அந்த பஸ் கிளம்பி இரண்டு மணிநேரம் ஆயிருக்கும் ரொம்ப நேரமா நின்னுகிட்டே தான் வர்றான் மாரியப்பன். கால்வலி அவனுக்கு பழகியிருந்தாலும், இன்னைக்கு வழக்கத்தைவிட கொஞ்சம் அதிகமாகவே டையர்டாகி இருந்தான். பேக்ரௌன்ட்ல "செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா " பாட்டு ஓடுது திரும்பி தன்னோட சீட்ட பார்க்குறான்.அங்க ஒரு ஆள் உட்கார்ந்திருக்கார் . எழுப்ப மனசு வரல,அப்படியே பாட்ட பீல் பண்ணிட்டே வலதுபக்கம் திரும்புறான்.அங்க ஒரு அழகான பொண்ணோட ஒருபக்கம் முகம் மட்டும் லேசா தெரியுது.பார்த்தவன் ஒரு நிமிஷம் அங்கிருந்து பார்வைய திருப்ப முடியாம தவிக்கிறான்.
இப்படி டக்குனு இவன் எந்த பொண்ண பார்த்தும் இம்ப்ரெஸ் ஆனதில்ல, ஆனா எல்லாம் மனித இயல்பு தான சில தடவை அவன் மனக்கட்டுபாட்ட மீறி அவனோட பஸ் பயணத்தில வர்ற சில அழகான பொண்ணுங்கள ரசிக்க ஆரம்பிச்சிடுவான். நாகரிகமா நடந்துப்பான் அழகியலோட ரசிப்பானே தவிர தப்பா பார்க்கமாட்டான்.
இன்னைக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் அப்படி பாவாடை தாவனியில ஒரு பொண்ண பார்க்கிறான் மாரியப்பன்."குட்டி ஜிமிக்கி வச்ச கம்மல் போட்டுருக்கு, மூக்குல சின்ன கல் வச்ச மூக்குத்தி தெரியுது.அப்ப நல்ல காற்று அடிக்குது உடனே இடது கை விரல்களால தன்னோட தலைமுடிய கோதி விடுறா அந்த பொண்ணு அவளோட மோதிர விரலில ஒரு ஹார்ட்டின் மோதிரம் சூரிய ஒளியில மினுங்குது. அந்த பொண்ணோட ஒவ்வொரு அசைவையும் கவனமா கவனிச்சிட்டு வர்றான்.அந்த பொண்ணு முகத்த திருப்புற முழுசா இவன் பக்கம் திருப்புற நொடிக்ககாக காத்துகிட்டிருக்கான். அந்தபக்கம் திரும்புது இந்தபக்கம் திரும்புது ஆனாலும் இவனால அந்த பொண்ணோட முழு முகத்தையும் பார்க்க முடியல, கொஞ்ச முன் பக்கமா போய் பார்க்கலாம்னா கூட்டம் அதிகமா இருக்கு. எங்கேயும் நகர முடியாம அப்படியே வச்சகண் வாங்காம அந்த பொன்னையே பார்த்துகிட்டிருக்கான் மாரியப்பன் .
பஸ் ஸ்பீக்கர்ல ஓடுற முள்ளும் மலரும் பட பாட்டு வேற மாரியப்பன ரொம்ப தொந்தரவு பண்ணுது. எப்படியாவது அந்த பொண்ண பர்த்துரனும்னு எம்பி எம்பி குதிக்கிறான்.ம்ஹும் முடியல... அப்ப அவன் செல்போன் ரிங் அடிக்குது.. ஆனா அவனுக்கு அந்த சத்தமே கேட்கல. பக்கத்தில உட்கார்ந்திருக்கிற ஒரு ஆள் இவன் தோள்ல தட்டி "சார் போன் அடிக்குது அட்டென்ட் பண்ணுங்க" அப்படின்னு சொல்றார்.
உடனே நிதானத்துக்கு வந்து போன் எடுக்கிற மாரியப்பன் "ஹலோ" சொல்றான் அந்தபக்கம் அவன் அம்மா "ஏய் மாரியப்பா எங்கள எல்லாம் ஞாபகம் இருக்கா உன் பொண்டாட்டி பிள்ளைங்களலாம் பார்த்து எத்தன நாள் ஆச்சு அப்படி என்ன டுயுட்டில ஓடுற திருச்சில இறங்கி ஒரு எட்டு எங்கள பார்த்துட்டு போப்பா" படபடனு பேசிட்டு போன் கட் பண்ணிட்டாங்க அவன் அம்மா.
ஒரு அஞ்சு நிமிஷம் ஆயிருக்கும் விழுப்புரத்தில பஸ் நிக்குது. அந்த பொண்ணு இறங்கி போறா, கொஞ்ச நேரம் அவளையே பார்த்துக்கிட்டிருக்கான்.என்ன நெனைச்சானோ முதல உட்கார முடியாம போன சீட் பக்கம் வர்ற மாரியப்பன் "சார் எந்திரிங்க இது கண்டக்டர் சீட் கொஞ்சம் எந்திரிச்சு இடம் விடுறீங்களானு" கேட்டுட்டு அவர் நகரவும் அந்த சீட்ல உட்காருறான் மாரியப்பன்.
அப்ப பல வருஷம் முன்னாடி அவன் மனைவிய இந்த ஸ்டாப்ல அவன் முதல் முதல பார்த்து லவ் பண்ணி போராடி கல்யாணம் பண்ணின ஞாபகம் வரவும் பஸ் ஸ்பீக்கர்ல "மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர்ற நெஞ்சம் இல்லையோ" பாட்டு தொடங்கவும் சரியா இருக்கு சத்தம் போட்டு போலாம் ரைட்டுன்னு கத்துறான் பஸ் மட்டும் இல்ல மாரியப்பனோட நினைவுகளும் வேகமா தன்னுடைய இலக்க நோக்கி கிளம்புது.
அப்ப பல வருஷம் முன்னாடி அவன் மனைவிய இந்த ஸ்டாப்ல அவன் முதல் முதல பார்த்து லவ் பண்ணி போராடி கல்யாணம் பண்ணின ஞாபகம் வரவும் பஸ் ஸ்பீக்கர்ல "மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர்ற நெஞ்சம் இல்லையோ" பாட்டு தொடங்கவும் சரியா இருக்கு சத்தம் போட்டு போலாம் ரைட்டுன்னு கத்துறான் பஸ் மட்டும் இல்ல மாரியப்பனோட நினைவுகளும் வேகமா தன்னுடைய இலக்க நோக்கி கிளம்புது.
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம்:-ஜூன் முதல் வாரம்-2011
No comments:
Post a Comment