"டேய் டேய் ஜான் ஒரு அஞ்சு நிமிஷம் இந்த சிஸ்டம்ம எனக்கு குடுடா" கெஞ்சுறான், சரவணன்... அவன சுற்றி நாலஞ்சு பசங்க 'ஓ' னு சத்தம் போட்டுட்டு இருக்காங்க...
எல்லாரும் கார்பரேட்
கைஸ் ஆபீஸ் வொர்க் பிரஷர், டென்சன் இதுக்கு இடையில இவனுங்க ரிலாக்ஸ் ஆகுறது
மெயில் பார்க்குறது, சாட் பண்றது, சோசியல் நெட்வொர்க்ஸ்ல ஸ்டேட்டஸ் அப்டேட்
பண்றது, புது புது பிரெண்ட்ஸ் பிடிக்கிறது இதுலல்லாம்
தான்...
டெய்லி ஆபீஸ் ஹவர்ஸ்ல சோசியல் நெட்வொர்க் சைட்ஸ் ஓபன் ஆகுறதில்ல சாயங்காலம்
வீட்டுக்கு கிளம்பும் போது
ஒரு பத்து நிமிஷம் நெட்ல அப்டேட் பண்றதில்ல இவங்களுக்குள்ள போட்டாபோட்டி..எல்லா
சிஸ்டம்லையும் எப்பவுமே யாரவது உட்கார்ந்தே
இருப்பாங்க...
இவங்க சோசியல் நெட்வொர்க் சைட்ஸ்ல செய்யுற முக்கியமான
சில வேலைகள் "நீச்சல் குளத்தில டைவ் அடிச்சு குளிச்ச போட்டோ ஷேர் பண்ணிட்டு
ரெகார்ட் பிரேக்னு டைட்டில் போடுறது, ஊருக்கு ஒதுக்குபுறமா இருக்கிற
முள்ளுகாட்டுக்கு போய் நாலு போட்டோ எடுத்து அப்டேட் பண்ணிட்டு வைல்ட் டிராவல்
வீக்லி ட்ரெக்கிங்னு கம்மென்ட் போடுறது, யாரவது ஒரு நடிகரோ நடிகையோ இவங்க ஏரியா
பக்கம் ஷூட்டிங் வந்தாலோ இல்ல எதாவது கடை திறப்பு விழாவிற்கு வந்தாலோ அவங்க
பின்னாடி எங்கேயாவது ஓரமா நின்னு இரு போட்டோ எடுத்து அப்டேட் பண்ணிட்டு 'மீ அண்ட்
சூர்யா' னு கம்மென்ட் போடுறது இதெல்லாம் இந்த பசங்களோட சமீப கால
சாதனைகள்...
ஆனா சரவணன் இதுல எல்லாம் கொஞ்சம் டிப்பிரென்ட்.
அவன் பத்து போட்டோ எடுத்தா கூட போட்டோ சாப்ல வொர்க் பண்ணி ஒன்னோ, ரெண்டோ தான்
அப்டேட் பண்ணுவான். அதுமட்டுமில்ல டெய்லி நாட்டில நடக்கிற பிரச்சனைகளை தவறாம
ஸ்டேடஸ் அப்டேட்ல "இந்திய கறுப்பு
பணம் இவ்வளவு இருக்கு மீட்க முடியுமா?" இப்புடி எதாவது கிரிட்டிசைஸ் பண்ணி
அப்டேட்ஸ் போடுவான் .இவனோட எந்த ஸ்டேட்டஸ்க்கும் ஒரு கம்மென்ட் கூட வராது ஆனாலும்
மனம் தளராம டெய்லி பல நல்ல விஷ்யங்க்கள அப்டேட் பண்ணிட்டே தான்
இருப்பான்.
இன்னைக்கும் அப்படி ஒரு அப்டேட் பண்ண வந்தா, அவன் கூட வேலை பார்க்கிற ஜான் சிஸ்டம் விடாம
ரொம்ப நேரமா உட்கார்ந்திருக்கான். ஒரு வழியா அவன்கிட்ட கெஞ்சி கூத்தாடி இடத்த
பிடிச்சு அந்த சோசியல் நெட்வொர்க் வெப்சைட்டுக்குள்ள லாக் ஆண் பண்றான் சரவணன்
வழக்கம் போல இவன் போட்ட ஸ்டேடஸ் அப்டேட்டுக்கு நோ கம்மென்ட்ஸ் ..
ஆனா இவன் பிரெண்ட்ஸ்
லிஸ்ட்ல இருக்கிற பொண்ணு ஒருத்தி "இன்று நான் சாம்பார் வைத்தேன்" அப்புடின்னு ஒரு
அப்டேட் பண்ணிருக்கா, அதுக்கு 160 கம்மென்ட் வந்துருக்கு 65 லைக்
விழுந்துருக்கு நொந்துட்டான்
சரவணன்
" சே யுஸ்லெஸ் யூத்ஸ்
இதுக்கெல்லாம் ரிப்ளை பண்றாங்களே"னு மனசுக்குள்ள நெனைச்சுகிட்டு 161 ஆவது
கம்மென்ட்டா ' கங்கிராட்ஸ் மேம் ஐ டூ
லவ் சாம்பார்'னு போட்டுட்டு அவன் ஹோம் பேஜுக்கு வர்றான். அதுக்குள்ள சரவணன்
அந்த பொண்ணோட ஸ்டேட்டசுக்கு போட்ட கம்மென்ட்டுக்கும் ஐஞ்சு லைக்
விழுந்துருக்கு.
இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம்:-ஜூன் மூன்றாவது வாரம்-2011
3 comments:
Sorry . . . .
Next meet Panren . . .
தலைவருக்கு ஏகப்பட்ட அனுபவம் இருக்கு போல???
Social websitesah yaaru than urupadiya use pandraanga sollapona vetiya irukuravan ellam oru account ah open panni nerapokuku than social website kulla irukan.oruthan nallatha sonna atha namma makkal ethuaka maataanga athey mathiri theva illatha ella vishayathayum perusa kondaduvaanga ENNA KODUMA SIR ITHU...
Post a Comment