சம்பத் ஒரு 'எக்கிடேரியன்' வெஜிடேரியன் தான் எக் மட்டும் சேர்த்துக்குற மாடர்ன் பையன் வேற வழியில்ல காலத்துக்கு ஏற்றமாதிரி மாறிதான ஆகணும்.
இரண்டு பேரும் மிடில் கிளாஸ் தான். தினமும் காலையில ஜிம் போகணுமுன்னு இவங்களுக்கு ஆசைதான் வசதியில்ல, அதனால 6 மணிக்கெல்லாம் முயற்சி பண்ண ஆரம்பிச்சி ஒரு வழியா 7 மணிக்கு வாக்கிங் போக ...
தொடங்குவாங்க....
இவங்க போற வழி எல்லாம் நெறைய கறிகடைகளா இருக்கும் சம்பத் சாதாரணமா வந்தாலும் விசு வால மூக்க பொத்தாம வர முடியாது. தினமும் ஏதாவது சொல்லிக்கிட்டே வருவான் .அன்னைக்கும் அப்படிதான் வாக்கிங் ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்தில அந்த கறிக்கடைகள் இருக்கிற ரோட்டு பக்கம் வந்துட்டுருந்தாங்க ,அப்ப விசு சொல்றான் "ஏண்டா சம்பத் தினமும் இந்த கறியெல்லாம் எப்படித்தான் ருசிச்சு ரசிச்சு திங்கிறாங்களோ ரத்தமும் சதையுமா ப்பா நெனைச்சாலே உதறுது நிம்மதியா வாக்கிங் போக விடுறாங்களா வெஜிடேரியன் ஹோட்டல் நான் வெஜ் ஹோட்டல்னு இருக்கிற மாதிரி நான் வெஜ் கடைகள் தனியா ஒரு ஏரியா பிரிச்சு அங்க திறக்க வேண்டியதான இந்த கரி கடைய, இப்படி நாம போற ரூட் எல்லாத்திலையும் ஒரு கடைய திறந்து வச்சு சாகடிக்கிறாங்களே " புலம்பி தள்ளிட்டான்
சம்பத் அவன் பக்கமே திரும்பல மெதுவா காதில ஹெட் போன மாட்டிட்டு எப்.எம் கேட்டுக்கிட்டே வாக்கிங்க கண்டினியு பண்ண ஆரம்பிச்சிட்டான்...
சம்பத்கிட்ட இருந்து பதில் வராததுனால அமைதியா இருந்த விசு ஒரு ரெண்டு தெரு போகவும் திரும்பியும் வேற ஒரு பிரச்சனைய ஆரம்பிச்சிட்டான் .அங்க ஒரு நாலஞ்சு பொண்ணுங்க விதவிதமா நகைகளா போட்டுக்கிட்டு எங்க கடையில் நகை வாங்குங்க உங்க ஊரே செழிக்கும்னு போஸ் குடுத்துட்டு நிக்கிறாங்க..
"டேய் சம்பத் இங்க பாருடா அடுத்த கடைய நம்ம ஊர்ல ஆரம்பிச்சிடாங்க கடந்த ரெண்டு வருஷத்தில மட்டும் நம்ம ஊர்ல புதுசா ஒரு பத்து நகை கடை வந்துருக்கு. தங்க நகை விலை நாளுக்கு நாள் ஏறிக்கிட்டு இருக்கு .ஆனா இங்க எல்லா கடையிலையும் எப்பவும் கூட்டம் இருந்துகிட்டே தான் இருக்கு.இவங்களுக்கு மட்டும் எங்கேர்ந்துதான் காசு வருதோ?"விசு இப்புடி சொல்லி முடிக்கவும் டெண்சன் ஆயிட்டான் சம்பத்.
"விசு கொஞ்ச நேரம் அமைதியா நடக்க மாட்டியா உனகெல்லாம் எதுக்கு டா வாக்கிங் ...." என்றான் சம்பத்
விசு விடல "சம்பத் இப்புடி காலையிலேயே பல விஷயங்கள் மனச ஸ்பாயில் பண்ணிருதுடா, இந்த டென்சன்ல ஆபிஸ் போனா அங்கையும் பல தொல்லைகள் எனக்கு ஒரு நாள் போறது ஒரு யுகம் மாதிரி இருக்குடா என்னடா வாழக்கை இது ஒரு நிம்மதி இல்ல நம்மளால என்ன முடியும் இப்படி புலம்பிட்டே போயிற வேண்டியதான்...லைப்ல ஒரு சந்தோசம் இல்ல வேலைக்கு போறோம் சாப்பிடுறோம் தூங்குறோம் அவ்வளோதான் "விரக்தியா சொன்னான் விசு...
