Friday, December 2, 2011

"தெளிஞ்சுடுச்சு"


                அந்த பார்க்ல வந்து ராஜன் உட்கார்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேல ஆயிருக்கும். ஒரே குழப்பத்துல இருக்கான். அவனோடது நடுத்தரமான குடும்பம் ரெண்டு அக்காவ கல்யாணம் பண்ணி கொடுக்கணும் குடும்பத்த பார்த்துக்கணும். அவனும் செட்டில் ஆகணும்

            இப்ப அவன் வேலை பார்க்கிற தனியார் கம்பெனி சம்பளத்துல இதெல்லாம் கனவாவே கலைஞ்சுரும்னு நெனைச்சுகிட்டிருந்தான். ஆனாலும் எல்லார் மாதிரியும் வேலைக்கு போய் சாப்பிட்டு தூங்கி எந்திரிச்சு ஞாயிற்று கிழமையான ஒரு படம் ஐந்தாம் தேதியான ஹோட்டல்னு நல்லதான் போய்கிட்டிருந்தது வாழ்க்கை.


        இப்ப இன்னைக்கு ரொம்ப நாளா அவன வீட்டுக்கு கூப்பிட்டுகிட்டிருந்த அவங்க ஒன்னுவிட்ட மாமாவா பார்த்துட்டு வந்தததுலருந்துதான் இந்த குழப்பம், வீட்டுக்கு போகாம நேரா பார்க்குக்கு வந்து உட்கார்ந்து யோசிக்க ஆரம்பிச்சுட்டான்.

       அவங்க நடத்திகிட்டிருக்குற ஒரு டிரஸ்ட்ட பார்த்துக்க யாரும் இல்ல . அதனால அந்த ட்ரஸ்ட்ட  நிர்வாகம் பண்ற பொறுப்ப ராஜன்கிட்ட கொடுக்கிறதா சொல்ல அதோட கணக்குவழக்கெல்லாம் மட்டும் நாங்க பார்த்துக்கிறோம் வர்ற லாபத்தா செலவுகணக்கு காட்டி குறைச்சு எழுதி பிரிச்சுக்கலாம்னு சொல்லவும். ராஜன் வருமானவரி கட்டாம எப்படின்னு அவங்க மாமாகிட்ட கேக்கிறான், "சின்ன சின்ன ஸ்வீட் கடை,பலசரக்கு கடை நடத்துறவங்களுக்கெல்லாம் எவ்வளவு வியாபாரம் நடக்குது. அவங்கெல்லாம் வருமானவரியா கட்டுறாங்க " நல்ல நாளா பார்த்து வந்து பொறுப்பு எடுத்துக்கோனு சொல்லி அனுப்பிட்டாங்க.


          குழப்பத்தோட வீட்டுக்கு வர்ற ராஜன் நேரா அவங்க தாத்தாகிட்ட போய் "நேர்மையா  தொழில் பார்த்தோம்னா வருமான வரி கட்டலேனா கூட தப்பு இல்லைலே அப்படின்னு கேக்கிறான்"         அதுக்கு 91 வயசுவரைக்கும் ஆரோக்கியமா இருந்து நாலுவருஷம் முன்னாடி பாத்ரூம்ல வழுக்கி விழுந்து நடக்கமுடியாம கிடக்கிற அவன் தாத்தா சொல்றாரு"அந்த காலத்துல என் முதலாளிக்கு வரி ஏமாத்த நட்டகணக்கு எழுதிகொடுத்ததுனாலதான் கடவுள் என்ன இப்படி நடமாடமுடியாம ஆக்கிட்டார்டா அப்படின்னு சத்தம் போட்டு சொல்லிட்டு ம்யுட்ல இருந்த டி.வில சவுண்ட் வச்சு சீரியல் பார்க்க ஆரம்பிச்சுட்டார்.

    


இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து 2011



1 comment:

Naga raja said...

நஸ்ட கணக்கு காட்டி வரி ஏய்ப்பு செய்பவர்களை கடவுள் தண்டிக்க வேண்டும் என்றால் நாட்டில் 90% முடமாக தான் அலைவார்கள்...நஸ்ட கணக்கு காட்டி வரி ஏய்ப்பு செய்பவர்களை கடவுள் தண்டிக்க வேண்டும் என்றால் நாட்டில் 90% முடமாக தான் அலைவார்கள்...