்லா தூங்கு
போ...
பேசாத
போன வை....
உன் கோபம் அதிகமாகும்
கடைசியாக
நீ
வழக்கமாய் சொல்லும் வார்த்தைகள்
அம்மு...
இன்னும் ஒரு வாரத்திற்கு என்கிட்டே பேசாத
குட் பை...
இப்பொழுது முழுவதுமாய் ஆழ்ந்திருப்பேன்
இணைப்பு துண்டிக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே
மீண்டும் உன்னிடம் இருந்து அழைப்பு வரும்
சாரி தங்கம்...
வா ..... வா ..... எந்திரி
ஒரு கதை சொல்லி என்ன தூங்கவை...
எங்கேயிருந்து வருமோ எனக்கு அந்த உற்சாகம்
நான் சொல்ல தொடங்குவேன்...
கதையின் பாதியிலேயே
என் தூக்கத்தையும் சேர்த்து நீயே தூங்கிவிடுவாய் !!!
******************************************************************************************************
இப்படிக்கு
மு.வெ.ரா...
திருநெல்வேலியிலிருந்து...
2 comments:
ரசித்தேன்...
45 / 100 டெல் அலகுகள் வரிகள் வித்தியாசமானவை...
வாழ்த்துக்கள்...
காதலில் கரைவதின் உள்ள சுகம் அழகாக வெளிப்பட்டுளது உள்ளது உங்களின் கவிதையில்
Post a Comment