ஹேய் ராஜி இந்த பேப்பர்ல போட்டிருக்கிற நியூஸ் பாரேன் . "அவன விட வயது மூத்த காலேஜ் புரோபஸர லவ் பண்ணி கல்யாணம் பண்ணியிருக்கான் ஒரு பையன் .அவங்க வீட்டிலையும் அவங்கள ஏத்துக்கிட்டாங்க..அவங்கலாம் ரொம்ப லக்கி இல்லடா நா என் சொந்தகார பொண்ணு உன்ன பிடிச்சு போய் லவ் பண்ணி கல்யாணம் பண்ணினேன். அதுக்கு உங்க குடும்பமே நம்மள ஒதுக்கி வச்சுட்டாங்க.நமக்கு பொண்ணு பிறந்து அஞ்சு வருஷம் ஆச்சு இன்னும் உன் அம்மா அப்பா அண்ணனுங்க யாரும் வந்து அவ முகத்தை கூட பார்க்கல அதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணுமடி " தன்னுடைய ஆற்றாமையை வெளிப்படுத்தினான் முத்துகுமா
ஆமாங்க நிச்சயதார்த்தம் முடிஞ்சு இரண்டு நாளாச்சு .எங்க அண்ணன் கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு.இதுக்கும் கூட நம்மள கூப்பிட மாட்டாங்க போல " ராஜி இந்த வார்த்தைகள சொல்லும் போது அவளுக்கு லேசா தொண்டை அடைக்க ஆரம்பிச்சிருந்தது.
" ஏண்டி இப்ப பீல் பண்ற விடு நாமளும் போய் பேசி பார்த்தாச்சு எல்லா சொந்தகாரங்களும் நமக்காக பேசிட்டாங்க உங்க வீட்டில நம்மள வேண்டவே வேண்டாம்ங்கிறாங்க . நாம என்ன தான் பண்றது...நம்ம கதை சினிமா படத்த விட பெரிசால இருக்கு.நா ஒன்னு சொல்றேன் கேளு இப்ப உங்க அண்ணன் கல்யாணத்துக்கு மட்டும் நம்மள கூப்பிடல நம்ம குடும்பமும் சேரவே முடியாது " முத்துகுமார் சொல்லி முடிக்கவும் ராஜி அழ ஆரம்பித்துவிட்டாள்.
இதே நேரத்தில ராஜி வீட்டில அவங்க அம்மா ரெண்டு அண்ணன் சித்தி இன்னும் சில உறவினர்கள் எல்லாரும் கல்யாண ஏற்பாடுகள் பத்தி பேசுறதுக்காக உட்கார்ந்திருக்கா ங்க அவங்க சித்தி தான் முதல பேச்ச ஆரம்பிச்சாங்க "ராஜிய கல்யானத்துக்கு கூப்பிட்டுட்டிங்களா "
அவ பேச்ச எடுக்கிற யாரும் கல்யாணத்துக்கு வர வேண்டாம் கோபமா பேசின ராஜி சின்ன அண்ணன் அந்த அறைய விட்டு எந்திரிச்சு வெளிய போறான்.அப்ப அங்க இருந்த ஒரு பெரியவர் " நம்ம குடும்ப ஜோசியர்ட்ட பேசிதான நாள் குறிச்சிருக்கீய " என்று கேட்கிறார்.
" இல்லயா பொண்ணு வீட்ல தான் நாள் குறிச்சாங்க நம்ம ஜோசியர் காசி போயிருக்கார் இன்னும் வரல" தயங்கிகிட்டே ராஜி அப்பா சொல்லிக்கிட்டிருக்கும் போதே அவங்க குடும்ப ஜோசியர் அவங்க வீட்டுக்குள்ள நுழையவும் சரியா இருந்தது...
"ஏம்பா என்ன கூப்பிடாமலே உன் மூத்தமகன் கல்யாணத்த முடிச்சிரலாமுனு பார்க்குறியா" செல்ல கோபத்தோட கேட்டுட்டே சோஃபால வந்து உட்காருராறு அவங்க குடும்ப ஜோசியர்.
"வாங்கய்யா அப்படிலாம் ஒண்ணுமில்ல எப்ப வந்தீங்க ஊர்ல இருந்துன்னு..." வார்த்தைய முழுங்குராறு ராஜி அப்பா...

அதுக்கு ஜோசியர் "நா பஸ் இறங்கி நேர உங்க வீட்டுக்கு தான் வரேன் .ஆமா கல்யாணம் என்னைக்கு வச்சுக்ருகிய?னு " கேட்டார்.
"அய்யா தை பத்தாம்நாள் வர்ற திங்கள்கிழமை வச்சுருக்கோம் .நீங்க சொன்ன நட்சத்திரத்தில தான் பொண்ணு பார்த்துருக்கோம். நம்ம பிள்ளைகள் ஜாதகம் இது நீங்களும் ஒரு தடவை பார்த்து அந்த நாள் நல்லது தான்னு கொஞ்சம் பார்த்து சொல்லிட்டிங்கனா எங்க எல்லார் மனசும் திருப்தியாயிரும்" இப்படி சொல்லிட்டே மாப்பிளை பொண்ணு ஜாதக ஜெராக்ஸ் எடுத்து ஜோசியர் கையில கொடுக்கிறாரு ராஜி அப்பா ...
அத வாங்கின ஜோசியர் கொஞ்சம் திருப்பிட்டு கட்டத்த எண்ணி எதோ மன கணக்கு போடுறாரு, அப்படியே தன் கையில இருக்கிற மஞ்சபைய எடுத்து தூசி தட்டி அதுக்குள்ளே இருக்கிற ஒரு ஏடு எடுத்து பார்க்கிறாரு "ஒரு ரெண்டு நிமிஷம் யோசனைக்கு அப்புறம் மெதுவா பேச ஆரம்பிக்கிறாரு"நா சொல்றேன்னு தப்பா நெனைக்காதீங்க இப்ப உங்க பையனுக்கு நேரம் சரியில்ல,ஆனா நீங்க தேதி குறிச்சு பத்திரிகை எல்லாம் குடுத்துட்டிங்க. நீங்க நெனைக்கிற தேதியில கல்யாணம் பண்ணணும்னா உங்க பையனோட உடன் பிறந்தாளுக்கும் அவ மாப்பிள்ளைக்கும் புது துணி எடுத்து கொடுத்து உங்க குடும்பம் எலாரும் சேர்ந்து போய் உங்க குலசாமி கோவில்ல ஒரு பொங்கல் வச்சு படையல் போட்டுருங்க எல்லா பிரச்சனையும் தானா சரியாகிரும்" சட்டுப்புட்டுனு ஆகிற வேலைய பாருங்கனு சொல்லிட்டு கிளம்பிட்டாரு அந்த ஜோசியர்..
ஒரு நிமிஷம் ஒருத்தர் முகத்த ஒருத்தர் பார்த்துக்குறாங்க,அவங்க அப்பா அம்மா பெரியண்ணன் எல்லாரும் அப்புடியே அமைதியா இருக்காங்க ,திரும்ப உள்ள வர்ற ராஜியோட சின்ன அண்ணன் மட்டும் இன்னும் கோபமாகி "ஏம்ப்பா இந்த ஜோசியர் சொல்றதெல்லாம் நம்பாதீங்க அவளெல்லாம் கூப்பிட முடியாது .நம்ம சம்மதம் இல்லாம அவளுக்கு பிடிச்ச மாப்பிள்ளைய கட்டிட்டு போனால அவகிட்ட போயெல்லாம் நிக்க முடியாது" னு கத்துறான்.
அப்ப ராஜியோட அப்பா அவ சித்திக்கிட்ட மெதுவா கேட்கிறாரு "ஏம்மா என் பொண்ணு வீடு எங்க இருக்கு ஒரு எட்டு போய் அவளயும் அவ அண்ணன் கல்யாணத்துக்கு கூப்பிட்டுட்டு வந்துருவோம்ங்கிறார்"
இதே நேரத்தில அங்க ராஜி வீட்டில அவளுக்கு விக்கல் எடுக்குது....

இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம் :-2011
No comments:
Post a Comment