Wednesday, January 23, 2013

ஐ.சி.யு


இரவு பதினோரு மணிக்கு மேல இருக்கும் 

நடுரோட்டில ஒரு அம்மா அரை மயக்கத்தில ஒரு வாலிப பையன்ன தோள்ல சாய்ச்சுகிட்டு நிற்கிறாங்க...
   
   அந்த நெடுஞ்சாலையில சீறி பாய்ந்து வர்ற மாருதி கார் ஒன்னு சடன் பிரேக் அடிச்சு அவங்க முன்னால நிக்குது...

   வண்டியில டிரைவர் சீட் பக்கத்தில உட்கர்ந்த்ருக்கிற அஜய் தலைய வெளிய நீட்டி"கெட்ட வார்த்தையில திட்டுறான் நீங்க சாக ஏன் வண்டி தான் கிடைச்சுதா தள்ளும்மா "

  "வீட்டில ஒரு சின்ன பிரச்சனை என் பையன் ஏதோ மருந்த குடிச்சுட்டான். இந்த பக்கம் ரொம்ப நேரமா எந்த வண்டியும் வரல கொஞ்சம் எங்கள ஆஸ்பத்திரில இறக்கி விட்டுட்டு போறீங்களா "பதட்டமாக சொன்னா அந்த பெண்...

    வண்டிக்குள்ள பின்னாடி மூணு பேர் முன்னாடி ரெண்டு பேர் அதுல ஒரு குரல் "கிளம்பு கிளம்பு நமக்கு  ஏற்கனவே நேரமாகுது"

     அஜய்க்கு மனசு கேட்கல டிரைவர்ட்ட சொல்றான் "இன்னும் ஒரு கிலோமீட்டர்ல ஒரு ஹாஸ்பிட்டல் இருக்குடா போற வழிதான இறக்கி விட்டுட்டு போயிறலாம்"

     ஒரு நிமிஷம் யோசிச்ச டிரைவர் சொல்றான் "சரி சரி சீக்கிரம் ஏறுங்க "  

வண்டி முன்ன விட  இப்ப வேகமா கிளம்பி போய்  அந்த ஊர் அரசு மருத்துவமனையில நின்னது  ...

  ஆஸ்பத்திரியோட அவசரசிகிச்சை பிரிவு வாசல்ல ரெண்டு பேரையும் இறக்கி விடவும் அந்த அம்மா "தம்பி ஒரு கை பிடிச்சு உள்ள வந்து விட்டுட்டு போங்கபா "கெஞ்சுறாங்க ....

    "ஒரு நிமிஷம்டா வந்துறேன் "பதில் எதிர்பார்க்காம வண்டியில் இருந்து இறங்குற அஜய் ஒரு கை பிடிச்சு அந்த பையன  தூக்கிக்கிட்டு  ஐ.சி.யுக்குள்ள நுழையுறான் ....

    அன்னைக்கு மூணு ஆக்சிடெண்ட் கேஸ் ஒரு பக்கம்  தையல்  போட்டுட்ட்ருக்காங்க அந்த ஆள் வலி தாங்காம  அலறிட்டிருக்காறு..

       பெட் எல்லாம் புல் ஆகிருந்தது  மூணு போன் பிராக்ச்சர் இட இல்லாம  கேஸ்  தரையிலதான்  படுக்க வச்ச்ருக்காங்க ...

        அஜய் கொண்டு வந்த பையனையும் கீழ படுக்க வச்சுட்டு வெளிய வர பார்க்கிறான் அப்ப அங்க இருக்கிற  டாக்டர் "சார் எங்க போறீங்க,நைட் ஷிப்ட்ல ஆள் இல்ல  ஒரு கை பிடிங்கனு சொல்லிட்டு என்ன விஷம் எப்ப குடிச்சாங்க அது இதுன்னு சில கேள்விகள் கேட்டுட்டு தயாரா  இருக்கிற  சோப்பு நுரை குழாய் எடுத்து  மருந்து குடிச்ச பையன் வாயில விடுறாரு"

     அஜய் மணிய  பார்க்குறான் உள்ள வந்து பத்து நிமிஷம் ஆயிடுச்சு ...

அவன் போன் வைப்ரேட் ஆகிட்டே இருக்கு.... அவன் அத எடுக்கல 

ரூம் முழுக்க ஒரே ரத்த வாடை...

எல்லா பக்கமும் வலியால துடிக்கிரவங்களோட சத்தம்.. 

இன்னும் பல மெடிக்கல் உபகரனங்களோட சத்தம்னு ஒவ்வொன்னா அவன் காதுல விழுது 

பக்கத்தில ஒரு ஆள் இழுத்து இழுத்து சிரமப்பட்டு மூச்சு விட்டுட்டு இருக்கார் ....

    இந்த எல்லா  விஷயமும் சேர்ந்து அஜய்க்கு லேசா  தலை சுத்த வைக்குது கொஞ்ச நேரம் என்ன நடக்குதுன்னு அவனுக்கு தெரியல ,எல்லாம் மங்களா இருக்கு அவனுக்கு அந்த டாக்டர் சொல்றது கேட்குது "கூட் பேஷன்ட் பிழைச்சுக்கிட்டார் சரியான நேரத்தில கொண்டு வந்து சேர்த்தீங்கனு சொல்லிட்டே அந்த  பையன் வாயில உள்ள குழாய எடுக்கிறார்...

    அஜய்க்கு குமட்டிட்டு வருது அந்த பையன பிடிச்சிருந்த கைய எடுத்துட்டு மெதுவா வெளிய வர்றான்...அவன் பின்னாடியே இவங்க வண்டியில வந்த அந்த விஷம் குடிச்ச  பையனோட அம்மா" தம்பி நீங்க நல்ல இருக்கணும் என் பையன் உசிர காப்பாத்திட்டீங்க உங்களுக்கு எந்த குறையும் வராது "னு வாழ்த்திட்டு போறாங்க"
     
    

ஐ.சி.யு வாசலுக்கு வர்ற அஜய  இடிச்சுட்டு ஒரு அம்மா வேகமா உள்ள ஓடுறாங்க சட்டுன்னு குனிஞ்சு அவன் சட்டைய  பார்க்கிறான் ஒரே  ரத்தம் திரும்பி அந்த அம்மாவ பார்க்கிறான் அவங்க கையில ஒரு ஆறுமாச குழந்தை கட்டில இருந்து  ரத்த வெள்ளத்தில இருக்கு...கட்டில்ல இருந்து விழ்ந்துட்டான் டாக்டர் என் பிள்ளைய காப்பத்துங்கனு அந்த அம்மா கதுறுற சத்தம் இவனுக்கு நல்லா கேக்குது  ...

    தட்டுதடுமாறி வெளிய வந்து ஐ.சி.யு பக்கத்தில இருக்கிற  சுவத்தில சாய்ஞ்சுகிட்டு ஒரு நிமிஷம் யோசிக்கிறான்  அஜய். அவன் ஆஸ்பத்திரிக்குள்ள வந்து ஒரு பதினைஞ்சு நிமிஷம் தான் இருக்கும்.ஆனா ஒரு யுகம் போன மாதிரி மலைச்சு  போயிருக்கான்.அவன்  செல் எடுத்து பார்க்கிறான் அதுல 15 மிஸ்டு கால் கார்ல இருந்தவங்ககிட்ட இருந்து வந்தருந்தது..

      போன்ல ஒரு நபருக்கு டைல் பண்றான் எதிர்முனையில் போஃ ன்  அட்டெண்ட் ஆகவும் "ஹலோ டாக்டர் ராஜதுரை வீடானு கேட்டான் .

      அந்த பக்கம் ஆமானு பதில் வர 

இன்னும் கொஞ்ச நேரத்தில உங்க வீட்டுக்கு வந்து உங்கள கொலை பண்ண  போறாங்க தப்பிச்சு போயிருங்க ....

எதிர் முனையில ஹலோ நீங்க யாரு பேசுறது ஹலோ யாருங்க......

அஜய் கால் கட் ஆயிடுச்சு....


இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம் :-2011

1 comment: