கிட்டதட்ட ஒரு அஞ்சு வருஷம் கனவு சேவியருக்கு 18 வயசு ஆனதுல இருந்து பாஸ்போர்ட் எடுக்கிற முயற்சியின் இறுதியில, புரோக்கர் இல்லாமல் ஒரு வார போராட்டத்துக்கு அப்புறம் ஆன்லைன்ல அப்பாயின்மென்ட் வாங்கி பாஸ்போர்ட் ஆபிஸ் கியுல வந்து நிற்கிறான்.
"9.15 அப்பாயின்மெயின்ட்லாம் உள்ள வாங்க கூட யாரும் வரகூடாது " பாஸ்போர்ட் ஆபிஸ் செக்யுரிட்டி சொல்லிட்டு மெட்டல் டிடக்ட்டர் வச்சு உள்ள வர்ற ஒவ்வொருத்தரையா செக் பண்ண ஆரம்பிக்கிறார்....
பயத்தோட அந்த ஏ.சி.அறைகுள்ள நுழையுற சேவியர் .அங்க வரிசையா இருக்கிற 5 கஸ்டமர் கவுண்ட்டர்ல எதுல நிக்கலாம்னு யோசிச்சு வரிசை நீளம் கம்மியா இருக்கிற ஐந்தாவது கவுன்ட்டர்ல போய் நிக்கிறான்.அப்ப அவன் பக்கத்துல நிக்கிற ஆள பார்த்து அங்க இருக்கிற என்கொயரி ஆபிசர் "சார் 4ஆம் கிளாஸ் வரைக்கும் படிச்சிருந்தா தமிழ்ல தான் கையெழுத்து போடணும்.இங்கிலிஸ்ல போடுறீங்கனா நோட்டிரி பப்ளிக் கிட்ட ஒரு செர்ட்டிபிக்கேட் வாங்கிட்டு வந்துருங்கனு " சொல்றார்
சின்ன வயசுல படிக்க வாய்ப்பில்லாம போனாலும் கஷ்டப்பட்டு தன்னோட கையெழுத்த ஆங்கிலத்தில எழுத பயிற்சி பண்ணின அந்த ஆள் வருத்ததோட வெளிய போறார்.இப்படி அங்க நின்ன பல பேரு சின்ன சின்ன காரணங்கள்னால அவங்களோட பாஸ்போர்ட் அப்பிளிகேசன் ரிஜெக்ட் ஆகி வெளிய போயிக்கிட்டேயிருக்காங்க....
இத பார்க்கிற சேவியர் பயத்தோட அவன் செர்டிபிகேட்ஸ் எல்லாம் வெரிபிக்கேசனுக்கு கொடுக்கிறான்.இவன் காலேஜ் டிஸ்கண்டிநியு. இப்ப கொஞ்ச நாளா ஒரு கடை வச்சு நடத்திக்கிட்டு இருந்தான்.12த் செர்டிபிகேட் கொடுத்து ஒவ்வொரு கவுண்டர்லையும் விசாரணை முடிஞ்சு கடைசியா பாஸ்போர்ட் ஆபிசர மீட் பண்றதுக்குள்ள ஒரு வழி ஆயிட்டான்.எல்லாம் சரியாதான் வச்சுருக்கான் பணமும் கட்டிட்டான்.அந்த ஆபிசர் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிட்டான். கடைசியா ஒரு கேள்வி கேட்டார் " ப்ளஸ் டு படிச்சு இத்தன வருஷமா எங்கயுமே வேலை பார்த்தது இல்லையானு அப்பவே இருந்து பிஸ்னெஸ் தான் பண்றீங்களா" னு கேட்டார் . ஒரு முனு மாசம் முன்னாடி வரை சென்னைல வொர்க் பண்ணினேன் இந்த மாசம் தான் கடை ஆரம்பிச்சேன்."னு சொல்லவும் பிடிச்சுகிட்டார்.தம்பி அந்த கம்பெனி இருக்கிற ஏரியா போலீஸ் ஸ்டேசன்ல ஒரு சர்டிபிகேட் வாங்கிட்டு வந்துருங்க உங்க பாஸ்போர்ட் கிளியர் பண்ணிரலாம்னு சொல்லிவெளிய அனுப்பிட்டார் .
மூணு மணி நேரம் காத்திருந்து பாஸ்போர்ட் எடுக்கமுடியாம போனதுல ரொம்ப நொந்துட்டான்.வெளிய வந்து நேரா பாஸ்போர்ட் ஆபிஸ் வாசல்ல இருக்கிற டீகடைக்கு வந்து உட்கார்ந்தவன் "அண்ணன் சூடா ஒரு இஞ்சி டீ போடுங்க"னு சொல்லிட்டு பெஞ்சல இருந்த நியுஸ் பே ப்பர எடுத்து திருப்புறான்.அதுல இருந்த ஒரு செய்தி பார்த்து மனசுக்குள்ள சிரிச்சுக்கிட்டான் .அது அரை பக்கத்திற்கு வந்தருந்தது " பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த ஒரு நபர் நான்காவது பாஸ்போர்ட் மூலம் இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டார்"
இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம் :-2011
No comments:
Post a Comment