அப்ப அங்க ஒரு குரல் ரெண்டு பேர் கவனத்தையும் ஈர்த்துது...
மல்லி கீரை.... அர கீரை.... பொண்ணாங்கண்ணி கீரை.....பசலிக்கீரை.....
அம்மா அக்கா கீரை வாங்கலியோ நாட்டுக்கீரை ஒரு கட்டு அஞ்சு ரூபா கீரை...கீரை.....கீரை...
ஒரு நிமிஷம் அந்த ஆள திரும்பி பார்த்த விசு "ஹலோ கீரை கொஞ்ச இங்க வாங்கனு கூப்பிட்டான் "
அவர் வேகமா நடந்து இவங்ககிட்ட வர்றாரு இத பார்த்துகிட்ட்ருந்த சம்பத் ஏதோ முடிவு பண்ணின மாதிரி பேச ஆரம்பிச்சான் "விசு இந்த கீரைகாரர்ர பாருடா நான் நாலாங்கிலாஸ் படிக்கும் போதிலிருந்து இந்த அய்யா நம்ம ஏரியால தான் கீரை விக்கிறாரு ஒரு நாலாவது சிரிச்ச முகம் மாறினதில்ல இவங்களா இந்த உலகத்தில சந்தோசமா வாழல" சும்மா என்னக்கு மட்டும் இப்புடி அப்புடின்னு புலம்பிறது நிறுத்து இல்ல நாளைல இருந்து நான் உன் கூட வாக்கிங் வர மாட்டேண்டா"
அதுக்குள்ளே அவர் வந்துட்டாரு விசு ஒரு இருபது ரூபாயைய அந்த ஆள்கிட்ட குடுத்து ஒரு கட்டு கீரை கேட்கிறான்.அவர் கீரைய கொடுத்துட்டு "அய்யா என்கிட்டே சில்லறை இல்லங்க நீங்க தான் முதல் போனி அஞ்சு ரூபாய் இருந்த கொடுங்கன்னு கேட்கிறார்.
சம்பத் டக்னு அவன் பாக்கெட்ல இருந்து ஒரு அஞ்சு ரூபாய் நோட்ட எடுத்து கொடுக்கிறான்.அத வாங்கின அந்த கீரைகாரர் ஒரு நிமிஷம் அந்த நோட்ட பார்த்துட்டு சம்பத் கிற "அய்யா ரொம்ப நன்றி இந்தாங்க இத வச்சுகோங்கனு " சொல்லி ஒரு சின்ன கட்டு கீரைய கொடுக்கிறாரு "
எதுக்கு இதுங்கிற மாதிரி மனசில நெனைச்சுகிட்டு அத வாங்க கையா நீட்டினான் சம்பத் அப்ப "டேய் சம்பத் இதுக்குதான் இப்படி ஓசி கீரை வாங்கிறதுக்குதான் இந்த கீரைக்காரற பத்தி கொஞ்சம் நேரம் புகழ்ந்துக்கிட்டிருந்தியா சரி சரி நடக்கட்டும் நடக்கட்டும்" என கிண்டலா பேசினான் விசு..
பதில் சம்பத் கிட்ட இருந்து வரல அந்த கீரைகாரர்கிட்ட இருந்து வந்தது "அய்யா அதெல்லாம் ஒண்ணுமில்ல எனக்கு இந்த அய்யா ரூபா கொடுத்தப்ப என் மனசு ரொம்ப சந்தோசமா இருந்த்து . அதான் கீரைய சும்மா கொடுத்தேன் இந்த ரூபாய் நோட்ட கொஞ்சம் பாருங்கனு இவங்க பக்கமா திருப்பி காட்டினார்.
அதுல "நல்ல பெரிய எழுத்துகள்ல "இறைவன் உன்னை உயர்த்துவார் மகிழ்ச்சியாயிரு"னு எழுதியிருந்தது.
இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம் :-2011
No comments:
Post a Comment