Wednesday, January 23, 2013

அம்மா அப்பா



     ஏம்பா பிரேம் டைட்  பண்ணு

 "இன்னும் கொஞ்சம்  ஒரு எக்ஸ்போசர் கட் பண்ணு "

"ஓகே பிக்ஸ் " 

"அப்புறம்  ஆங்கர் ,கெஸ்ட் ரெண்டு பேரையும் வாய்ஸ்கொடுக்க சொல்லு"  

     அந்த பிரபல தொலைக்காட்சி நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சியோட படப்பிடிப்பு அரங்கதுக்குள்ள உள்ள இருக்குறவங்களுக்கு  பார்த்து வெளிய டெக்னிகல் ரூம்ல ஆன்லைன் எடிட்டர் கிட்ட இருந்து அடுத்தடுத்து கமெண்ட்ஸ் பறக்குது.

     அது மாலை நேர மருத்துவ நிகழ்ச்சி ஆரம்பிக்க இன்னும் ஒரு நிமிஷம் இருக்கு 

ஆன்லைன் எடிட்டர் கிட்ட இருந்து "கியூ " சவுண்ட் வர...

     தொகுப்பாளர் சரஸ்வதி பேச தொடங்குறாங்க "அனைவருக்கும் காலை வணக்கம் இன்று மருத்துவ நேரம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் பிரபல குழந்தை நல மருத்துவர் இன்ப செல்வி வணக்கம் மேடம்"

     "நேயர்களுக்கு அன்பு வணக்கம்" என்றாள்  இன்பசெல்வி.
  
 


     சரஸ்வதி "மேடம் என்னோட முதல் கேள்வி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் இன்னைக்கு அதிகமாயிட்டே இருக்குது.ஒரு குழந்தையோட மன உடல் வளர்ச்சி ஆரோக்கியமா இருக்க நாம என்ன பண்ணணும்?"

      அவ்வளோதான் அந்த டாக்டர் ஆவேசமா  பேச தொடங்குறாங்க"ஒன்னும் பண்ணகூடாதுங்க அப்பா அம்மா ரெண்டு பேர்ல ஒருத்தராவது வேலைக்கு எதுவம் போகாம வீட்லயே குழந்தைகள் கூட ஒரு அஞ்சு வயசு வரையாவது இருந்து கவனிச்சுக்கணும். அதுவே போதும்".சொல்லிமுடிக்கிறாங்க....

       அடுத்தடுத்து   கேள்விகள்  தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகம்  முழுக்க உள்ள தமிழர்கள் வாழுற எல்லா நாடுகள்ல இருந்தும்  நெறைய தொலைபேசி அழைப்புகள் வந்துட்டே இருந்தது. எல்லாத்துக்கும் டாக்டர் இன்பசெல்வியோட பதில் ரொம்ப நிறைவா இருந்ததது போல சந்தோசமா நன்றி சொல்லிட்டு வச்சாங்க...

      நேரம் போனதே தெரியல முதல் விளம்பர இடைவேளை ..

கேமரா  அட்ஜஸ்ட் பண்ணி லைட்டிங் செக் பண்ணிட்டு இருக்காங்க டெக்னீசியன்ஸ்....

     அப்ப குழந்தை நல மருத்துவர் இன்பசெல்வி  செல்போனுக்கு ஒரு கால் வருது அட்டெண்ட் பண்ணினவங்க  "ஹலோ யாருனு  கேட்கிறாங்க எதிர்பக்கம்  வணக்கம் மேடம் நாங்க உங்க பொண்ணு படிக்கிற க்ரீச்ல  இருந்து பேசுறோம் எல்லா பேரண்ட்சும்  வந்து  அவங்க அவங்க குழந்தைகளா கூட்டிட்டு போயிட்டாங்க க்ளோசிங் டைம் ஆயிடுச்சு உங்க குழந்தை  உங்களுக்காக ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கா உங்க ஹஸ்பண்ட்  நம்பர் ட்ரை பண்ணினோம் பிஸினு வருது"  எப்ப  வறீங்க மேடம்னு கேட்டாங்க 




அதுக்கு மருத்தவர்  இன்பசெல்வி "ஐயம் லிட்டில் பிசி  கால்  யு லேட்டர்னு" சொல்லிட்டு கட் பண்ணிட்டாங்க... 


இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம் :-ஆகஸ்டு மூன்றாவது வாரம் 2011

No comments: