எப்பவும் காலேஜ் முடிஞ்சா தனியா வீட்டுக்கு வர்ற உமா இன்னைக்கு அவங்க அப்பாவோட வண்டியில வந்து இறங்கறத பார்க்கும்போது அவங்க அம்மா கலைவாணிக்கு ஆச்சரியமா இருந்துச்சு...
"என்ன உமா இவ்ளோ சீக்கிரம் காலேஜ் விட்டு வந்துட்ட?"
பதில் உமா அப்பாக்கிட்ட இருந்து வருது....
"ஆமா உன் பொண்ணு காலேஜ் படிக்கிற இலட்சணத்தை இன்னைக்குதான பார்த்தேன்...பஸ் ஸ்டாண்ட்ல யாரோ ஒரு பையன் கூட நின்னு பேசிகிட்டிருக்கா..."வார்த்தைகள் வேகமாய் வந்தன..
என்னங்க சொல்றிங்க ?
"ம்...கேட்டா ரொம்ப நல்ல பையன்ப்பா என் கிளாஸ்மெட்,அவங்க அப்பா அம்மாவுக்குலாம் கூட என்னை நல்ல தெரியும்ங்கிறா..."
அங்கும் இங்கும் நடக்கிறார் ஏதோ நினைத்தவர் மீண்டும் உமாவ பார்த்து பேசுறார். "ஏய்...உமா இந்த காதல் கீதல்னு ஏதாவது பேசிகிட்டிருந்த நடக்கிறதேவேற, என் சொந்தத்துல நல்ல மாப்பிள்ளையா பார்த்து நானே கட்டிவைக்கிறேனு" கத்திட்டு அந்த இடத்த விட்டு நகர்ந்துட்டார்...
அந்த வார்த்தை காற்றில கரையிரதுக்குள்ள உமா மனசுக்குள்ள அவங்க அப்பா என்னைக்கோ தன்ன பத்தி பெருமையா சொன்ன சில வார்த்தைகள் திரும்ப திரும்ப ஓடுது "உங்க அம்மாவை நா காதலிச்சப்ப வேறசாதி பையன் எப்படின்னு தெரியலையேனு பல காரனங்கள் சொல்லி எதிர்த்த உங்க தாத்தாவ என் உழைப்பால முன்னேறி போராடி சம்மதிக்க வச்சேன் தெரியுமா"....
"காற்றில் உயிர் இருக்கிறது! ஆம் எத்தனை உயிர்களின் உணர்வுகள் அதில் கலந்திருக்கிறது!"
இப்படிக்கு
திருநெல்வேலியிலுருந்து வெங்கட்ராமன்,
காலம்: மார்ச் முதல் வாரம்.....
1 comment:
Sorry . . . next meet pandren ..
Post a Comment